TN Assembly: உடைந்த அதிமுக; உறுதிப்படுத்திய சட்டமன்ற சம்பவம்- விஜய்க்கு ஸ்பெஷல் வணக்கம் வைத்த எஸ்.பி.வேலுமணி!
முதலமைச்சர் விஜயைப் பார்த்து, எஸ்.பி.வேலுமணி வணக்கம் வைத்தார். அவரும் புன்சிரிப்புடன் வணக்கத்தை ஏற்று மீண்டும் வணக்கம் வைத்தார்.

தமிழ்நாட்டின் 17ஆம் சட்டப்பேரவை இன்று (மே 11) கூடிய நிலையில், தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இன்று எம்எல்ஏவாகப் பதவியேற்று வருகின்றனர்.
முதலமைச்சர் விஜய் எம்எல்ஏவாகப் பதவிப் பிரமாணம் எடுத்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலரும் அடுத்தடுத்துப் பதவி ஏற்றனர்.
பூதாகரமான அதிமுக பிரச்சினை
அதிமுகவில் உட்கட்சிப் பூசல் உச்சத்தை எட்டியுள்ளதாகத் தகவல் பரவி வந்த நிலையில், அதை அதிமுக நிர்வாகிகள் யாரும் வெளிப்படையாகப் பேசவில்லை. எனினும் இன்று சட்டப்பேரவைக்கு ஈபிஎஸ் தலைமையில் சில சட்டப்பேரவை உறுப்பினர்களும் சி.வி.சண்முகம் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்களும் தனித்தனியாக வருகை தந்தனர். இது அதிமுகவில் பிரச்சினை பூதாரமாகி இருப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
இந்த நிலையில் முன்னாள் அமைச்சரும் அதிமுக முக்கியப் பிரமுகருமான எஸ்.பி.வேலுமணி, தொண்டாமுத்தூர் எம்எல்ஏவாகப் பொறுப்பேற்க வந்தார். அப்போது, அவர் தவெக அமைச்சர்கள் அருண்ராஜ், ஆதவ் அர்ஜூனா, புஸ்ஸி ஆனந்த் ஆகியோருக்கு வணக்கம் வைத்தார். அவர்களும் புன்சிரிப்புடன் பதில் வணக்கம் செலுத்தினர்.
முதலமைச்சர் விஜயைப் பார்த்து, எஸ்.பி.வேலுமணி வணக்கம்
தொடர்ந்து முதலமைச்சர் விஜயைப் பார்த்து, எஸ்.பி.வேலுமணி வணக்கம் வைத்தார். அவரும் புன்சிரிப்புடன் வணக்கத்தை ஏற்று மீண்டும் வணக்கம் வைத்தார். எதிர்க் கட்சிகளின் பக்கமும் வணக்கம் வைத்து எஸ்.பி.வேலுமணி பதவியேற்பு உறுதிமொழியை வாசித்தார்.
சி.வி.சண்முகம் என்ன ஆனார்?
அதிமுக முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏவுமான சி.வி.சண்முகம், சட்டப்பேரவைக்கு வருகை தந்தாலும் சட்டமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்கவில்லை.
முன்னதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்க வரும்போது, பொதுவாக சபையினருக்கு வணக்கம் வைத்தார். தொடர்ந்து பதவியேற்றுக் கொண்ட ஈபிஎஸ், மீண்டும் இருக்கைக்குத் திரும்பி அமர்ந்த பின்னர் முதலமைச்சர் விஜய்க்கு வணக்கம் வைக்க, பதிலுக்கு அவரும் வணக்கம் செலுத்தியது குறிப்பிடத்தக்கது.
Before You Go
Pink Police Booth : தமிழகத்திலேயே முதன்முறை! 24 மணி நேர கண்காணிப்பு..பொன்னேரியில் போலீஸ் பிங்க் பூத்
ட்ரெண்டிங் செய்திகள்























