மேலும் அறிய

EPS vs SPV: இபிஎஸ்க்கு செக் வைத்த எஸ்பிவி டீம்.! அடுத்து நடக்கப்போவது என்ன.? காத்திருக்கும் ட்விஸ்ட்

ADMK general committee meeting : அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்சத்தை தொட்டுள்ள நிலையில், பொதுக்குழு கூட்டத்தை கூட்டும் வகையில் எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அணி பொதுக்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து வாங்கும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது.

அதிமுகவில் உட்கட்சி மோதல்

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக- அதிமுக என இருமுனை போட்டி இருந்த நிலையில், திடீர் திருப்பமாக தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிபெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது தவெக. அடுத்த இடத்தில் திமுக கூட்டணி 73 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 53 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இதனையடுத்து திமுகவின் கூட்டணி கட்சிகளின் உதவியோடு ஆட்சியை பிடித்தது தவெக. இந்த நிலையில் தேர்தலில் 3வது இடத்திற்கு தள்ளப்பட்ட அதிமுக, தவெக ஆட்சியில் பங்கு வகிக்கும் வகையில் முயற்சி மேற்கொண்டது. இதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இரண்டு பிளவாக அதிமுக பிரிந்துள்ளது. 

தவெக அரசுக்கு ஆதரவு

அந்த வகையில் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் ஒரு அணி முதலமைச்சர் விஜய்யோடு பேச்சுவார்த்தை நடத்தியதில் 6 அமைச்சர் பதவி வழங்குவது என உடன்பாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதனால் தவெகவிற்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக பொதுச்செயலாளர் உத்தரவிற்கு எதிராக 25 அதிமுக எம்எல்ஏக்கள் வாக்களித்தனர். இதனையடுத்து கொறடா உத்தரவை மீறி நம்பிக்கை வாக்கெடுப்பில் ஈடுபட்ட 25 எம்எல்ஏக்களை பதவியில் இருந்து நீக்குமாறு சபாநாயகருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் இன்னும் பதவி நீக்கம் தொடர்பாக எந்தவித முடிவும் சபாநாயகர் எடுக்காமல் உளார். 

பதவியை பறித்த இபிஎஸ்

இதனிடையே எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர், காமராஜ் உள்ளிட்ட30 பேர் மாவட்ட செயலாளர்கள் பொறுப்பில் இருந்து நீக்கிய எடப்பாடி பழனிசாமி புதிய நிர்வாகிகளை நியமித்து அறிவிப்பு வெளியிட்டார். ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள எஸ்.பி.வேலுமணி அணி சட்ட ரீதியாக எதிர்கொள்ள இருப்பதாக இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த சூழ்நிலையில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தை கூட்டி அதிமுகவின் தேர்தல் தோல்வி தொடர்பாக ஆலோசிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் எடப்பாடி பழனிசாமியோ பொதுக்குழு கூட்டத்தை கூட்ட மறுப்பு தெரிவித்து வருகிறார்.

இதனிடையை எடப்பாடி பழனிசாமிக்கு செக் வைக்கும் வகையில் அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து வாங்கும் பணியை எஸ்.பி.வேலுமணி தரப்பு தொடங்கியுள்ளது. இது தொடர்பாக  முன்னாள் அமைச்சர்  சி.விஜயபாஸ்கர் கூறும்போது, அதிமுகவை நாங்கள் உடைக்கிறோம் என்று கூறுவது முற்றிலும் தவறானது, எங்கள் உடம்பில் ஓடுவது அதிமுக ரத்தம் என தெரிவித்தவர், நாங்கள் கட்சியை உடைக்கவே இல்லையென திட்டவட்டமாக கூறினார்.

 பொதுக்குழு கூட்டம்- எஸ்பிவி தீவிரம்

மேலும் தேர்தலில் அதிமுக சந்தித்த தோல்வி குறித்தும், கட்சியின் வளர்ச்சி குறித்தும் பொதுக்குழுவில் விவாதிக்க வேண்டும் என தெரிவித்தவர், எனவே ஐந்தில் ஒரு பங்கு உறுப்பினர்கள் பொதுக்குழுவை கூட்டத்தை கூட்ட வேண்டும் என கோரினால் கட்சியின் பொதுக்குழுவைக் கட்டாயம் கூட்ட வேண்டும் என்பது  கட்சியின் அடிப்படை விதியாக உள்ளது. இந்த நிலையில் மொத்தமுள்ள பொதுக்குழு உறுப்பினர்களில் 5ல் 2 பங்குக்கு மேல் உறுப்பினர்கள், கட்சியின் பொதுக்குழுவை உடனடியாக கூட்ட வேண்டும் என்று கையெழுத்திட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதனை நாளை அல்லது நாளை மறுதினம் அதிமுக பொதுச்செயலாறர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு வழங்க இருப்பதாக கூறினார். தற்போதைய காலம் இளைஞர்களின் காலம் அதிமுகவில் அதிக அளவில் இளைஞர்கள் உள்ளனர். எனவே அவர்களுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டிய நிலை உள்ளதால் இதையெல்லாம்  பொதுக்குழுவில் விவாதிக்கப்பட வேண்டும் என  சி.விஜயபாஸ்கர் கூறினார். அதே நேரம் பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளரை மாற்றுவது தான் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் அணியின் முக்கிய திட்டமாக இருக்கும் என அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

 

Advertisement

தலைப்பு செய்திகள்

Mayor Priya: மேயர் பிரியா டிஸ்மிஸ்? ரூல்ஸ மறந்துட்டிங்களா..! கலைக்கப்படும் சென்னை மாமன்றம்? கணக்கு எங்கே?
மேயர் பிரியா டிஸ்மிஸ்? ரூல்ஸ மறந்துட்டிங்களா..! கலைக்கப்படும் சென்னை மாமன்றம்? கணக்கு எங்கே?
எம்.ஜி.ஆரின் கனவு... முதலமைச்சர் விஜய்யின் முடிவென்ன? திருச்சியை 2-வது தலைநகராக்க வலுக்கும் குரல்கள்!
எம்.ஜி.ஆரின் கனவு... முதலமைச்சர் விஜய்யின் முடிவென்ன? திருச்சியை 2-வது தலைநகராக்க வலுக்கும் குரல்கள்!
Aadhav Arjuna: எல்லாத்துக்கும் லஞ்சம் கேக்குறாங்க.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிடம் ஆதங்கத்தை கொட்டிய கல்வராயன் மக்கள்
Aadhav Arjuna: எல்லாத்துக்கும் லஞ்சம் கேக்குறாங்க.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிடம் ஆதங்கத்தை கொட்டிய கல்வராயன் மக்கள்
VCK: இடைத்தேர்தலில் களமிறங்கும் விசிக? தவெக-விடம் எந்த தொகுதியை கேட்கிறார்கள் தெரியுமா?
VCK: இடைத்தேர்தலில் களமிறங்கும் விசிக? தவெக-விடம் எந்த தொகுதியை கேட்கிறார்கள் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mayor Priya: மேயர் பிரியா டிஸ்மிஸ்? ரூல்ஸ மறந்துட்டிங்களா..! கலைக்கப்படும் சென்னை மாமன்றம்? கணக்கு எங்கே?
மேயர் பிரியா டிஸ்மிஸ்? ரூல்ஸ மறந்துட்டிங்களா..! கலைக்கப்படும் சென்னை மாமன்றம்? கணக்கு எங்கே?
TN Weather Update: 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு, சென்னை? தமிழக வானிலை நிலவரம் என்ன?
10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு, சென்னை? தமிழக வானிலை நிலவரம் என்ன?
VCK: இடைத்தேர்தலில் களமிறங்கும் விசிக? தவெக-விடம் எந்த தொகுதியை கேட்கிறார்கள் தெரியுமா?
VCK: இடைத்தேர்தலில் களமிறங்கும் விசிக? தவெக-விடம் எந்த தொகுதியை கேட்கிறார்கள் தெரியுமா?
DMK: பதவி உயர்வு விவகாரம்; 118 உதவி செயற்பொறியாளர்கள் தகுதியற்றவர்களா? திமுக கேள்வி
DMK: பதவி உயர்வு விவகாரம்; 118 உதவி செயற்பொறியாளர்கள் தகுதியற்றவர்களா? திமுக கேள்வி
Musk on India Birth Rate: இந்தியாவின் பிறப்பு விகிதம் குறைவு.! 10 ஆண்டுகளில் வரலாறு காணாத சரிவு; எலான் மஸ்க் கவலை
இந்தியாவின் பிறப்பு விகிதம் குறைவு.! 10 ஆண்டுகளில் வரலாறு காணாத சரிவு; எலான் மஸ்க் கவலை
Trump Mojtaba Meet: “ட்ரம்ப்பையெல்லாம் மொஜ்தபா கமேனி சந்திக்க மாட்டார்“; கட் அண்ட் ரைட்டாக கூறிய ஈரான்
“ட்ரம்ப்பையெல்லாம் மொஜ்தபா கமேனி சந்திக்க மாட்டார்“; கட் அண்ட் ரைட்டாக கூறிய ஈரான்
Netanyahu Vs Trump Vs Iran: ட்ரம்ப்புக்கு தலைவலி.! திட்டியும் அடங்காத நெதன்யாகு.! லெபனான் மீது தாக்குதல்; என்ன செய்யும் ஈரான்.?
ட்ரம்ப்புக்கு தலைவலி.! திட்டியும் அடங்காத நெதன்யாகு.! லெபனான் மீது தாக்குதல்; என்ன செய்யும் ஈரான்.?
CM Vijay: இனிமே லஞ்சம் வாங்குவீங்களா? நகராட்சித்துறையில் லஞ்ச அதிகாரிகள் லிஸ்ட் எடுக்கும் முதலமைச்சர் விஜய்!
CM Vijay: இனிமே லஞ்சம் வாங்குவீங்களா? நகராட்சித்துறையில் லஞ்ச அதிகாரிகள் லிஸ்ட் எடுக்கும் முதலமைச்சர் விஜய்!
Embed widget