Video: கவிதையாக வரிகளை சொல்லி அட்டாக் செய்த சசி தரூர்..புன்முறுவல் செய்த நிர்மலா சீதாராமன்
Shashi Tharoor: இந்தியர்களில் 2% பேர் வருமான வரி செலுத்துகிறார்கள், அதற்கு காரணம், வேலையின்மை உள்ளிட்டவைகள். நமது அரசு 2% பேரை நம்பி இயங்க முடியுமா என சசி தரூர் கேள்வி எழுப்பினார்.

காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், மக்களவையில் இன்று உரை நிகழ்த்துகையில் பாஜக கூட்டணி தலைமையிலான மத்திய அரசாங்கத்தின் வரிவிதிப்பு முறைகளை விமர்சித்தார். அப்போது கவிதை ரீதியாக வரிகளை குறிப்பிட்டு, மக்கள் மீது வரிச்சுமை சுமத்தப்படுகிறது என விமர்சித்திருப்பது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
அவர் குறிப்பிட்டதவாவது,
“எங்கள் பெட்ரோலுக்கு வரி,
எங்கள் சட்டைக்கு வரி,
எங்கள் காலணிக்கு வரி,
எங்கள் மொபைலுக்கு வரி,
எங்கள் அழைப்புகளுக்கு வரி,
எங்கள் சம்பளத்திற்கு வரி,
எங்கள் பயணத்திற்கு வரி,
எங்கள் மிட்டாய்களுக்கு வரி,
எங்கள் துக்கத்திற்கு வரி,
எங்கள் மகிழ்ச்சிக்கு வரி,
எங்கள் எதிர்காலத்திற்கும் ஆண்டு தோறும் வரி,” என்று வரி குறித்தான கவலைகளை கவிதை நயம் போல பேசினார்.
இதை தொடர்ந்து, ஈட்டப்படும் வரி வருவாய்கள் எவ்வாறு பயன்படுத்துப்படுகின்றன என்றும் சசி தரூர் கவிதை நயத்துடன் கேள்வியையும் மற்றும் விமர்சனங்களையும் வைத்தார்.
“ஜிஎஸ்டி, வருமான வரி படிவங்கள் குவிந்து கிடக்கின்றன,
செஸ் வரி மற்றும் கூடுதல் வரி கட்டணம் நம்மை பெருமூச்சு விட விடுகின்றன,
பள்ளங்களால் நிறைந்திருக்கும் சாலைகள், தடம் புரண்டு விழும் ரயில்கள்,
வரிப்பணம் எங்கே செல்கிறது, எல்லாம் தோல்வியா?
இதெல்லாம் வீண்தானா என்று நாங்கள் சொல்லும்போது?, நீங்கள் சிரித்துக்கொண்டே இது நாட்டின் லாபத்தில் இருக்கிறது என்று சொல்கிறீர்கள். நாங்கள் அதை சரிசெய்ய முயற்சி செய்யச் சொன்னால், உங்களை வளர்ச்சியடைந்தவர்களாக ஆக்குவோம் என்று சொல்கிறீர்கள்.
இருப்பினும், நாங்கள் தேசபக்தியுள்ள பணம் செலுத்துகிறோம், ஒப்பிட முடியாத அளவுக்கு நாம் நேசிக்கும் தேசத்திற்கு பிரகாசமான மற்றும் நியாயமான எதிர்காலத்தை உருவாக்குவதில் எங்கள் பணம் ஒரு சிறிய பங்கை வகிக்கும் என்று நம்புகிறோம் என தெரிவித்தார்.
அப்போது, மக்களவையில் நிதி மசோதா மீதான விவாதத்தைத் தொடங்கி வைத்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கேள்வியை எழுப்பினார் காங்கிரஸ் எம்.பி சசிதரூர், "இந்தியர்களில் 2% பேர் மட்டுமே வருமான வரி செலுத்துகிறார்கள். அதற்கு காரணம், வேலையின்மை, வருமான சமத்துவமின்மை, வறுமை, பணவீக்கம். நமது அரசாங்கம் மக்களில் 2% பேரை மட்டுமே தொடர்ந்து தாங்கி இயங்க முடியுமா.
"பொருளாதாரம் நத்தை வேகத்தில் முன்னேறிச் செல்லும் அதே வேளையில், வருமான பகிர்வானது, எப்போதும் போலவே சீரற்றதாக உள்ளது. - அவர்களின் பங்கு 1991 இல் டாப் 1% பேர்களின் சொத்து மதிப்பானது 2023 10% ஆக அதிகரித்துள்ளது.
நமது மக்கள்தொகையில் கீழ்மட்டத்தில் இருக்கும் 50% பேர் - தேசிய வருமானத்தில் அவர்களின் பங்கு 20% இலிருந்து 13% ஆகக் குறைந்துள்ளது. வளர்ச்சியானது, அனைவருக்கும் ஒரேமாதிரியாக இல்லை எனவும் தெரிவித்தார்.