டாஸ்மாக் டெண்டர் விவகாரத்தில் எந்தவித முறை கேடும் நடக்கவில்லை என்று அமைச்சர்ன் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்


டாஸ்மாக் அலுவலகத்தில் சோதனை: 


டாஸ்மாக்கில் டெண்டரில் ஊழல் நடந்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து அமலாக்கத்துறையினர் டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் 20-க்கும்  மேற்ப்பட இடங்களில் சோதனையானது நடைப்பெற்றது. இந்த சோதனையில் முடிவில் டாஸ்மாக்கில் 1000 கோடி ரூபாய் வரை ஊழல் நடந்ததாக அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அமலாக்கத்துறை அறிக்கை: 


திட்டமிட்டு செலவுகளை அதிகப்படுத்தியும் விற்பனை புள்ளிவிவரங்களை உயர்த்தியும் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.


டாஸ்மாக்கில் மது பாட்டில்களை கொண்டு செல்வதற்கான போக்குவரத்து டெண்டர் மதிப்பு ஆண்டுக்கு 100 கோடி ரூபாய். இதில் முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. அதேபோல, பார் லைசென்ஸ் டெண்டர்களிலும் முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன.


ஜி.எஸ்.டி., பான் கார்டு இல்லாத விண்ணப்பதாரர்களுக்கும் டெண்டர் தரப்பட்டுள்ளது அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில் அம்பலமாகியுள்ளது. எஸ்.என்.ஜே., கல்ஸ், அக்கார்டு, சைப்ல், ஷிவா டிஸ்டிலரி ஆகிய மது உற்பத்தி ஆலைகள், தேவி பாட்டில்ஸ் கிறிஸ்டல் பாட்டில்ஸ். ஜி.எஸ்.ஆர். ஹோல்டிங் ஆகிய பாட்டிலிங் நிறுவனங்களிலும் முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இதன் மூலம், எந்த அரசு கணக்கிலும் சேராமல் 1000 கோடி ரூபாய் அபகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


செந்தில் பாலாஜி பேட்டி: 


இது குறித்து எதிர்க்கட்சியான இன்று சட்டப்பேரவையில் கேள்விகள் எழுப்பியது, ஆனால் சபாநாயகர் அப்பாவு அதற்கு அனுமதிக்காத நிலையில் அதிமுக மற்றும் பாஜகவினர் இன்று வெளிநடப்பு செய்தனர்.


இந்த நிலையில் பட்ஜெட்டுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு “டாஸ்மாக் பணி நியமனம், போக்குவரத்து தொடர்பான ஒப்பந்தங்களில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை. மத்திய அரசு அமலாக்கத்துறையை ஏவிவிட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் சோதனை என்கிறார்கள் ஆனால் எந்த முதல் தகவல் அறிக்கை என்பதை சொல்லவே இல்லை. அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டுக்கு எந்த முகாந்திரமும் இல்லை. 


ரூ.1,000 கோடி ஊழல் என ஒருவர் அறிக்கை விடுகிறார். அதன்பின் அமலாக்கத் துறையும் அதையே சொல்கிறது. மற்றொருவர் ரூ.40,000 கோடி முறைகேடு என்று சொல்கிறார். பொய் குற்றச்சாட்டுகளை சுமத்த அமலாக்கத் துறையை மத்திய அரசு ஏவுகிறது. 


"மதுபானக் கொள்முதலில் யாருக்கும் சலுகைகள் காட்டப்படவில்லை. புதிய ஆலைகளுக்கும் அனுமதி கொடுக்கவில்லை. புதிய கடைகளும் திறக்கப்படவில்லை ஏற்கனவே இருந்த ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட செயல்முறைதான் தற்போது செயல்படுத்தப்படுகிறது" என்றார்.