மேலும் அறிய

Senthilbalaji : ’செந்தில்பாலாஜி – எஸ்.பி.வேலுமணி ரகசிய சந்திப்பு’ பேசப்பட்டது என்ன..?

’அதிகாரம் எங்கே இருக்கிறதோ அந்த பக்கத்தை நோக்கி நகரும் பழக்கம் கொண்டவரான செந்தில்பாலாஜி, எஸ்.பி.வேலுமணியை சந்தித்து, ரகசியமாக பேசியது என்ன என்ற விவாதம் திமுகவிலேயே தொடங்கியிருக்கிறது,

சட்டமன்ற தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக தோற்று, அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டு, தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்த நிலையில், தமிழக அரசியலில் பல்வேறு அதிரடி திருப்பங்கள், மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், அதிமுகவில் பிளவு ஏற்பட்டு எஸ்.பி.வேலுமணி, சிவி.சண்முகம் தலைமையில் ஒரு அணியாகவும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியாகவும் பிரிந்து நிற்கத் தொடங்கியிருக்கிறார்கள். இந்நிலையில், சிவி சண்முகம் ஆதரவு எம்.எல்.ஏக்கள் நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய்க்கு ஆதரவாக வாக்களிக்க திட்டமிட்டு, அமைச்சரவையில் இடம்பிடிக்க முயற்சித்து வரும் நிலையில், இன்னொரு ரகசிய சந்திப்பு யாரும் எதிர்பார்க்காத வகையில் நடந்து முடிந்துள்ளது.

எஸ்.பி.வேலுமணியை சந்தித்த செந்தில்பாலாஜி

முன்னாள் அமைச்சரும் கோவை தெற்கு தொகுதி திமுக எம்.எல்.ஏவுமான செந்தில்பாலாஜி, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை சட்டப்பேரவையில் தனி அறையில் சந்தித்து கிட்டத்தட்ட அரை மணி நேரத்திற்கு மேலாக பேசியிருக்கிறார். ஆனால், அவர்கள் இருவரும் என்ன பேசினார்கள் என்பதும் பரம ரகசியமாகவே வைக்கப்பட்டிருக்கிறது. கோவை மாவட்டத்தில் அதிமுகவின் சாம்ராஜ்ஜியத்தையும் வேலுமணியின் கட்டுப்பாட்டையும் உடைக்க திமுகவால் களமிறக்கப்பட்டவர்தான் செந்தில்பாலாஜி. இந்நிலையில், இருவரும் ஒன்றாக சந்தித்து பேசியது திமுக – அதிமுக வட்டாரத்திலேயே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

திமுக ஆட்சி அமையாத அதிருப்தியில் செந்தில்பாலாஜி

அதிமுகவில் அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி, ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் சசிகலா ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தார். பின்னர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆன பிறகு, டிடிவி தினகரன் அணியில் இருந்து விலகி திமுகவில் ஐக்கியமானார். 2021 தேர்தலில் திமுக வெற்றி பெற்றதும் பவர்புல் அமைச்சராக செந்தில்பாலாஜி மாறினார். இருப்பினும், அவரை அமலாக்கத்துறை கைது செய்து சிறையில் அடைத்த பின்னர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பிறகும் ஜாமினில் வெளியே வந்த செந்தில்பாலாஜிக்கு அமைச்சர் பொறுப்பு கொடுத்து அழகு பார்த்தது திமுக. ஆனால், அது மிகப்பெரிய சட்டச் சிக்கலை ஏற்படுத்தும் என்பதால் மீண்டும் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார் செந்தில்பாலாஜி. 2026 தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்னர் மீண்டும் அமைச்சராக பதவியேற்பதற்கான முனைப்பில் இருந்தவருக்கு அதிர்ச்சியே காத்திருந்தது. ஆளும் திமுக தோற்று, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிஅமைத்தது. இந்நிலையில், அதிகார பதவியான அமைச்சர் பொறுப்பில் இந்த முறை பங்கேற்க முடியவில்லை என்ற அதிருப்தியில் செந்தில்பாலாஜி இருந்ததாக கூறப்படுகிறது.

த.வெ.க ஆதரவு நிலைப்பாட்டில் செ.பாலாஜி ?

அப்படியான சூழலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவளிக்க முடிவு எடுத்திருக்கும் எஸ்.பி.வேலுமணியை சந்தித்து செந்தில்பாலாஜி பேசியிருப்பது பல்வேறு கேள்விகளை அரசியல் வட்டாரத்தில் ஏற்படுத்தியிருக்கிறது. எங்கே அதிகாரம் இருக்கிறதோ அந்த பக்கத்தை நோக்கி நகரும் மனநிலை கொண்டவராக செந்தில்பாலாஜி இருக்கும் நிலையில், விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தை நோக்கி அவர் நகர்கிறாரா? அதற்காகதான் எஸ்.பி.வேலுமணியை சந்தித்தாரா என்ற வினாக்கள் எழுந்துள்ளன.

Advertisement

தலைப்பு செய்திகள்

CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் வைத்த டிமாண்ட் என்னென்ன? இதுதான் லிஸ்ட்!
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் வைத்த டிமாண்ட் என்னென்ன? இதுதான் லிஸ்ட்!
CM Vijay: நிலம் நாங்க தர்றோம்... கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுங்க - பிரதமரிடம் முதலமைச்சர் விஜய் வேண்டுகோள்
CM Vijay: நிலம் நாங்க தர்றோம்... கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுங்க - பிரதமரிடம் முதலமைச்சர் விஜய் வேண்டுகோள்
CM Vijay: பிரதமரின் நிதி ஆயோக் கூட்டத்தில் நீட் தேர்வை எதிர்த்த முதலமைச்சர் விஜய் - என்ன பேசினார்?
CM Vijay: பிரதமரின் நிதி ஆயோக் கூட்டத்தில் நீட் தேர்வை எதிர்த்த முதலமைச்சர் விஜய் - என்ன பேசினார்?
Pa Ranjith: ஆணவப் படுகொலை தடுப்பு தனிச்சட்டத்தை உடனே இயற்றுங்கள்.. விஜய்க்கு பா.ரஞ்சித் வேண்டுகோள்
Pa Ranjith: ஆணவப் படுகொலை தடுப்பு தனிச்சட்டத்தை உடனே இயற்றுங்கள்.. விஜய்க்கு பா.ரஞ்சித் வேண்டுகோள்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

TVK MLA Govt School | மகளுக்கு அரசுப் பள்ளியில் அட்மிஷன் ஆச்சர்யப்படுத்திய தவெக MLA வைரல் வீடியோ!
Delhi Tamilnadu House fire | விஜய் கிளம்பிய சில நிமிடங்களில்! தமிழ்நாடு இல்லத்தில் தீ விபத்து
CM Vijay Report |
Raghava Lawrence | TARGET விஜய்!TEAM அண்ணாமலை?லாரன்ஸ் மெகா ட்விஸ்ட்
Tindivanam Murder: தீர்த்துக்கட்ட சொன்ன தாய்..திட்டம் போட்டு முடித்த மகன்!குப்பை கொட்டியதால் கொடூரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடி கூட்டத்தில் கெத்து காட்டிய நம்ம சிஎம்... நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் பேச்சால் அதிர்ந்த டெல்லி
பிரதமர் மோடி கூட்டத்தில் கெத்து காட்டிய நம்ம சிஎம்... நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் பேச்சால் அதிர்ந்த டெல்லி
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் வைத்த டிமாண்ட் என்னென்ன? இதுதான் லிஸ்ட்!
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் வைத்த டிமாண்ட் என்னென்ன? இதுதான் லிஸ்ட்!
CM Vijay: நிலம் நாங்க தர்றோம்... கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுங்க - பிரதமரிடம் முதலமைச்சர் விஜய் வேண்டுகோள்
CM Vijay: நிலம் நாங்க தர்றோம்... கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுங்க - பிரதமரிடம் முதலமைச்சர் விஜய் வேண்டுகோள்
Pa Ranjith: ஆணவப் படுகொலை தடுப்பு தனிச்சட்டத்தை உடனே இயற்றுங்கள்.. விஜய்க்கு பா.ரஞ்சித் வேண்டுகோள்
Pa Ranjith: ஆணவப் படுகொலை தடுப்பு தனிச்சட்டத்தை உடனே இயற்றுங்கள்.. விஜய்க்கு பா.ரஞ்சித் வேண்டுகோள்
JEE Advanced: ஜேஇஇ அட்வான்ஸ்டு முறைகேடு புகார்: ஐஐடி ரூர்க்கி ஆய்வில் வெளியான உண்மை!
JEE Advanced: ஜேஇஇ அட்வான்ஸ்டு முறைகேடு புகார்: ஐஐடி ரூர்க்கி ஆய்வில் வெளியான உண்மை!
சொந்த ஊரிலேயே உலகத்தரம் வாய்ந்த  எஃகு கட்டமைப்பு: தஞ்சாவூரை ஐடி மையமாக மாற்றும் ‘ஹாம்லி குழுமம்’!
சொந்த ஊரிலேயே உலகத்தரம் வாய்ந்த  எஃகு கட்டமைப்பு: தஞ்சாவூரை ஐடி மையமாக மாற்றும் ‘ஹாம்லி குழுமம்’!
Upcoming Electric Cars India 2026:இந்தியாவை அதிரவைக்க வரும் டாப் EV கார்கள் லிஸ்ட்; எப்போது வருகிறது? விலை என்ன? - முழு விவரம் இதோ
இந்தியாவை அதிரவைக்க வரும் டாப் EV கார்கள் லிஸ்ட்; எப்போது வருகிறது? விலை என்ன? - முழு விவரம் இதோ
செம ஸ்மூத்... சிங்கிள் சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்! ஜாலியா ரைட் போக Joy e-bike Mihos இ ஸ்கூட்டர்!
செம ஸ்மூத்... சிங்கிள் சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்! ஜாலியா ரைட் போக Joy e-bike Mihos இ ஸ்கூட்டர்!
Embed widget