மேலும் அறிய
செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது சாதாரண இயல்பான ஒன்று தான் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பேட்டி !
வடமாநிலங்களில் தேர்தல் ஆடுகளம், இங்கு பண்படுத்தப்பட்ட கலாச்சார ஆடுகளம், இங்கு பிரிவினை வாதிகளுக்கும், பிரித்தாளுபவர்களுக்கும் இடமில்லை என்பதை தமிழக தேர்தல் நிரூபிக்கும். - வீரபாண்டியன் பேட்டி.

வீரபாண்டியன் பேட்டி.
Source : whatsapp
செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது சாதாரண இயல்பான ஒன்று., அவர் அவ்வாறு செல்வதால் விஜய் வழுபெற்றுவிடுவார், அவர் வெற்றி பெற்றுவிடுவார் என்ற பின்பம் கட்டமைக்கப்படுவதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிராகரிக்கிறது.
தா.பாண்டியன் நினைவிடத்தில் அஞ்சலி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கணூர் டேவிட் பண்ணையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக பொறுப்பேற்ற பின் தா.பாண்டியன் நினைவிடத்தில் மாநில செயலாளர் வீரபாண்டியன் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன். மாநில செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின் தென்மாவட்டங்களில் அமைப்பு ரீதியான சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் போது, தா.பா. நினைவிடத்தில் செவ்வணக்கம் செலுத்தும் வண்ணமாகவும், அவரது நினைவிடத்தில் சில மணி நேரம் தங்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது., அனைவரும் ஒரு முகமாக தா.பா. அவர்களை நினைவு கூர்ந்து, செவ்வணக்கம் செலுத்துகிறோம்.
அரசியல் கட்சிகள் கேட்டுக் கொண்டதையும் கடந்துவிட்டார்கள்.
எஸ்ஐஆர் தடுமாறுகிறது, தமிழக முதல்வர் கேட்டுக் கொண்ட பின்னரும், தமிழக சட்டமன்றம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற பின்பும், எதிர்கட்சிகள் அனைத்தும் கேட்டுக் கொண்ட பின்பும் அது தமிழ் மக்களின் உணர்வு அதற்கு தேர்தல் ஆணையம் மதிப்பழிக்கவில்லை, தேர்தல் ஆணையம் ஒன்றிய அரசின் கைக்குள் அடங்கி விட்டது, இது நாடாளுமன்ற ஜனநாயகத்தை, தேர்தல் ஜனநாயகத்தை கழுத்தை நெறிப்பதாகும்., எனவே தேர்தல் ஆணையம் ஜனநாயகமாக நடந்து கொள்ளவில்லை., குறிப்பாக முதல்வரின் வேண்டுகோளையாவது ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும்., அந்த வேண்டுகோளை கடந்து செல்கிறது, எடுத்த எடுப்பிலேயே எஸ்ஐஆர் தோற்றுவிட்டது., அதை மீறி ஜனநாயகத்தின் மீது ஒரு அழுத்தம் செய்கிறார்கள், இந்த நோக்கம் வெற்றி பெறாது. எஸ்ஐஆர் க்கு எதிராக பணிச்சுமை என போராடும், அரசு ஊழியர்களின் போராட்டங்களை ஆதரிக்கிறோம், அவசர கதியில் இந்த எஸ்ஐஆர் நடைபெற கூடாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில குழு கேட்டுக் கொண்டது., முதல்வர் கேட்டுக் கொண்டதையும் கடந்துவிட்டார்கள், அரசியல் கட்சிகள் கேட்டுக் கொண்டதையும் கடந்துவிட்டார்கள்.
பிரதமருக்கு வாழ்த்து
இலங்கையில் புயலால் உயிரிழந்த மக்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அஞ்சலி செய்கிறோம்., ஒன்றிய அரசு ஒரு நல்ல பணியை பிரதமர் நல்ல பணியை செய்திருக்கிறார்., எல்லா காலங்களிலும் ஆளும் கட்சியை எதிர்ப்பவர்கள் அல்ல இந்திய கம்யூனிஸ்ட் கட்சி., சிறப்பென்றால் ஆதரிப்போம்., அருகாமை நாடு, அண்டை நாடு இயற்கை சீற்றத்தில் தவிக்கும் போது நமது இராணுவம், மீட்பு படைகள் அங்கு அனுப்பப்பட்டுள்ளது அதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிக்கிறது., அருகாமையில் இருக்கிற நாடுகளுக்கு ஒரு பேரிடர் ஏற்படும் போது இந்தியா போன்ற பெரிய நாடுகள் உதவுவது நல்லது. ஒன்றிய அரசு விண்வெளி ஆய்வு மையத்தை தனியாருக்கு விடும் நோக்கில் அவர் பேசி வருவது ஏற்புடையது அல்ல, இந்திய விண்வெளி ஆய்வு மையம் உலகத்தில் தலைசிறந்து விளங்குகிறது., அமெரிக்காவையே பின்னுக்கு தள்ளும் வகையில் நமது விண்வெளி ஆய்வு உயர்ந்து வருகிறது, இது அரசாங்கத்திடம் இருப்பது தான் சரி, தனியாருக்கு வழங்குவதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எதிர்க்கிறது.
கோவை, மதுரை மெட்ரோ திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்
கோவை, மதுரை மெட்ரோ திட்டத்தை நிறுத்தி வைத்திருப்பது பழிவாங்கும் போக்கு, நேர் எதிர் கருத்துடைய ஆட்சிகள் மீது அடக்குமுறையை திணிப்பதாகும்., அரசுகள் உரிமை மீது நடத்தப்பட்ட தாக்குதலாகும்., இந்தியாவின் கூட்டை சிதைப்பதாகும்., மெட்ரோ ரயில் திட்டம் சம்மந்தமாக நாடாளுமன்றத்தில் பேசும் போது நாட்டின் வளர்ச்சிக்கு எந்த விதமான பாரபட்சமும் காட்டப்படாது என்று கொடுத்த வாக்குறுதியை மீறுவதா, எனவே உடனடியாக கோவை, மதுரை மெட்ரோ திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்கிற தமிழ்நாடு முதல்வரின் வேண்டுகோள், சட்டமன்ற தீர்மானத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வழிமொழிகிறது.
திமுக தலைமையில் இருக்கும் கூட்டணியை வெற்றி பெற முடியாது.
செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது சாதாரண இயல்பான ஒன்று., அவர் அவ்வாறு செல்வதால் விஜய் வழுபெற்றுவிடுவார், அவர் வெற்றி பெற்றுவிடுவார் என்ற பின்பம் கட்டமைக்கப்படுவதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிராகரிக்கிறது. விஜய் தனித்து வந்தாலும் சரி, செங்கோட்டையன் போன்ற ஆயிரம் பேரை அழைத்து வந்தாலும் சரி, இவர்கள் எல்லோரும் சேர்ந்து பிஜேபியுடன் இணைந்து வந்தாலும், அதிமுக பிஜேபியுடன் இணைந்து வந்தாலும் சரி, இருக்கிற கட்சிகள் ஒன்றாக இணைந்து வந்தாலும் திமுக தலைமையில் இருக்கும் கூட்டணியை வெற்றி பெற முடியாது.
பிளவு கருத்துக்களை ஏற்காது
திமுக கூட்டணி தான் வெற்றி பெறும், காரணம் கூட்டணி வழுவிற்காக கூறவில்லை தமிழ் மக்களின் பண்பாடு, கலாச்சாரத்தின் மீது நம்பிக்கை வைத்து கூறுகிறோம்., தமிழ் மக்களுக்கென்று பண்பாடு இருக்கிறது, கலாச்சாரம் இருக்கிறது., பிளவு கருத்துக்களை ஏற்காது, பிரிவினை கருத்துக்களை ஏற்காது., பிஜேபியை சுமந்து வருபவர்கள் யாராக இருந்தாலும் அது பிளவு கருத்து தான், பிரிவினை கருத்து தான். வடமாநிலங்களில் தேர்தல் ஆடுகளம், இங்கு பண்படுத்தப்பட்ட கலாச்சார ஆடுகளம், இங்கு பிரிவினை வாதிகளுக்கும், பிரித்தாளுபவர்களுக்கும் இடமில்லை என்பதை தமிழக தேர்தல் நிரூபிக்கும். 6 முனை போட்டியாக இருந்தாலும் சரி, 4 முனை போட்டியாக இருந்தாலும் சரி, திமுக தலைமையிலான கூட்டணி தான் வெற்றி பெறும்., என பேட்டியளித்தார்.,
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
தமிழ்நாடு
கிரிக்கெட்
Advertisement
Advertisement





















