DMK: "ஸ்டாலின் மட்டுமில்லை, திமுக தோற்கவும் சேகர் பாபு காரணம்" அறிக்கையால் அதிர்ந்த அறிவாலயம்
DMK Sekar Babu: சட்டமன்ற தேர்தலில் திமுக கண்ட தோல்விக்கு இந்து சமய அறநிலைய அமைச்சராக இருந்த சேகர்பாபுவின் செயல்பாடுகளும் முக்கிய காரணம் என, கள ஆய்வுக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.

DMK Sekar Babu: சட்டமன்ற தேர்தலில் கண்ட தோல்விக்கான காரணங்களை கண்டறிய, 36 பேர் அடங்கிய கள ஆய்வுக் குழுவை திமுக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
ஆய்வுக் குழுவின் அறிக்கையால் அதிர்ந்த அறிவாலயம்:
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் முன்னெப்பேதும் இல்லாதபடி, மீண்டும் வென்று தொடர்ந்து ஆட்சி அமைப்போம் என திமுக சூளுரைத்து வந்தது. ஆனால், எதிர்பாராத விதமாக அதிமுக அல்ல, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திடம் தோல்வியுற்று ஆட்சி அதிகாரத்தை இழந்தது. குறிப்பாக முதலமைச்சர் ஸ்டாலினே, கொளத்தூரில் தோல்வியுற்றது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. வெறும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக உருவான ஒரு கட்சியிடம் தோல்வியுற்றதை ஏற்க முடியாமல் இன்னும் அந்த கட்சியினர் வேதனை தெரிவித்து வருகின்றனர். இதைடுத்து தோல்விக்கான காரணங்களை கண்டறிந்து சமர்பிக்க 36 பேர் அடங்கிய குழுவை திமுக தலைமை அமைத்தது. அந்த குழு சமர்பித்துள்ள அறிக்கையில், ஸ்டாலின் மட்டுமின்றி திமுகவின் தோல்விக்கும் சேகர்பாபுவின் செயல்பாடுகள் முக்கிய காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளடாம்.
அதிருப்தியில் திமுகவின் உடன்பிறப்புகள்
இதுதொடர்பான தகவல்களின்படி, ஒவ்வொரு சட்டமன்றத்திற்கும், மாவட்டத்திற்கும் தோல்விக்கான காரணங்கள் வேறுபடுகின்றனவாம். பொதுவாக சட்டமன்ற தேர்தல்களில் வாய்ப்பு கிடைக்கப்பெறாதவர்களுக்கு, ஆவின் மற்றும் கூட்டுறவு சங்கம், உள்ளாட்சி தேர்தலில் முக்கியத்துவம் கொடுத்து கட்சி குஷிப்படுத்தும். ஆனால், கடந்த ஆட்சியின் போது திமுக அதனை செய்யாதது சொந்த கட்சி நிர்வாகிகளையே அதிருப்தி அடைய செய்துள்ளதாம். கட்சி நிர்வாகிகளுக்கு பல இடங்களில் திமுக அரசு உறுதுணையாக இல்லாமல் இருந்ததும் பெரிய பிரச்னையாக மாறியுள்ளதாம். பெரும் ஆதரவை பெற்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதியான, மகளிர் உரிமைத்தொகை சொந்த கட்சி நிர்வாகிகள் பலருக்கே கிடைக்கவில்லையாம். அதனை பெற்று தர திமுகவினரே கடும் சிரமத்திற்கு ஆளானதாகவும் வேதனை தெரிவித்துள்ளனராம். இதுதொடர்பான புகார்களை மாவட்ட தலைமை உள்வாங்க தவறிவிட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.
விஜய் செல்வாக்கை உணராத திமுக
விஜயின் வருகை தாக்கத்தை ஏற்படுத்துகிறது, பெண்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது என்பதை களத்தில் இருந்து அறிந்து சொன்னாலும், அதனை கட்சி தலைமைக்கு கொண்டு செல்லாமல் மாவட்ட நிர்வாகம் தவிர்த்துவிட்டது.இளைஞர்களை முறையாக பயன்படுத்திக் கொள்ள தவறிவிட்டது. மக்களின் அடிப்படை பிரச்னைகள் மற்றும் தேவைகளை நிறைவேற்ற உள்ளாட்சி பிரதிநிதிகள் முன்வைத்த கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளனராம்.
சேகர்பாபுவால் கடுப்பான உடன்பிறப்புகள்:
அரசில் உள்ள தற்காலிக நியமன பொறுப்புகளில் திமுகவினருக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாம். குறிப்பாக இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களில் வழங்கப்படும் அறங்காவலர்கள் நியமனம் போன்றவற்றில் உண்மையான திமுகவினர் புறக்கணிக்கப்பட்டதும், அதிமுகவில் இருந்து விலகி வந்து இணைந்தவர்களுக்கு முக்கியத்துவம் அளித்ததும் தேர்தல் தோல்விக்கு காரணம் என கூறப்பட்டுள்ளதாம். அதோடு, அமைச்சர் சேகர் பாபுவிற்கு நெருக்கமானவர்களுக்கும், அவரை அணுகியவர்களுக்கும் மட்டுமே மிகப்பெரிய கோயில்களுக்கான நியமன பதவிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் எழுத்துப்பூர்வமாக உடன்பிறப்புகள் குற்றம்சாட்டியுள்ளனராம். இதேபோன்று உட்கட்சி பூசல்கள், அதிமுகவுடன் நெருங்கிய நர்பு, மாவட்ட நிர்வாகத்தின் செயலற்ற திறன் என ஏராளமான குற்றச்சாட்டுகள் அடுக்கப்பட்டுள்ளனவாம்.
சேகர்பாபுவால் கடுப்பாகியுள்ள அறிவாலயம்?
ஏற்கனவே, ஸ்டாலினின் தோல்விக்கு கொளத்தூர் தொகுதி பொறுப்பாளரான சேகர் பாபு தான் காரணம் என பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் பல இடங்களில் கட்சியின் தோல்வி கண்டதற்கும் அமைச்சராக சேகர்பாபுவின் செயல்பாடும், உண்மையான திமுகவினருக்கு அவர் முக்கியத்துவம் அளிக்காததும் தான் காரணம் என புகார்கள் எழுந்துள்ளன. இவரும் அதிமுகவில் இருந்து வந்து திமுகவில் முக்கிய அதிகாரமாக மாறியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் கட்சிக்குள் அவரது அதிகாரபலத்தை காலப்போக்கில் குறைக்க திமுக பரிசீலித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
Before You Go
"வாடா போலீஸ் ஸ்டேஷனுக்கு" டெலிவரி ஊழியர் ஆபாச செயல் மஃப்டி லேடி போலீஸ் அதிரடி!
ட்ரெண்டிங் செய்திகள்























