மேலும் அறிய

Eps vs Sp Velumani : எப்பவும் எங்கள் பொதுச்செயலாளர் இபிஎஸ் தான்.! சரண்டர் ஆன எஸ்.பி.வேலுமணி டீம்- அடுத்தது என்ன.?

அதிமுகவில் உட்கட்சி மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், கருத்து வேறுபாடுகளை களைய பொதுக்குழு கூட்டத்தை கூட்ட வேண்டும் என எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தியுள்ளார்.

அதிமுகவில் உட்கட்சி மோதல்

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்ட நிலையில், உட்கட்சி மோதல் தலைதூக்கியது. இதனால் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் ஒரு அணியும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும் மோதிக்கொண்டது. ஒரு கட்டத்தில் தவெக அமைச்சரவையில் இடம் பிடிக்கும் வகையில் அதிமுக எம்எல்ஏக்கள் முயற்சி செய்தார்கள். ஆனால் எடப்பாடி பழனிசாமி கடும் எதிர்ப்பை பதிவு செய்தார். தவெக தங்கள் எம்எல்ஏக்களை இழுத்து குதிரை பேரத்தில் ஈடுபடுவதாகவும் விமர்சனம் செய்திருந்தார். 

அடுத்தாக அதிமுகவின் மூத்த நிர்வாகிகளாக இருந்த எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர், காமராஜ் உள்ளிட்ட 30 மாவட்ட செயலாளர்களை கட்சி பதவியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இதுமட்டுமில்லாமல் புதிய மாவட்ட செயலாளர்களையும் நியமனம் செய்தார். இந்த நிலையில் அதிமுகவில் தொடர்ந்து குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், அதிமுக எம்எல்ஏக்களை அமைச்சரவையில் நியமிக்க முதலமைச்சர் விஜய் மறுப்பு தெரிவித்தார். 

அதிமுகவில் பிளவு இல்லை- கருத்து வேறுபாடு தான்

இந்த நிலையில், எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுகவில் எந்தவித பிளவும் இல்லை. எங்களுக்குள் இருப்பது கருத்து வேறுபாடு தான். கருத்து வேறுபாட்டை தீர்க்க வேண்டும் என்பதற்காகத்தான் பொதுக்குழு கூட்டத்தை கூட்ட வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம்.  இப்பவும், எப்பவும் அண்ணன் எடப்பாடி பழனிசாமி தான் பொதுச்செயலாளர், எனவே தேர்தல் தோல்வியை ஆய்வு செய்ய வேண்டும்.

ஆனால் பதவிக்காக தவெகவை ஆதரிப்பதாக தொடர்ந்து தவறான தகவலை பரப்புகிறார்கள். இதெல்லாம் தனியாக ஒரு பெரிய டீம் பரப்பு வருகிறது.  அமைச்சரவையில் இடம் தொடர்பாக ஆளுங்கட்சி தரப்பு பதில் அளித்துவிட்டார்கள். ஆனால் இன்றும் அமைச்சரவையில் இடம்பிடிப்பதாக நாங்கள் முயல்வதாக எழுதுகிறார்கள். ரொம்ப வருத்தமாக உள்ளது. தவறான எண்ணத்தை எடுத்து மக்களிடம் குழப்பம் ஏற்படுத்துகிறார்கள்.

பொதுக்குழு கூட்ட வேண்டும்

நாங்கள் தவெகவிற்கு ஆதரவு கொடுப்பது மட்டுமல்ல, பெரிய அஜெண்டா கொடுத்தோம். கடந்த திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட அதிமுக திட்டங்களை மீண்டும் தொடர வேண்டும் என பட்டியல் கொடுக்கப்பட்டது. பதவிக்காக நாங்கள் எதுவும் வரவில்லை. ஆனாலும் தொடர்ந்து தொண்டர்கள் மத்தியில் பரப்புகிறார்கள். இது முற்றிலும் தவறானது. தவெகவிற்கு மக்கள் செல்வாக்கு இருப்பதால் ஆதரவு கொடுத்தோம். தவெகவும் திமுகவை எதிர்க்கிறது. நாங்களும் எதிர்க்கிறோம் என கூறினார். எங்களை பொறுத்தவரை பொதுக்குழு கூட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்தோம்.

மீண்டும் அம்மா ஆட்சி கண்டிப்பாக தமிழகத்தில் அமைய வேண்டும். அதிமுக எங்கள் உயிர், பல தலைமுறைகளாக கட்சியில் உள்ளோம். எனவே அதிமுகவை உடைக்கவோ பிரிக்கவோ இல்லை. தேர்தல் தோல்வி குறித்து ஆராய வேண்டும். மீண்டும் அம்மா ஆட்சி கொண்டுவர பாடுபடுவோம் என எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார். 

Advertisement

தலைப்பு செய்திகள்

TN Assembly: பெஸ்ட் எதிர்க்கட்சினா சும்மாவா..! “வாயை திறங்க CM, கதறல் கேட்குதா” - அசெம்ப்ளி வளாகத்தில் திமுக
பெஸ்ட் எதிர்க்கட்சினா சும்மாவா..! “வாயை திறங்க CM, கதறல் கேட்குதா” - அசெம்ப்ளி வளாகத்தில் திமுக
DMK TVK: ”கோபாலபுரத்து கொள்ளைக்காரர்களா நாங்கள்? மூக்குடைந்தும் திருந்தாத திமுக” - இறங்கி அடிக்கும் TVK
”கோபாலபுரத்து கொள்ளைக்காரர்களா நாங்கள்? மூக்குடைந்தும் திருந்தாத திமுக” - இறங்கி அடிக்கும் TVK
TN Assembly: தவெக அரசின் முதல் கூட்டத்தொடர் - சட்டசபையில் இன்று ஆளுநர் உரை - அதகளமா? அதிரடியா?
TN Assembly: தவெக அரசின் முதல் கூட்டத்தொடர் - சட்டசபையில் இன்று ஆளுநர் உரை - அதகளமா? அதிரடியா?
தவெக கோட்டை ஆகிறது புதுக்கோட்டை? விஜய்யை பார்க்க நேரம் கேட்ட விஜயபாஸ்கர்!
தவெக கோட்டை ஆகிறது புதுக்கோட்டை? விஜய்யை பார்க்க நேரம் கேட்ட விஜயபாஸ்கர்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ
சிறுமிக்கு தாலி கட்டிய இளைஞர் சிங்கப்பெண் படையை கண்டு ஓட்டம்! POCSO-வில் கைது
சி.விஜயபாஸ்கர் ராஜினாமா அடுத்து திமுக-வா? தவெக-வா? எடப்பாடி பழனிசாமி ஷாக்!
CM Vijay Vs JCD Prabhakar: “5 திரியையும் நானே ஏத்துறேன் சபாநாயகரை மதிக்காத விஜய்” விளாசிய அதிமுக

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தட்டித்தூக்கும் தவெக; தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய பேரவை- அரசு உரையை அப்படியே வாசித்த ஆளுநர்!
தட்டித்தூக்கும் தவெக; தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய பேரவை- அரசு உரையை அப்படியே வாசித்த ஆளுநர்!
TN Assembly: பெஸ்ட் எதிர்க்கட்சினா சும்மாவா..! “வாயை திறங்க CM, கதறல் கேட்குதா” - அசெம்ப்ளி வளாகத்தில் திமுக
பெஸ்ட் எதிர்க்கட்சினா சும்மாவா..! “வாயை திறங்க CM, கதறல் கேட்குதா” - அசெம்ப்ளி வளாகத்தில் திமுக
DMK TVK: ”கோபாலபுரத்து கொள்ளைக்காரர்களா நாங்கள்? மூக்குடைந்தும் திருந்தாத திமுக” - இறங்கி அடிக்கும் TVK
”கோபாலபுரத்து கொள்ளைக்காரர்களா நாங்கள்? மூக்குடைந்தும் திருந்தாத திமுக” - இறங்கி அடிக்கும் TVK
தனியார் பள்ளிகள் அங்கீகாரம்.. ரூ.25 லட்சம் வரை லஞ்சம் கேட்ட திமுக.. இலவசமாக வழங்கிய தவெக அரசு!
தனியார் பள்ளிகள் அங்கீகாரம்.. ரூ.25 லட்சம் வரை லஞ்சம் கேட்ட திமுக.. இலவசமாக வழங்கிய தவெக அரசு!
USA - Iran Deal: தடைகள் நீக்கம், $300 பில்லியன் நிதி, சொத்துகள் விடுவிப்பு - அமைதி ஒப்பந்தம், ஈரான் காட்டில் மழை
தடைகள் நீக்கம், $300 பில்லியன் நிதி, சொத்துகள் விடுவிப்பு - அமைதி ஒப்பந்தம், ஈரான் காட்டில் மழை
TN Assembly: தவெக அரசின் முதல் கூட்டத்தொடர் - சட்டசபையில் இன்று ஆளுநர் உரை - அதகளமா? அதிரடியா?
TN Assembly: தவெக அரசின் முதல் கூட்டத்தொடர் - சட்டசபையில் இன்று ஆளுநர் உரை - அதகளமா? அதிரடியா?
Vanni Arasu: அலைமோதும் கூட்டம்.. இரவு 11 மணி வரை மக்கள் பணி.. வன்னி அரசுக்கு குவியும் பாராட்டு!
Vanni Arasu: அலைமோதும் கூட்டம்.. இரவு 11 மணி வரை மக்கள் பணி.. வன்னி அரசுக்கு குவியும் பாராட்டு!
Mini Countryman C: லுக், ஸ்டைல், வசதிகள் எல்லாம் ஓகே.. விலை தான் கண்ண கட்டுது..! - மினி கண்ட்ரிமேன் C தேறுமா?
லுக், ஸ்டைல், வசதிகள் எல்லாம் ஓகே.. விலை தான் கண்ண கட்டுது..! - மினி கண்ட்ரிமேன் C தேறுமா?
Embed widget