தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில், சட்டமன்ற உறுப்பினர்களை நேரில் சந்தித்து உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தால் சிறுகுறு தொழில்களை பாதுகாக்க உடனடியாக சட்டமன்றத்தை கூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை வைக்கும் நிகழ்ச்சி மடிசியா அரங்கத்தில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது: தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் 234 சட்டமன்ற உறுப்பினர்கள் சந்தித்து தங்களின் வாழ்வாதார பிரச்சனை குறித்து கோரிக்கை வைத்து வருகிறார்கள். சிறு, குறு நிறுவனங்களில் ஏறத்தாழ 12 லட்சம் தொழில் அமைப்புகள் உள்ளது. இந்த மின் கட்டணம் உயர்வால் ஒரு கோடி தொழிலாளர்களின் எதிர்காலம் இன்றைக்கு கேள்விக்குறியாக உள்ளது. இதை காப்பாற்ற வேண்டிய அரசோ கவனத்தில் கொள்ளாமல் உள்ளது.
ஆளும் கட்சி என்றாலும், எதிர்க்கட்சி என்றாலும், தோழமைக் கட்சி என்றாலும் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்ளிடம் கோரிக்கையை தற்போது அளித்து வருகிறார்கள். 2011ம் ஆண்டு புரட்சித்தலைவி அம்மா ஆட்சி பொறுப்பு ஏற்கும் பொழுது தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்ற தனி குழுவை அமைத்தார்கள். இருள் சூழ்ந்த தமிழகத்தை மின்மிகை மாநிலமாக உருவாக்கி காட்டினார்கள். தற்போது சிறு, குறு நிறுவனங்களில் கோரிக்கை நியாயமாக உள்ளது ஆகவே அரசு உயர்த்தப்பட்ட 430 சதவீதம் நிலை கட்டணத்தை முழுமையாக திரும்பிப் பெற வேண்டும். தமிழ்நாட்டில் தொழில் நிலைமை சீரடையும் வரை குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகளுக்கு மின் கட்டண உயர்வை கைவிட வேண்டும். பீக் ஹவர் கட்டணம் முழுமையாக திரும்ப பெற வேண்டும். இது குறித்து ஏற்கனவே சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானத்தை எடப்பாடியார் கொண்டு வந்தார். ஆனாலும், அரசு கவனத்தை காட்ட வில்லை அரசு தொடர்ந்து பாராமுகத்துடன் உள்ளது.
இன்றைக்கு சிறு, குறு நிறுவனங்கள் வீதியில் இறங்கி போராடி வருகிறார்கள். சிறு, குறு தொழில்கள் இல்லாமல் போய்விட்டால் நாட்டின் பொருளாதாரமே கேள்விக்குறியாகிவிடும். எடப்பாடியார் தொடர்ந்து பேசி வருகிறார் அரசு கவனத்தில் கொண்டு வரவில்லை. நீங்கள் எந்த போராட்டம் நடத்தினாலும் நான் எடப்பாடியாரின் உத்தரவு பெற்று உங்களுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம். அதிமுக சார்பில் தொடர்ந்து இதுகுறித்து நாங்கள் பேசி வந்தாலும் அரசு உரிய பதில் இன்னும் தெரிவிக்கவில்லை. இதனால் தொழில் துறையே மிகப் பெரிய கேள்விக்குறியாகி விடும். நீங்கள் வலிமையாக போராடினால் தான் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். மேலும் இன்றைக்கு மிகப்பெரிய பொருளாதார தாக்கம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தேசிய ஊரக 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் 240 முதல் 260 வரை சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதை 300 ரூபாய் உயர்த்திருவோம் என்று திமுக தேர்தல் வாக்குறுதி கொடுத்தது. ஆனால் இன்றைக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள அந்த சம்பளத்தை கூட மக்களுக்கு வழங்கவில்லை. ஒரு நபருக்கு 6000 முதல் 9000 வரை சம்பளம் நிலுவையில் உள்ளது. ஆனால் மத்திய அரசு மீது திமுக அரசு பழியை போடுகிறது தமிழக முழுவதும் உள்ள அனைத்து ஊராட்சிகளும் மக்கள் அரசுக்கு எதிராக உள்ளனர்” எனப் பேசினார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Sivagangai: திருப்பாச்சேத்தியில் வாமனச் சின்னம் பொறித்த நிலதானக்கல் கண்டுபிடிப்பு ; தொல்நடை குழுவிற்கு பாராட்டு
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Crime: பழிக்குப்பழி.. பெங்களூரில் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்ட தி.மு.க. முன்னாள் மண்டலத் தலைவர்.. பகீர் சி.சி.டி.வி.காட்சி..!