மேலும் அறிய

ராமதாஸின் 'பிளான்-பி' வியூகம்! ராமதாஸ் புதிய கட்சி தொடக்கம்? உருவாகும் அய்யா பாமக ?

APMK: "அய்யா பாட்டாளி மக்கள் கட்சியை பதிவு செய்யும் பணியில் ராமதாஸ் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது."

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமைப் பொறுப்பு மற்றும் அதிகார மையத்தைக் கைப்பற்றுவதில் தந்தை ராமதாஸ் மற்றும் மகன் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு இடையே நீண்டகாலமாக நிழல் யுத்தம் நடைபெற்று வந்தது. இந்த மோதலின் உச்சகட்டமாக, கட்சியின் பெயர் மற்றும் 'மாம்பழம்' சின்னம் ஆகியவற்றுக்கு உரிமை கோரி நடந்த சட்டப் போராட்டத்தில், தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றம் ஆகியவை அன்புமணி ராமதாஸுக்கே சாதகமான தீர்ப்பு வழங்கப்பட்டதாக அன்புமணி தரப்பு தெரிவித்து வருகிறது. இதற்கு ராமதாஸ் தரப்பு தொடர்ந்து மறுப்பு தெரிவித்தும் வருகிறது. கட்சி மற்றும் சின்னம் தன்னிடம் இருப்பதாகவும் போலி ஆவணங்களை அன்புமணி தரப்பு கொடுத்திருப்பதாகவும் ராமதாஸ் தரப்பு தெரிவித்து வருகிறது.

அரசியல் வாரிசை எதிர்கொள்ள ‘பிளான்-பி’ வியூகம்

மறுபுறம் கட்சியும் சின்னமும் கையை விட்டுப் போனாலும், தனது அரசியல் செல்வாக்கு இன்னும் மங்கவில்லை என்பதை நிரூபிக்க ராமதாஸ் தரப்பு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, வரும் சட்டமன்றத் தேர்தலில் அன்புமணி தரப்பிற்கும், பதிலடி கொடுக்க 'பிளான்-பி' (Plan-B) எனும் திட்டத்தை ராமதாஸ் கையில் எடுத்துள்ளார். இதற்காக ‘அய்யா பாட்டாளி மக்கள் கட்சி’ என்ற புதிய அமைப்பு முறைப்படி பதிவு செய்வதற்கான பணிகள் நடைபெற்ற வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கொடி அடையாளம் மற்றும் தலைமைப் பொறுப்பு

புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள இக்கட்சியானது பாமகவின் அதே நிறம் மற்றும் அடையாளங்களை உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அமமுக கொடியில் ஜெயலலிதாவின் முகம் இடம்பெற்றிருப்பதைப் போல, பாமக கொடியின் வண்ணங்களோடு டாக்டர் ராமதாஸின் முகத்தைப் பதித்து புதிய கொடி உருவாக்கப்பட்டுள்ளது.

கட்சியின் நிர்வாகப் பொறுப்புகளைத் தனது நம்பிக்கைக்குரியவர்களிடம் ஒப்படைக்கும் நோக்கில், ராமதாஸின் வலதுகரமாகச் செயல்படும் தலைமை நிலையச் செயலாளர் அன்பழகனின் மகன் முகிலன், இக்கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தனித்துப் போட்டியிட ராமதாஸ் முடிவு ?

இந்த புதிய கட்சியின் மூலம் வரும் சட்டமன்றத் தேர்தலில் குறைந்தபட்சம் 50 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த ராமதாஸ் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தனது தீவிர ஆதரவாளர்கள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்து, வேட்பாளராக களம் இறங்க திட்டம் வைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் இந்த தகவல்களை தொடர்ந்து ராமதாஸ் தரப்பு மறுத்து வருகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Vijay Trisha: கோர்ட்டில் டைவர்ஸ் கேஸ்! த்ரிஷாவுடன் ஜோடியாக கல்யாணத்திற்கு வந்த விஜய்!
Vijay Trisha: கோர்ட்டில் டைவர்ஸ் கேஸ்! த்ரிஷாவுடன் ஜோடியாக கல்யாணத்திற்கு வந்த விஜய்!
இன்பன் - இனியன்.. தொடரும் 4 தலைமுறை நட்பு!
இன்பன் - இனியன்.. தொடரும் 4 தலைமுறை நட்பு!" - அன்பில் மகேஸ் இல்ல விழாவில் முதல்வர் ஸ்டாலின் உருக்கம்!
‘முக்குலத்தோர் வாக்குகளுக்கு ஸ்கெட்ச்’ மு.க.ஸ்டாலின் தலைமையில் இணைப்பு விழா நடத்தும் ஒபிஎஸ்..!
’முக்குலத்தோர் வாக்குகளுக்கு ஸ்கெட்ச்’ மு.க.ஸ்டாலினின் மெகா பிளான்..!
TN Assembly Election: காட்டாற்றில் அடித்துச் செல்லப்பட்ட ஓட்டுப்பெட்டிகள்! எலெக்ஷன் ரிசல்ட் என்னாச்சு?
TN Assembly Election: காட்டாற்றில் அடித்துச் செல்லப்பட்ட ஓட்டுப்பெட்டிகள்! எலெக்ஷன் ரிசல்ட் என்னாச்சு?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Semi Final IND vs ENG: பொத்தல் போட பாத்த பெத்தேல்! 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி! இறுதிப்போட்டிக்கு ரெடி!
Semi Final IND vs ENG: பொத்தல் போட பாத்த பெத்தேல்! 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி! இறுதிப்போட்டிக்கு ரெடி!
Vijay Trisha: கோர்ட்டில் டைவர்ஸ் கேஸ்! த்ரிஷாவுடன் ஜோடியாக கல்யாணத்திற்கு வந்த விஜய்!
Vijay Trisha: கோர்ட்டில் டைவர்ஸ் கேஸ்! த்ரிஷாவுடன் ஜோடியாக கல்யாணத்திற்கு வந்த விஜய்!
IND vs ENG Semi Final: இந்தியா vs இங்கிலாந்து அரையிறுதி! இறுதிப்போட்டியில் யார்? கோப்பை வெல்லும் வாய்ப்பு யாருக்கு?
இந்தியா vs இங்கிலாந்து அரையிறுதி! இறுதிப்போட்டியில் யார்? கோப்பை வெல்லும் வாய்ப்பு யாருக்கு?
Vijay Trisha : ஜோடியாக வந்த விஜய் த்ரிஷா...தவெக தொண்டர்களின் ரியாக்‌ஷன் என்ன ?
Vijay Trisha : ஜோடியாக வந்த விஜய் த்ரிஷா...தவெக தொண்டர்களின் ரியாக்‌ஷன் என்ன ?
பெற்றோர்களே! குழந்தைகளுக்கு உடல் பருமன் பிரச்சினை! இந்தியாதான் 2வது இடம் - அதிர்ச்சி ரிப்போர்ட்
பெற்றோர்களே! குழந்தைகளுக்கு உடல் பருமன் பிரச்சினை! இந்தியாதான் 2வது இடம் - அதிர்ச்சி ரிப்போர்ட்
இன்பன் - இனியன்.. தொடரும் 4 தலைமுறை நட்பு!
இன்பன் - இனியன்.. தொடரும் 4 தலைமுறை நட்பு!" - அன்பில் மகேஸ் இல்ல விழாவில் முதல்வர் ஸ்டாலின் உருக்கம்!
Sani Peyarchi: ஜென்ம சனி, பாத சனி, விரய சனி என்ன செய்யும்? சம்பவம் செய்யப்போகும் சனிப்பெயர்ச்சி!
Sani Peyarchi: ஜென்ம சனி, பாத சனி, விரய சனி என்ன செய்யும்? சம்பவம் செய்யப்போகும் சனிப்பெயர்ச்சி!
நாங்குநேரி டூ இடைக்காட்டூர்: தொடரும் சாதிவெறித் தாக்குதல்கள்! முடங்கிக் கிடக்கிறதா திமுக அரசு? அன்புமணி காட்டம்!
நாங்குநேரி டூ இடைக்காட்டூர்: தொடரும் சாதிவெறித் தாக்குதல்கள்! முடங்கிக் கிடக்கிறதா திமுக அரசு? அன்புமணி காட்டம்!
Embed widget