சேலத்தில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது, "பாராளுமன்ற தேர்தலில் இரண்டு கட்டங்கள் 190 தொகுதிகளில் தேர்தல் முடிந்து பூர்த்தியாகி உள்ளது. பெரும்பான்மையான தொகுதிகள் பாஜகவிற்கு வரும் எந்த ஒரு சந்தேகத்திற்கும் இடமில்லை. எதிர்க்கட்சியை சேர்ந்த ராகுல்காந்தி மற்றும் சிதம்பரம் எப்பொழுதும் 40 நாட்கள் கற்பனையில் வாழ்வார்கள். காங்கிரஸ் ஆட்சியில் உள்ள கர்நாடகா, தெலுங்கானா, இமாச்சல் ஆகிய மாநிலங்களில் 41 தொகுதிகள் மட்டுமே உள்ளது. இந்த மூன்று மாநிலங்களை சேர்த்து 9 தொகுதி கூட காங்கிரஸ் வெற்றி எனவே காங்கிரஸ் கற்பனையில் பேசி வருகிறார்கள். காங்கிரசின் தேர்தல் அறிக்கை பற்றி மக்களுக்கு தெரியும். காங்கிரஸ் தொழிலாளர்களின் 2000 கோடியை திருடியதை எக்ஸ்ரே செய்யுங்கள் என்றார்.



பாஜக மதப் பிரச்சினையை கொண்டு வருகிறதா என்றால் இல்லை. ராஜஸ்தான் பிரதமர் பேசிய பேச்சில் இஸ்லாமியர்கள் என்ற வார்த்தையை பிரதமர் பயன்படுத்தவில்லை. ஊடுருவகாரர்கள் என்ற வார்த்தையை பயன்படுத்தி உள்ளார். ஊடுருவகாரர்கள் இந்தியாவில் இருக்கிறார்களா இல்லையா என்று கேள்வி எழுப்பினார். இந்தி கூட்டணி கட்சிகள் இந்த நாட்டில் ஊடுருவி வந்த அந்நியர்களின் ஆதரவாளர்கள். இந்தியர்களின் எதிரிகள். கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் என்று தனித்தனியாக சொல்லாமல் குரூப்பாக பேசுகிறார். இந்தியர்களை மட்டும் ஜாதி வெறியாக பிரிப்பார்கள். ஒவ்வொரு சொத்துக்களையும் எக்ஸ்ரே செய்து அனைவருக்கும் பகிர்ந்து கொடுப்பேன் என்று ராகுல் காந்தி பேசுகிறார். நாட்டு மக்களின் சொத்துக்களை அபகரித்து சிறுபான்மையருக்கு கொடுக்கும் காங்கிரஸ் செய்யும் சதி. இந்துக்களின் சொத்துக்களை எடுத்து சிறுபான்மையினருக்கு கொடுத்து மத மாற்றத்தை ஊக்குவிக்கதான். பாஜக மதப் பிரச்சினையை கொண்டு வருகிறதா என்றால் இல்லை. பெரும்பான்மை சமூகத்தை வஞ்சிக்கும் காங்கிரஸ் கட்சியின் சூது மக்களால் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. இதனால் பிரதமரை வாய்க்கு வந்தது போல் பேசி வருகிறார்கள் என்றார்.



மேட்டுப்பாளையத்தில் வன பத்திரகாளியம்மன் கோவிலில் நான்கு அர்ச்சகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தட்டு காசு அறநிலை துறைக்கா, அர்ச்சர்களுக்கா என்று அதைப் பற்றி பேசுவோம் நீதிமன்ற தீர்ப்பு ஏற்புடையதாக இல்லை. இந்து அறநிலைத்துறை என்பது இந்து அறத்தை அளிக்கும் துறை என்பதை பல இடத்தில் பேசி வருகிறேன். இது தொடர்பாக என் மீது 26 வழக்கு பதிவுகள் செய்யப்பட்டுள்ளது. இந்துகளுக்காக, கோவிலுக்காக யார் குரல் கொடுத்தாலும் குரல்வலியை அறுக்கும் இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் போட்டிருக்கும் வழக்குகள் தான். தமிழகத்தில் 100 மேற்பட்ட கோயில்களுக்கு நேரடியாக சென்றுள்ளேன். குறிப்பாக பூந்தமல்லி வரதராஜ பெருமாள் திருக்கோவிலுக்கு சென்று கோவில் பட்டாச்சாரிடம் கேட்டபோது 300 ரூபாய் மாத சம்பளம். இதுதான் அறநிலைத்துறையின் நிர்வாகம். கோவில் தட்டு காசு என்பதை பொறுத்த வரை அர்ச்சகர்களுக்கு வருவதாக சம்பளம் கொடுப்பதில்லை. வன பத்ரகாளியம்மன் கோவிலில் நான்கு அர்ச்சகர் தற்காலிக பணியாளர்கள். சம்பளம் இல்லை சாப்பாட்டிற்கு என்ன செய்வார்கள். தமிழகத்தில் வஞ்சிக்கப்படுகின்ற ஒரு துறை என்றால் அர்ச்சகர்கள் தான். நாற்பதாயிரம் கோவில்களிலும் அறநிலை துறை அதிகாரிகளுக்கு அதிக அளவில் சம்பளம் உள்ளது. வன பத்ரகாளியம்மன் திருக்கோவில் விவகாரத்தில் அறநிலைத்துறை மறு விசாரணை தாக்கல் செய்ய வேண்டும். ஜாபர் சாதிக் செயல்பாட்டை கண்டிக்காத முதல்வர் மு.க.ஸ்டாலினால் தான் தமிழகம் போதை காடாக மாறியதற்கு காரணம். நடவடிக்கை கூட எதிர்பார்க்கவில்ல கண்டித்திருக்க வேண்டும். தமிழகம் போதை பொருட்களின் காடாக இருக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் விரும்புகிறார் என்று அர்த்தம். திமுக அரசு என்ன இல்லையோ அதைப்பற்றி தான் பேசுவது அதிகம். திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சமூக நீதி மீது எள்ளளவு நேர்மையாக ராஜினாமா செய்ய வேண்டும். போதைப் பொருள் விவகாரத்தில் தமிழக காவல்துறையினர் வாயை மூடிக்கொண்டு உள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் என்னுடைய நண்பர் தான் இவரை போன்று நிறைய பேர் திமுகவில் உள்ளனர். பெட்டியை காப்பதற்காக இரவு பகல் பாராமல் காவல் காப்போம் ஆனால் முதல்வர் குடும்பத்துடன் சென்று ஜாலியாக இருப்பாரா என்று பேசுகிறார்கள்.