ராகுல் காந்தி பாராளுமன்றத்தில்  சீன எல்லையில் நடைபெற்றது பற்றி 4 வரிகள் படிப்பதற்கு அரசாங்கம் மிகக் கடுமையாக போராடி நிறுத்தி இன்று தள்ளி வைத்திருக்கிறார்கள். - எம்பி மாணிக்கம் தாகூர் பேச்சு.

அமைச்சர்களும் எகரி குதித்து செய்த அமலி
 
நாடாளுமன்றத்தில் நடந்தது குறித்து விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது...,” இன்று முறையாக குடியரசுத் தலைவருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நடைபெற்றது. மொத்தம் 18 மணி நேரத்தில் நான்கு மணி நேரம் எதிர்க்கட்சிக்கு பேச அவகாசம் இருந்தது. அப்போது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசும்போது தேசபக்தி குறித்து பாஜக உறுப்பினர் பேசிய பேச்சுக்கு விளக்கம் அளிக்கும் வகையில், எங்கள் தேசபக்தியை பற்றி பேசும் நீங்கள் உங்கள் தேசபக்தியை பற்றி புத்தகம் வரப்போகிறது. அதில் ராணுவ தளபதியாக இருந்தவரின் புத்தகம் வரப்போகிறது. அந்த புத்தகம் தின் சில வரிகளை படிக்க விரும்புகிறேன், என்று சொன்னதற்காக மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா கிரண் ரிச்சு என மொத்த அமைச்சர்களும் எகரி குதித்து செய்த அமலியும் இதனால் மக்களவை 40 நிமிடம் தொடர்ந்து பின்னர் மூன்று மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 
 
மாணிக்கம் தாகூர் காணொளி மூலம் கூறியுள்ளார்.
 
மோடியை தொடர்ந்து அமித்ஷாவும் தப்பிவிட்டார், அதன் பின்னர் 4 மணிக்கு அவை ஒத்திவைக்கப்பட்டது. ராகுல் காந்தி அவர்கள் இந்த நான்கு வரியை சீன எல்லையில் நடைபெற்றது, பற்றி படிப்பதற்கு அரசாங்கம் மிகக் கடுமையாக போராடி நிறுத்தி இன்று அவையை தள்ளி வைத்திருக்கிறார்கள். நாளை காலை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்களின் பேச்சு தொடரும்”  என விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் காணொளி மூலம் கூறியுள்ளார்.