Raghava Lawrence Political Entry : ’விஜயுடன் இணைந்து அரசியல் பயணம்’ அதிரடியாக அறிவித்த ராகவா லாரன்ஸ்...!
'முதல்வர் விஜயை நண்பர், நண்பர் என்றும் அவருக்கு தொடக்கம் முதல் டான்ஸ் மாஸ்ட்ராக பணியாற்றியதை குறிப்பிட்டு பேசியுள்ளார் லாரன்ஸ். இதம் மூலம் அவர் தவெக-வில் இணைவது உறுதியாகியிருக்கிறது’

திருச்சி கிழக்குத் தொகுதியை விஜய் ராஜினாமா செய்தபோது, அந்த தொகுயில் த.வெ.க.சார்பில் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் போட்டியிட வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது. அவரும் விஜய் முதலமைச்சராக பதவியேற்ற விழாவில் பங்கேற்றார். ஆனால், சில நாட்களில் நடிகர் ராகவா லாரன்ஸ் விஜய் கட்சியில் இணையப்போவதாகவும் அவரே திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடவிருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால், இப்படியான எந்த தகவலும் உறுதிப்படுத்தப்படாத நிலையில் ,நடிகர் ராகவா லாரன்ஸ்சே 12ஆம் தேதியான இன்று தன்னுடைய நிலைப்பாட்டை தெரிவிப்பதாக அறிவித்தார்.
அரசியலுக்கு வருவது உறுதி..!
இதனையடுத்து, இன்று காலை சமூக வலைதளங்களில் பதிவை ஒன்றை வெளியிட்டார் ராகவா லாரன்ஸ். அதில், தான் அரசியல் வருவதற்கான சூழல் உருவாகியுள்ளதாகவும் தன்னுடைய நிலைப்பாடு குறித்து காலை 10 மணிக்கு வீடியோ வெளியிட்டு அறிவிப்பதாகவும் அதில் தெரிவித்திருக்கிறார்.
முடிவை அறிவித்த லாரன்ஸ்
அதனைத் தொடர்ந்து சரியாக 10 மணிக்கு தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் 18 நிமிடத்திற்கு நீண்ட வீடியோ ஒன்றை பதிவிட்டிருக்கிறார் லாரன்ஸ். அதில், நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கவிருந்த நிலையில், அதில் இணைந்து செயல்பட தான் தயாராக இருந்ததாகவும் ஆனால் தவிர்க்க முடியாத சூழலால் அது நடைபெறவில்லையென்றும் குறிப்பிட்டுள்ள லாரன்ஸ், நடிகர் விஜயுடன் பேசிக்கொண்டிருக்கையில் அவர் அரசியலுக்கு வருவதாக தன்னிடம் சொன்னதாகவும், அதைக் கேட்டு தான் இன்ப அதிர்ச்சி அடைந்ததாகவும் தெரிவித்திருக்கிறார். இதனையடுத்து, விஜய் அரசியலுக்கு வருவது குறித்து தன்னுடைய தாயிடம் தெரிவித்ததாகவும் ஆனால் அவரோ அரசியல் ஒரு சாக்கடை என்றும் பணம் கொடுக்காமல் வெற்றி பெற முடியாது என்றும் அதனால் விஜயை அரசியலுக்கு வர வேண்டாம் என்று தான் சொல்லவிருப்பதாகவும் கூறினார் என அந்த வீடியோவில் குறிப்பிட்டு பேசியுள்ள ராகவா லாரன்ஸ், இது பற்றி தன்னுடைய நண்பரான விஜயிடம் தான் சொன்னதாகவும் அதற்கு அவர் அவர்களுக்கு இது புரியவில்லை. நடக்கும் போது அதனை புரிந்துகொள்வார்கள் என்றும் குறிப்பிட்டதாகவும் தெரிவித்தார்.
வெற்றி பெற்ற விஜய் – ஒப்புதல் அளித்த தாய்
இதனையடுத்து, விஜய் அரசியல் கட்சித் தொடங்கி பெருவாரியான மக்கள் செல்வாக்கில் வெற்றி பெற்றிருப்பது பற்றி தன்னுடைய அம்மாவிடம் தான் தெரிவித்தபோது ’ஆமாம்மா அந்த புள்ள எல்லாத்தையும் மாத்திடுச்சு. நீ அரசியலுக்கு போ’ என அம்மா உத்தரவிட்டதாகவும் உடனடியாக அவரது காலில் விழுந்து தான் வணங்கியதாகவும் அந்த வீடியோவில் ராகவா லாரன்ஸ் குறிப்பிட்டிருக்கிறார்.
மக்களிடம் ஒப்புதல் கேட்ட லாரன்ஸ்
அதே நேரத்தில், தன்னுடைய தாய் ஒப்புதல் அளித்துவிட்ட நிலையில் ,தான் அரசியலுக்கு வரலாமா? அல்லது வேண்டாமா ? என்பது குறித்து தனது ரசிகர்கள் கருத்து தெரிவிக்குமாறு தெரிவித்துள்ள லாரன்ஸ், தான் 22 வருடம் செய்த உதவியின் விளைவாக வளர்ந்து நிற்கிற 4 இளைஞர்களை தன்னுடைய வீடியோவில் இடம்பெற செய்து, இதனை பார்த்த பிறகு முடிவை சொல்லுங்கள் என தெரிவித்துள்ளார்.
விஜயுடன் இணையும் லாரன்ஸ்
அந்த வீடியோவில் நேரடியாக விஜய் கட்சியில் இணைகிறேன் என்றோ, திருச்சி கிழக்கில் போட்டியிடுகிறேன் என்றோ லாரன்ஸ் எதுவும் குறிப்பிடாத நிலையில், நண்பர் விஜய், நண்பர் விஜய் என்று பல முறை கூறியிருப்பதும், அவருக்கு தொடக்கம் முதல் டான்ஸ் மாஸ்ட்ராக இருந்ததும் இருவருக்கும் இடையே இருக்கும் நட்பு பற்றியும் அதிகளவில் லாரன்ஸ் பேசியிருப்பதை வைத்து பார்த்தால், அவர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து செயல்பட முடிவு எடுத்திருப்பது உறுதியாகியிருக்கிறது.
தனக்கு இருக்கும் நற்பெயரின் காரணமாக எப்படியும் தன்னை அரசியலுக்கு வரவேண்டும் என்றுதான் ரசிகர்களும் மக்களும் தெரிவிப்பார்கள் என்ற நம்பிக்கையில் இந்த வீடியோவை ராகவா லாரன்ஸ் வெளியிட்டிருக்கிறார்.
Before You Go
Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி
ட்ரெண்டிங் செய்திகள்























