மேலும் அறிய

Raghava Lawrence: ’’அம்மாவின் ஆசியுடன்…‘’ திருச்சி கிழக்கில் போட்டியா? ராகவா லாரன்ஸ் முக்கிய அறிவிப்பு!

Raghava Lawrence: என்னுடைய அம்மாவின் ஆசியுடன் 11ஆம் தேதி வியாழக்கிழமை அன்று காலை 9.30 மணிக்கு என் வாழ்க்கையில் முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளேன்- ராகவா லாரன்ஸ்.

திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் நடிகரும் சமூக சேவகருமான ராகவா லாரன்ஸ் தவெக சார்பில் போட்டியிடுவதாகத் தொடர்ந்து செய்திகள் கசிந்த நிலையில், இதுகுறித்த முக்கிய அறிவிப்பை அவரே வெளியிட்டுள்ளார்.

இதுபற்றி ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ’’திருச்சி கிழக்கு தொகுதியில் நான் போட்டியிடுவதாக பல்வேறு செய்தி நிறுவனங்களில் தகவல் வெளியாகி வருகிறது.

பேச வேண்டிய நேரம் வந்துவிட்டது

என்னுடைய பல்வேறு ஊடக நண்பர்கள் இதுதொடர்பாக தொலைபேசியில் என்னை அழைத்துப் பேசுகிறார்கள். நேரில் சந்திக்க அனுமதி கோருகிறார்கள். இதுகுறித்து நான் பேச வேண்டிய நேரம் வந்துவிட்டது.

தற்போது பென்ஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறேன். 10ஆம் தேதியோடு என்னுடைய ஷெட்யூல் முடிவடைகிறது.

என்னுடைய அம்மாவின் ஆசியுடன் 11ஆம் தேதி வியாழக்கிழமை அன்று காலை 9.30 மணிக்கு என் வாழ்க்கையில் முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளேன்’’ என்று பதிவிட்டுள்ளார்.

இதன் மூலம் திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் தவெக சார்பில் ராகவா லாரன்ஸ் போட்டியிட உள்ளது ஏறத்தாழ உறுதியாகி உள்ளது.

ராகவா லாரன்ஸ்

நடிகரும் நடன இயக்குநருமான ராகவா லாரன்ஸ் சினிமா துறையில் இருந்தாலும் நீண்ட காலமாகவே தேவையுள்ள மக்களுக்கு உதவி வருகிறார். ஏழை, எளிய மாணவர்களின் கல்விச் செலவு மற்றும் மருத்துவ உதவிகளைச் செய்து வருகிறார்.

அதேபோல  மாற்றுத்திறனாளிகளுக்காக இலவச தங்கும் விடுதியை நடத்தி, அவர்களைக் கலை மற்றும் விளையாட்டுத் துறைகளில் ஊக்குவித்து வருகிறார்.

'சேவையே கடவுள்' அறக்கட்டளையைத் தொடங்கி 'மாற்றம்' என்ற பெயரில் விவசாயிகளுக்கு பல்வேறு உதவிகளையும் ராகவா லாரன்ஸ் செய்து வருகிறார்.

திருச்சி கிழக்கில் இடைத் தேர்தல்

தமிழ்நாட்டில் 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தலைவரும் முதலமைச்சருமான விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டார். இரண்டிலுமே அவர் வெற்றி பெற்ற நிலையில் திருச்சி கிழக்கு தொகுதியை அவர் ராஜினாமா செய்தார். தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Vijay Perambur: வெற்றிக்கு பிறகு முதல்முறையாக பெரம்பூர் செல்லும் முதலமைச்சர் விஜய் - முக்கிய அறிவிப்புகள் என்ன?
வெற்றிக்கு பிறகு முதல்முறையாக பெரம்பூர் செல்லும் முதலமைச்சர் விஜய் - முக்கிய அறிவிப்புகள் என்ன?
Lingusamy:
Lingusamy: "விஜய் முதலமைச்சர் ஆனதுல ரொம்ப சந்தோஷம்.." இயக்குனர் லிங்குசாமி நெகிழ்ச்சி
Annamalai: திமுக-விற்கு புது தலைவலி.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!
Annamalai: திமுக-விற்கு புது தலைவலி.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!
TVK Vijay: ஊழல்களைத் தோண்டும் முதலமைச்சர் விஜய்.. பீதியில் முன்னாள் அமைச்சர்கள்!
TVK Vijay: ஊழல்களைத் தோண்டும் முதலமைச்சர் விஜய்.. பீதியில் முன்னாள் அமைச்சர்கள்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!
எடப்பாடி vs சி.வி.சண்முகம் அடிதடியில் முடிந்த அதிமுக கூட்டம் விழுப்புரத்தில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Perambur: வெற்றிக்கு பிறகு முதல்முறையாக பெரம்பூர் செல்லும் முதலமைச்சர் விஜய் - முக்கிய அறிவிப்புகள் என்ன?
வெற்றிக்கு பிறகு முதல்முறையாக பெரம்பூர் செல்லும் முதலமைச்சர் விஜய் - முக்கிய அறிவிப்புகள் என்ன?
Bangkok Bar: நள்ளிரவில் பாரில் பயங்கர தீ விபத்து..! 27 பேர் பலி - 60 பேரின் நிலைமை என்ன? வைரல் வீடியோக்கள்
நள்ளிரவில் பாரில் பயங்கர தீ விபத்து..! 27 பேர் பலி - 60 பேரின் நிலைமை என்ன? வைரல் வீடியோக்கள்
Annamalai: தவெக தடுமாறினால் கைதூக்கி விடுங்க.. ஆதரவாளர்களுக்கு அண்ணாமலை அறிவுறுத்தல்!
Annamalai: தவெக தடுமாறினால் கைதூக்கி விடுங்க.. ஆதரவாளர்களுக்கு அண்ணாமலை அறிவுறுத்தல்!
TN Weather Update: தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று வெயில் சுட்டெரிக்கும்? சென்னை மழை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று வெயில் சுட்டெரிக்கும்? சென்னை மழை? வானிலை அறிக்கை
Mahindra SUV: மஹிந்த்ராவை கட்டிக் காப்பாற்றும் எஸ்யுவிக்கள்..! டாப் செல்லிங் மாடல் என்ன? சொதப்பும் கார் என்ன?
மஹிந்த்ராவை கட்டிக் காப்பாற்றும் எஸ்யுவிக்கள்..! டாப் செல்லிங் மாடல் என்ன? சொதப்பும் கார் என்ன?
CM Vijay: தவெக ஒருநாள் காணாமல் போகும்.. கறை படிந்த கட்சிகளில் முதலிடம்.. வெளுத்து வாங்கிய அமமுக!
CM Vijay: தவெக ஒருநாள் காணாமல் போகும்.. கறை படிந்த கட்சிகளில் முதலிடம்.. வெளுத்து வாங்கிய அமமுக!
Rasi Palan Today (13-07-2026): கன்னிக்கு கவனம்.. விருச்சிகத்துக்கு லாபம்.. உங்கள் ராசிக்கு இன்று என்ன பலன்?
Rasi Palan Today (13-07-2026): கன்னிக்கு கவனம்.. விருச்சிகத்துக்கு லாபம்.. உங்கள் ராசிக்கு இன்று என்ன பலன்?
Iran's Revenge Hit List: லிண்ட்சேவை ஈரான் கொன்றதா.? திகிலை கிளப்பிய ஹிட் லிஸ்ட் புகைப்படம்; டாப்பில் ட்ரம்ப், நெதன்யாகு
லிண்ட்சேவை ஈரான் கொன்றதா.? திகிலை கிளப்பிய ஹிட் லிஸ்ட் புகைப்படம்; டாப்பில் ட்ரம்ப், நெதன்யாகு
Embed widget