புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், பாகூர் தொகுதிக்குட்பட்ட மணப்பட்டு புதிய தாங்கல் ஏரியை துார்வாரி ஆழப்படுத்திட 39 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயும், ஆராய்ச்சிக்குப்பம் வாய்க்காலை துார்வாரிட 13 லட்சத்து 05 ஆயிரம் ரூபாயும், சோரியாங்குப்பம் முதல் ஆராய்ச்சிக்குப்பம் வரை தென்பென்னையாற்றங்கரையை மேம்படுத்திட 29 லட்சத்து 79 ஆயிரம் ரூபாயும், ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணி துவக்க விழா நேற்று நடைபெற்றது. இதில், அமைச்சர் சாய் சரவணகுமார், செந்தில்குமார் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு, பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் பாலசுப்ரமணியம், வட்டார வளர்ச்சி அதிகாரி சந்திரகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் கலந்து கொள்ள வந்த அமைச்சர் சாய் சரவணன் அங்கிருந்து பெண்களிடம் 100 நாள் வேலை வாய்ப்பு 200 நாட்களாகவும் அதற்கான கூலியையும் பிரதமர் மோடி உயர்த்திருக்கிறார். மேலும், மக்களுக்கு வருகின்ற நிதியை உயர்த்திக் கொடுக்க சொல்லியும் கூறி இருக்கிறார். அப்போது பெண்கள் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தனர். இதற்கு அமைதியாக இருக்கிறீர்கள் இதற்கு, நீங்கள் கைதட்டுங்கள் என்று அமைச்சர் கூறினார் அங்கிருந்து மக்கள் பெண்கள் சிரித்துக் கொண்டே கைதட்டினார். இதையடுத்து அங்கிருந்து பெண்கள் அமைச்சரை பார்த்து, சார்... சிலிண்டர் விலை ஆயிரத்து 200 ரூபாவாக உயர்ந்துவிட்டது. எப்போது விலையை குறைக்க போகிறீர்கள் என்று கூச்சல் போட்டனர். இதையடுத்து அமைச்சர் அங்கிருந்த பூஜை தட்டை எடுத்து வானத்தில் காட்டி மந்திரம் ஓதினார். இதை பார்த்த பெண்கள் சிரித்தனர். பூஜையை முடித்த அமைச்சரிடம் பெண்கள், சிலிண்டர் விலையை எப்போது குறைப்பீங்க என்று மீண்டும் கேள்வியை எழுப்பினர். இதற்கு அவர் பதில் அளிக்காமல் அங்கிருந்து சென்று விட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்