Puducherry Election Date 2026: யூனியன் பிரதேசமான புதுச்சேரியில், சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன்படி, பாண்டிச்சேரியில் ஏப்ரல் 9 அன்று தேர்தல் நடைபெற உள்ளது. மே 4ஆம் தேதி அன்று சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன. 

புதுச்சேரியில் தற்போது என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி ஆட்சிக் கட்டிலில் உள்ளது. திமுக- காங்கிரஸ் கூட்டணி எதிர்க் கட்சியாக உள்ளது. முதலமைச்சராக என்.ஆர். காங்கிரஸைச் சேர்ந்த என்.ரங்கசாமி உள்ளார். இவர் 5 ஆண்டுகளுக்கு முன்னால், 2021-ல் மே 7ஆம் தேதி முதலமைச்சராகப் பதவி ஏற்றார். 4ஆவது முறையாக இவர் முதல்வர் பொறுப்பு வகிக்கிறார்.

30 தொகுதிகளுக்குத் தேர்தல் 

இங்கு 30 தொகுதிகளுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதேபோல எம்எல்சியாக 3 பேர் மத்திய அரசால் நியமிக்கப்படுவர். இதில் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை இடங்கள் 16 ஆகும்.

புதுச்சேரி வாக்காளர்கள் எண்ணிக்கை

புதுச்சேரியில்  மொத்த வாக்காளர்கள்: 10,24,507

பெண் வாக்காளர்கள்: 5,42,152

ஆண் வாக்காளர்கள்: 4,82,216

மூன்றாம் பாலினத்தவர்: 139 என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய தேதிகள்

ஏப்.9ஆம் தேதி, 2026 - புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்

மார்ச் 16- வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்

மார்ச் 23 – வேட்பு மனுத்தாக்கல் கடைசி நாள்

மார்ச் 24 - வேட்பு மனு பரிசீலனை

மார்ச் 26 - திரும்பப் பெற கடைசி நாள்

ஏப்ரல் 9 - வாக்குப்பதிவு

மே 4 - வாக்கு எண்ணிக்கை

இந்த முறை புதுச்சேரியிலும் தமிழக வெற்றிக் கழகம் முதல் முறையாகக் களம் காண்கிறது. விஜய்க்கு புதுச்சேரியில் ரசிகர்கள் அதிகம் என்பதால், இந்த முறை புதுச்சேரியில் போட்டி அதிகம் இருக்கும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.

மே 4-ல் தேர்தல் முடிவுகள்

பொதுவாக தமிழ்நாட்டு பொதுத் தேர்வுகள், மக்கள் நலத்திட்டங்கள், நிகழ்வுகள் புதுச்சேரியிலும் பெரும்பாலும் அப்படியே பின்பற்றப்படுவது வழக்கம். எனினும் இம்முறை முன்கூட்டியே புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி அன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தேர்தல் முடிவுகள், 5 மாநிலங்களுக்கும் சேர்த்து மே 4 அன்று அறிவிக்கப்பட உள்ளன. 

 

Puducherry Election 2026, Puducherry Assembly Election, Puducherry Assembly Election 2026, Assembly Election 2026, Election 2026