புதுச்சேரி : முதல்வர் ரங்கசாமி  விளம்பர அரசியல் செய்வது எடுபடாது என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.


முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-


அதானிக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்றால் விசாரணை வைக்க ஏன் மோடி தயங்குகிறார். இந்திய நாடாளுமன்றம் ஒரு நாள் கூட நடக்கவில்லை. இது ஜனநாயக படுகொலை. மோடி அதானி விவகாரத்தில் பதில் தர வேண்டும். விசாரணை வைக்கும் வரை காங்கிரஸ் ஓயாது. போராட்டம் தொடரும். புதுச்சேரியில் காங்கிரஸ்- திமுக கூட்டணி அரசில் ஜிப்மருக்கு 50 ஏக்கர் நிலத்தை உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மையத்துக்காக ஒதுக்கி தந்தோம். இந்த பிரத்யேக மருத்துவமனை ரூ. 900 கோடியில் அமைய இருந்தது. இதற்காக நிலத்தை சேதராப்பட்டில் ஒதுக்கி தந்தோம். தற்போது அத்திட்டத்தை மத்திய அரசு வேறு மருத்துவமனைக்கு மாற்றி உள்ளது. தென்மாநிலங்களிலேயே முக்கியமாக அமைய இருந்த இந்த மையத்தை மாற்றி இருப்பது மூலம் புதுவையை மத்திய அரசு புறக்கணிக்கிறது.


காங்கிரஸ் ஆட்சியில் ஜிப்மர் மருத்தவமனையில் அனைவருக்கும் இலவச சிகிச்சை தரப்பட்டது, மருந்து தட்டுப்பாடு இல்லை. சிறப்பாக செயல்பட்ட ஜிப்மர் தற்போது சீரழிந்து விட்டது. நோயாளிகள் அலைக்கழிக்கப் படுகின்றனர். தற்போது உயர்சிகிச்சைக்கும் கட்டணம் விதித்துள்ளனர். இதனால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளேன். புதுவை சட்டப்பேரவையில் பணிநிரந்தரம், ஊதிய உயர்வு என பல அறிவிப்புகளை முதலமைச்சர் ரங்கசாமி வெளியிட்டுள்ளார். அது வரவேற்க்கத்தக்கது. ஆனால் அதற்கான நிதி எங்கே உள்ளது. ஆண்டுக்கு ரூ. 700 கோடி தேவை. ஆனால் பட்ஜெட்டில் இதற்கான நிதி ஒதுக்கப்படவில்லை.


இதை செய்யாமல் கோப்புகளை தயாரித்து அனுப்பும்போது தலைமை செயலாளர், செயலாளர்கள் விதிமீறி ஒப்புதல் தர மறுத்தால் அவர்கள் மீது பழிபோடுவது ரங்கசாமியின் வழக்கம். பாப்ஸ்கோ, பாசிக், கூட்டுறவு சங்க ஊழியர்கள் போல் இவர்களையும் நடுத்தெருவில் ரங்கசாமி நிறுத்தப்போகிறார். அவர் விளம்பர அரசியல் செய்வது எடுபடாது. ரேஷன் கடைகளை திறந்து மானிய விலையில் பொருட்களை தருவதாகக்கூறி விட்டு ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதியம் தராதது ஏன்,  நான் எழுப்பிய எந்த குற்றச்சாட்டுக்கும் ரங்கசாமி பேரவையில் வாயே திறக்கவில்லை. அதேபோல் புதுவையில் எத்திட்டத்திலும் பயன் அடையாத சிவப்பு ரேஷன் அட்டை வைத்துள்ள மகளிருக்கு ரூ. 1000 திட்ட விதிமுறைகளால் எந்த மகளிருக்கும் பயன் தராத வகையில் தவறான திட்டமாக உள்ளது. புதுவையில் பாஜக பிரமுகர் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கவேண்டும் என முன்னாள் நாராயணசாமி கூறினார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண