Trichy East Election : திருச்சி கிழக்கில் போட்டியிடப்போவது யார்.? விஜய் முன் டாப் 3 லிஸ்ட்- யார் யார் தெரியுமா.?
Trichy East Election : தமிழகத்தில் 5 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இதில் திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக சார்பாக யார் போட்டியிடப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அந்த வகையில் விஜய் முன் 3 பேர் கொண்ட பட்டியல் சமர்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் ஆட்சியை பிடித்த தவெக
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவடைந்துள்ளது. இந்த தேர்தலில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் ஆட்சி புரிந்து வந்த திமுக, அதிமுக வீழ்த்தப்பட்டுள்ளது. நடிகர் விஜய் தலைமையிலான தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதனையடுத்து ஆட்சி அமைக்க இன்னும் 10 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், திமுக கூட்டணி கட்சியாக இருந்த காங்கிரஸ் முதல் ஆளாக தவெகவிற்கு பல்டி அடித்தது. அடுத்தது விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் தவெக கூட்டணிக்கு மாறியது. இதே போல அதிமுகவில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 4 எம்எல்ஏக்களும் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்துள்ளனர்.
தவெகவிற்கு கை கொடுத்த திமுக கூட்டணி கட்சிகள்
மேலும் சட்டமன்ற தேர்தலில் தவெக தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டார். எனவே இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்ற நிலையில், திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்துள்ளார். அந்த வகையில் இந்த தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அதிமுக எம்எல்ஏக்கள் 4 பேர் திருச்சி கிழக்கு ஒரு தொகுதி என மொத்தம் 4 தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
எனவே இந்த 5 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் தவெக உள்ளது. அந்த வகையில் தவெக வெற்றி பெறும் பட்சத்தில் தவெகவிற்கு ஏற்கனவே 107 தொகுதிகள் உள்ள நிலையில் இந்த 5 தொகுதிகளிலும் வெற்றி பெற்றால் 112 என்ற இலக்கை எட்ட முடியும். எனவே வரும் காலத்தில் கூட்டணி கட்சிகள் பல்டி அடித்தால் ஒரு சில கட்சிகளின் உதவியோடு சமாளிக்க வாய்ப்பானது உருவாகும்.
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்
இதே போல அடிபட்ட சிங்கம் போல் காத்திருக்கும் திமுக மற்றும் அதிமுகவும் இந்த 5 தொகுதிகளில் வெற்றி பெற்று தவெகவிற்கு மக்களிடம் செல்வாக்கு இல்லையென்பதை காட்ட திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் திமுகவும், அதிமுகவும் தற்போதே வேட்பாளர்கள் தேர்வை ரகசியமாக தொடங்கியுள்ளது. அதே நேரம் தவெக தலைவர் விஜய் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதியில் யாரை களத்தில் இறக்கலாம் என ஆலோசனை நடத்தி வருகிறார். அந்த வகையில் விஜய் முன் 3 பேர் கொண்ட பட்டியல் சமர்பிக்கப்பட்டுள்ளது. அதில் முன்னாள் அமைச்சர் கு.பி. கிருஷ்ணனின் மகன் சிரஞ்சீவி பெயர் முதலிடத்தில் உள்ளது. திருச்சி கிழக்கில் விஜயக்கு மாற்று வேட்பாளராக சிரஞ்சீவி பெயரே அறிவிக்கப்பட்டது. மேலும் விஜய் திருச்சி கிழக்கில் வெற்றி பெற்ற நிலையில், விஜய் சார்பாக வெற்றி சான்றிதழை சிரஞ்சீவியே பெற்றுக்கொண்டார்.
திருச்சி கிழக்கு போட்டியிடப்போவது யார்.?
அடுத்தாக திருச்சி கிழக்கு தவெக பொறுப்பாளர் கரிகாலன் பெயர் அடிபடுகிறது. திருச்சி கிழக்கில் விஜய்யின் வெற்றிக்கு முக்கிய பாங்காற்றியுள்ளார் விஜய் ரசிகர் மன்றத்தில் இருந்து தற்போது தவெகவை தொடர்ந்து விஜய்யோடு பயணம் செய்து வருகிறார். அடுத்தாக முன்னாள் அதிமுக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பெயர் அடிபடுகிறது. ஏற்கனவே திருச்சி கிழக்கில் அதிமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சராக இருந்துள்ளார். தற்போது தவெகவில் இணைந்துள்ள நிலையில், வெல்லமண்டி நரடாஜன் அல்லது அவரது மகன் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. ஆனால் முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய் என்ன முடிவெடுக்கப்போகிறார் என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ட்ரெண்டிங் செய்திகள்




















