பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் புதிய தலைவராக மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஒருமனதாக இன்று தேர்வு செய்யப்பட்டார். சென்னையை அடுத்த திருவேற்காட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் தற்போதைய தலைவர் ஜி.கே.மணி தலைமையில் தொடங்கியது. இக்கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், அணிகள், சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் சிறப்பு அழைப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


இந்தநிலையில், பாமகவின் புதிய தலைவராக மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தற்போது வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 


முதலமைச்சர் முக ஸ்டாலின் : 


பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! சமூகநீதிப் பாதையில் பாட்டாளி மக்களின் முன்னேற்றத்திற்காகத் தொடர்ந்து பாடுபட வாழ்த்துகிறேன்!






எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி : 


பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டிருக்கும், மரியாதைக்குரிய நாடாளுமன்ற உறுப்பினர், அன்பு சகோதரர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கும், புதிய தலைவரை தேர்வு செய்திருக்கும் அவரது கட்சித் தொண்டர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.






தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை : 


பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மருத்துவர் டாக்டர் திரு.அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு தமிழ்நாடு பாஜக சார்பாக என் வாழ்த்துக்கள்!அவர் பணி சிறக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன் மருத்துவர் இராமதாசு அய்யா அவர்களுக்கும் என் வணக்கத்தினை தெரிவித்துக் கொள்கின்றேன். 






 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண