காவிரி போராட்டம்- உதயநிதியை கைது 

காவிரி விவகாரம் தொடர்பாக தஞ்சையில் நேற்று நடைபெற்ற போராட்டத்தில் பேசிய திமுக இளைஞர் அணி செயலாளரும், எதிர்கட்சி தலைவருமான உதயநிதி, நடிகை திரிஷா தொடர்பாக இரட்டை அர்த்தத்தில் பேசியதாக புகார் கூறப்பட்டது. இதனையடுத்து உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள். மேலும் சமூகவலைதளத்தில் உதயநிதிக்கு எதிராக தவெகவினரும் கருத்துகளை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் இன்று காலை நீலாங்கரையில் உள்ள உதயநிதியின் வீட்டு முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Continues below advertisement

உதயநிதி கைது.?

அந்த வகையில் இணை ஆணையர் விஜயகுமார் தலைமையில் போலீசார் உதயநிதி வீட்டிற்குள் சென்றனர். அப்போது சட்ட ரீதியாக உதயநிதியை கைது செய்ய வந்துள்ளதாக உதயிநிதியின் மனைவிடம் போலீசார் தெரிவித்தனர். அப்போது அங்கிருந்த முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன், தஞ்சை வரை அழைத்து செல்ல உள்ளீர்கள், சிறிது நேரத்தில் வந்துவிடுவார் என தெரிவித்தார். இதனையடுத்து போலீசாருக்கும் திமுகவினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனிடையே உதயநிதி கைது தொடர்பான தகவலை கேள்விப்பட்ட திமுகவினர் நீலாங்கரை முன்பு குவிந்து வருகிறார்கள்.. நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், இந்த கைது நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement