மேலும் அறிய

24 மணி நேரத்தில் 5 கொலைகள்! தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு எங்கே? அன்புமணி ராமதாஸ் கடும் குற்றச்சாட்டு!

தமிழ்நாட்டில் திரும்பிய திசையெல்லாம் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை என அடுத்தடுத்து குற்றங்கள் நிகழ்வதும், அவற்றைத் தடுக்க வக்கற்ற அரசாக திமுக அரசு திகழ்வதும் கண்டிக்கத்தக்கது.

சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகவும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி கொலைகளில் செழிப்பதாகவும் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்., 

சென்னை பல்லாவரத்தை அடுத்த திரிசூலம் பகுதியில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த இருவர் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பதும், ஊத்தங்கரை அருகில் முதியவர் படுகொலை செய்யப்பட்டு அவரது மனைவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதும் அதிர்ச்சியளிக்கின்றன. தமிழ்நாட்டில் திரும்பிய திசையெல்லாம் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை என அடுத்தடுத்து குற்றங்கள் நிகழ்வதும், அவற்றைத் தடுக்க வக்கற்ற அரசாக திமுக அரசு திகழ்வதும் கண்டிக்கத்தக்கது.

திரிசூலம் துளசிலிங்க முதலியார் தெருவில் உள்ள ஆறுமுகம் என்பவரின் வீட்டுக்குள் புகுந்த கும்பல் ஒன்று அங்கு உறங்கிக் கொண்டிருந்த ஆறுமுகம், சந்தோஷ் ஆகிய இருவரை வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளது. சுங்குவார் சத்திரத்தில் கடந்த ஆண்டு திமுக நிர்வாகி ஒருவர் படுகொலை செய்யப்பட்டதற்கு பழிவாங்கும் வகையில் தான் இந்த படுகொலைகள் நிகழ்ந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

அதேபோல், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த ஓபகவலசை கிராமத்தில் தோட்டத்து வீட்டில் வாழ்ந்து வந்த கண்ணப்பன் என்ற 74 வயது முதியவரை கொலை செய்த கும்பல், அவரது மனைவியை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறது. இந்த இரு நிகழ்வுகளிலும் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கைது ஆகாஷ் படுகொலை செய்யப்பட்ட பதட்டம் அடங்குவதற்கு முன்பாகவே முனீஸ்வரன் என்ற தானி ஓட்டுனர் கொடூரமான முறையில் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். கும்மிடிப்பூண்டி பகுதியில் உள்ள ஈழத்தமிழர் முகாமில் அதன் தலைவரான சிவக்குமார் என்பவர் 6 பேர் கொண்ட கும்பலால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என எந்தத் திசையில் பார்த்தாலும் கொலைகளும், கொள்ளைகளும் தான் நடந்து கொண்டிருக்கின்றன. பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து விட்டன. கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற எந்தக் கொலையில் திடீரென உணர்ச்சிவசப்பட்டு செய்யப்பட்ட கொலைகள் அல்ல. அனைத்தும் திட்டமிட்டும், மது போதையிலும் செய்யப்பட்ட கொலைகள் தான். காவல்துறையினர் விழிப்புடன் இருந்திருந்தால் இந்தக் கொலைகளைத் தடுத்திருக்க முடியும். ஆனால், செயலற்ற திமுக அரசின் கீழ் செயல்படும் காவல்துறை இந்தக் கொலைகளை தடுக்க திறனில்லாமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

அண்மைக்காலங்களில் தோட்டத்து வீடுகளில் தனியாக வாழ்ந்து வரும் பெரியவர்கள் திட்டமிட்டு படுகொலை செய்யப்படுகின்றனர். 2024-ஆம் ஆண்டு நவம்பர் 28-ஆம் தேதி திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள சேமலைக்கவுண்டன்பாளையம் கிராமத்தில் தோட்டத்து வீட்டில் வசித்து வந்த 78 வயது தெய்வசிகாமணி, அவரது மனைவி அலமாத்தாள், செந்தில்குமார் ஆகிய மூவரும் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டு, நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. அதன்பின், 2025 மே மாதத் தொடக்கத்தில் ஈரோடு மாவட்டத்தின் விளாங்காட்டு வலசு கிராமத்தில் தோட்டத்து வீட்டில் தனியாக வாழ்ந்து வந்த முதிய இணையரான ராமசாமி, பாக்கியலட்சுமி ஆகியோரை கொள்ளையர்கள் கொலை செய்து விட்டு, 15 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இக்கொலை வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்படாதது குறித்து பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து குரல் எழுப்பி வந்தது. அதைத் தொடர்ந்து விளாங்காட்டு வலசு கொலை வழக்கில் தொடர்புடையதாக ஆச்சியப்பன், மாதேஸ்வரன் , ரமேஷ், ஞானசேகரன் ஆகிய நால்வரை கைது செய்த காவல்துறையினர், இவர்கள் தான் சேமலைக்கவுண்டன்பாளையத்தில் மூவரையும் கொலை செய்ததாகக் கூறி வழக்குகளை முடித்தனர். அப்போதே அவர்கள் தான் உண்மையான கொலையாளிகளா? என்பது குறித்து ஐயங்கள் எழுப்பப்பட்டன.

அடுத்த சில வாரங்களில் பரமத்தி அருகே தோட்டத்தில் உறங்கிக் கொண்டிருந்த இன்னொருவர் படுகொலை செய்யப்பட்டார். இந்தப் படுகொலையும் முன்பு நடந்த கொலைகளை ஒத்திருந்ததால், அந்தக் கொலை வழக்குகளில் உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என்பது உறுதியானது. இப்போது அதேபோன்ற படுகொலை ஊத்தங்கரை அருகில் நிகழ்ந்திருப்பதால் இந்த குற்றச்சாட்டு ஐயத்திற்கு இடமின்றி உறுதியாகியுள்ளது. தொடர்ந்து நடைபெற்று வரும் இத்தகைய கொலைகளால் தோட்டத்தில் வாழும் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

ஒருபுறம் எங்கும் கொலைகள், எதிலும் கொலைகள் என தமிழ்நாடு வாழத்தகுதியற்ற மாநிலமாக மாறி வரும் நிலையில், இது குறித்து எந்தக் கவலையும் இல்லாமல் ஆளும் திமுக நாள்தோறும் விதவிதமாக கொண்டாட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது, ரோம் மாநகரம் தீப்பற்றி எரிந்த போது ஃபிடில் வாசித்துக் கொண்டிருந்த நீரோ மன்னனின் நவீன அவதாரமாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உருவெடுத்திக்கிறார். இப்படி ஒரு நிலை உருவாகியிருப்பது நிச்சயமாக தமிழ்நாட்டின் சாபக்கேடு தான்.

திமுக மட்டும் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது. அப்படி ஒரு நிலை ஏற்பட்டு விடக் கூடாது என்பது தான் தமிழ்நாட்டு மக்களின் கவலையாக உள்ளது. தமிழ்நாட்டு மக்கள் தங்களின் கவலையை போக்கும் வகையிலான தீர்ப்பை வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அளிப்பார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

தொகுதி மறுசீரமைப்பு சதி? - கோவையில் ப.சிதம்பரம் பரபரப்பு குற்றச்சாட்டு
தொகுதி மறுசீரமைப்பு சதி? - கோவையில் ப.சிதம்பரம் பரபரப்பு குற்றச்சாட்டு
காஞ்சிபுரம் மக்கள் இழந்த பணத்தை மீட்கத் தமிழக அரசு தவறிவிட்டது: த.வெ.க. வேட்பாளர் குற்றச்சாட்டு!
காஞ்சிபுரம் மக்கள் இழந்த பணத்தை மீட்கத் தமிழக அரசு தவறிவிட்டது: த.வெ.க. வேட்பாளர் குற்றச்சாட்டு!
திமுக, காங்கிரஸை கடுமையாக தாக்கிய அண்ணாமலை – கோவையில் சூடான அரசியல்
திமுக, காங்கிரஸை கடுமையாக தாக்கிய அண்ணாமலை – கோவையில் சூடான அரசியல்
பதட்டத்தில் எதிர்க்கட்சிகள்.? - கோவையில் செங்கோட்டையன் சூடான பேச்சு
பதட்டத்தில் எதிர்க்கட்சிகள்.? - கோவையில் செங்கோட்டையன் சூடான பேச்சு
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: ”சேலத்தைப் புறக்கணிக்கவில்லை!ஸ்டீல் போல திட்டங்களைச் செயல்படுத்தினோம்
MK Stalin: ”சேலத்தைப் புறக்கணிக்கவில்லை!ஸ்டீல் போல திட்டங்களைச் செயல்படுத்தினோம்" முதல்வர் ஸ்டாலின் அதிரடி!
Premalatha slams Vijay: ”நீங்க ஹீரோ இல்லை. லிட்டில் பாய்.. ”விஜயை தாக்கி பேசிய பிரேமலதா..
Premalatha slams Vijay: ”நீங்க ஹீரோ இல்லை. லிட்டில் பாய்.. ”விஜயை தாக்கி பேசிய பிரேமலதா..
Kamal Haasan:
Kamal Haasan: "திமுகவை திட்ட மாட்டேன்..." கமல் சொன்ன காரணம்! வியப்பாக பார்த்த தொண்டர்கள்
MK Stalin: ராமதாஸை வேதனையில் தவிக்கவிட்டு.. அன்புமணியை சாடிய முதலமைச்சர் ஸ்டாலின்!
MK Stalin: ராமதாஸை வேதனையில் தவிக்கவிட்டு.. அன்புமணியை சாடிய முதலமைச்சர் ஸ்டாலின்!
TVK Vijay: உடனே வீட்டுக்கு போங்க.. சென்னை பரப்புரையை பாதியிலேயே ரத்து செய்த விஜய்.. என்ன காரணம்?
TVK Vijay: உடனே வீட்டுக்கு போங்க.. சென்னை பரப்புரையை பாதியிலேயே ரத்து செய்த விஜய்.. என்ன காரணம்?
TVK Vijay: தோனியாக மாறிய விஜய்.. பரப்புரையில் சிக்சர் மேல் சிக்கர்.. நீங்களே பாருங்க
TVK Vijay: தோனியாக மாறிய விஜய்.. பரப்புரையில் சிக்சர் மேல் சிக்கர்.. நீங்களே பாருங்க
தமிழக சட்டசபை தேர்தல் 2026: மு.க.ஸ்டாலின் 6ம் கட்ட பிரசார அட்டவணை வெளியீடு
தமிழக சட்டசபை தேர்தல் 2026: மு.க.ஸ்டாலின் 6ம் கட்ட பிரசார அட்டவணை வெளியீடு
Arjun Das: கட்டுக்கட்டாக பணம்.. தேர்தல் பறக்கும்படையிடம் சிக்கிய அர்ஜூன் தாஸ்.. பரபரப்பு வீடியோ!
Arjun Das: கட்டுக்கட்டாக பணம்.. தேர்தல் பறக்கும்படையிடம் சிக்கிய அர்ஜூன் தாஸ்.. பரபரப்பு வீடியோ!
Embed widget