"அய்யா பாமக என்ற பெயரில் புதிய கட்சியை ராமதாஸ் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது"
பாமக உட்கட்சி பஞ்சாயத்து
தமிழ்நாட்டின் மிக முக்கிய கட்சிகளின் ஒன்றாக இருக்கக்கூடிய பாட்டாளி மக்கள் கட்சி, கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகிய இருவருக்கிடையே ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக, இரு பிரிவுகளாக பிரிந்து செயல்பட்டு வருகிறது. ஆனால் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் 95 சதவீதத்திற்கும் மேல் அன்புமணி தரப்பில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அன்புமணி நடத்திய பொதுக்குழுவிற்கு, தேர்தல் ஆணையம் அங்கீகாரம் கொடுத்திருப்பதாகவும் மாம்பழம் சின்னம் தங்களிடம் இருப்பதாகவும் அன்புமணி தரப்பு கூறி வருகிறது.
அன்புமணி தலைமையில் பாமக..
இந்தநிலையில் அன்புமணி தரப்புக்கு மாம்பழம் சின்னம் கிடைத்துள்ள நிலையில், தங்களுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் ராமதாஸ் தரப்பு நாடி உள்ளது. தேர்தல் ஆணையத்தில் இருந்து மாம்பழம் சின்னம் கிடைக்கவில்லை என்றால் நீதிமன்றத்திற்கு செல்லவும் முடிவு எடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் தரப்பு நிர்வாகிகள் கூறுகையில், பாமக என்பது அதிகாரவபூர்வமாக அன்புமணி தலைமையில் இயங்குகிறது என தெரிவித்து வருகின்றனர்.
புது கட்சி தொடங்குகிறார் ராமதாஸ் ?
இந்தநிலையில் அய்யா பாட்டாளி மக்கள் கட்சி என்ற பெயரில், புதிய கட்சியை பதிவு செய்வதற்கான பணியில் ஒரு சிலர் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக 100 பேரிடம் பிரமாண பத்திரம், பெறுவதற்கான பணியிலும் ஈடுபட்டு வருவதாக புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. ஒருவேளை தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றம் தங்களுக்கு எதிரான தீர்ப்பு கொடுத்துவிட்டால், தேர்தல் சமயத்தில் ஒரு கட்சி இருக்க வேண்டும் என்பதற்காக ராமதாஸ் தரப்பு நிர்வாகிகள் கட்சியை தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் தேர்தலில் தனிச் சின்னத்திலும் போட்டியிடலாம் என்ற முடிவெடுத்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ராமதாஸ் தரப்பு மறுப்பு
இதுகுறித்து ராமதாஸ் ஆதரவு நிர்வாகிகளிடம் தொடர்பு கொண்டு விசாரித்த போது, பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனராக ராமதாஸ் இருந்து வருகிறார். அவர்தான் கட்சியின் தலைவராகவும் செயல்பட்டு வருவதாகவும், எனவே புது கட்சி தொடங்கும் அவசியம் இல்லை எனவும் தெரிவித்தன