மேலும் அறிய

Pattimandram Raja: “நீங்க என்ன ஆளுங்க?” சாதி பெயரை கேட்ட பட்டிமன்ற பேச்சாளர் ராஜா? - வைரலாகும் பதிவு!

"ஊர் பெயரைக் கேட்டு சாதியை கண்டு கொள்ளும் மட்டமான புத்தி போகவில்லை. காரைக்குடி என்றால் செட்டியார் மட்டும்தான் இருக்கிறார்களா ? வேறு மனிதர்கள் இல்லையா ?"

சாலமன் பாப்பையாவின் புகழ்பெற்ற பட்டிமன்றங்களில் பேசி பிரபலமான பட்டிமன்ற பேச்சாளர் ராஜா என்பவர் ஒருவரின் சாதியை என்னவென்று தெரிந்துகொள்ள, நீங்க என்ன ஆளுக? என்று கேட்டதாக அமெரிக்க வாழ் தமிழர் ஒருவர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

நடந்தது என்ன? கார்த்திகேயன் என்பவரின் பதிவு..!

அந்த பதிவில் ”பட்டிமன்ற பேச்சாளர் ராஜா அமெரிக்க தமிழ் சங்கத்தின் அழைப்பில் அட்லாண்டா சென்றுள்ளார். அவருக்கும் அவரது சக பேச்சாளர் பாரதி பாஸ்கர் அவர்களுக்கும் அட்லாண்டா தமிழ் சங்கத்தின் சார்பாக தமிழ் உணவு தயாரித்துக் கொடுக்கும் பொறுப்பு எனது தங்கைக்கு கிடைத்தது. எனது தங்கை தனது சக தோழியர்கள் உடன் மிகச் சிறப்பான வகையில் சமைத்து எடுத்துச் சென்று இருக்கிறார். 

சாதி என்னவென்று கேட்ட பட்டிமன்ற ராஜா? 

சிறந்த முறையில் அவர்களுக்கு உணவும் பரிமாறி இருக்கிறார்கள். பேச்சாளர் ராஜா இம்மூவரையும் சந்தித்து விசாரித்திருக்கிறார். மூவரிடமும் அவர்கள் ஊரினை விசாரித்திருக்கிறார். ஊர் பெயர் சொன்னவுடன் நீங்கள் இந்த சாதியா என்று கேட்டு இருக்கிறார். எனது தங்கை முறை வரும்போதும் நீங்க எந்த ஊருமா என்று கேட்டு இருக்கிறார். ஐயா நான் காரைக்குடி என்று சொல்லி இருக்கிறார். ஓ நீங்க செட்டியாரா என்று கேட்டிருக்கிறார். எனது தங்கை அமைதியாக இருக்கவும் விட்டிருக்கலாம். ஆனால் தொடர்ந்து நீங்கள் வேற என்ன ஆளுங்க என்றும் கேட்டிருக்கிறார். தங்கை எதுவும் பதில் கூறாமல் அமைதியாக இருக்கவும் தான் அடுத்தவர்களிடம் கேட்டிருக்கிறார். என் தங்கை இதைக் கூறும்போது அழுகையுடன் கூறினாள். சாப்பாடு நல்லா இல்லை என்று சொல்லி இருந்தால் கூட நான் வருத்தப்பட்டு இருக்க மாட்டேன். அங்கு யாருக்குமே நான் என்ன சாதி என்று தெரியாது யாரும் என்னிடம் கேட்டதும் இல்லை. திடீரென்று அப்படி கேட்கவும் ஒரு மாதிரியா ஆயிடுச்சு. வாந்தி வருவது போல் உணர்ந்தேன். அழுகையும் ஆத்திரமும் அடக்கிக் கொண்டு நிற்பது ரொம்பவும் சிரமமாக இருந்தது என்றாள்.

சாதியை கேட்கும் அசிங்கமான செயல் – பதிவர் ஆத்திரம் 

தமிழ்நாட்டில் ஒருவர் சாதி பெயரை கேட்பது அசிங்கமான செயல் என்று படிக்காத பாமரனுக்கும் தெரியும். அவன் தெரிந்து கொள்ள வேண்டுமென்று விரும்பினாலும் நேரடியாக கேட்க மாட்டான். படித்தவர், பட்டிமன்ற பேச்சாளர் , எண்ணற்ற மேடைகளில் பேசியிருக்கிறீர்கள், ஒவ்வொரு தீபாவளி அன்று சாலமன் பாப்பையா பட்டிமன்றத்தில் உங்களது பேச்சை ரசித்து கேட்டவர்களில் நானும் ஒருவன். என் தங்கையும் அப்படியே அதனால் தான். உங்களுக்காக விழுந்து விழுந்து சமைத்து எடுத்து கொண்டு சென்று இருக்கிறார்.

இந்த சாதி மத இன சனியன்களை விட்டு தள்ளி வாழ்வோம் என்று தான் என் தங்கை போன்றவர்கள் படித்து திறமை வளர்த்துக்கொண்டு அமெரிக்கா போன்ற நாடுகளில் செட்டில் ஆகிறார்கள். அங்கேயும் உங்களது ஈன புத்தியை கொண்டு வந்து காட்டுவீர்களா ?!

”ஊரை வைத்து சாதியை கண்டுகொள்ளும் மட்டமான புத்தி” 

ஊர் பெயரைக் கேட்டு சாதியை கண்டு கொள்ளும் மட்டமான புத்தி போகவில்லை. காரைக்குடி என்றால் செட்டியார் மட்டும்தான் இருக்கிறார்களா ? வேறு மனிதர்கள் இல்லையா ? அந்தக் கேள்விக்கு அமைதியாக இருந்த பின்னும் விடாமல் நீங்கள் வேறு என்ன ஆள் என்று கொக்கி பட வேண்டிய அவசியம் என்ன ? அப்படி சாதி அரிப்பு கொண்டிருக்கும் நீங்கள் உங்கள் சாதி மக்களிடம் மட்டும் பட்டிமன்ற பேச்சை நடத்துங்களேன். அமெரிக்காவில் சாதிகளை மறந்து தமிழர்களாய் இணைந்து ஒரு சங்கம் வைத்து அந்த சங்கத்திற்கு பேச கூப்பிட்டால் அங்கேயும் வந்து உங்களது சாதி வன்மத்தை தான் காட்டுவீர்களா ?!

சமைத்தவரின் சாதியை கேட்பதில் என்ன ஆர்வம் ராஜா? 

சமைத்துக் கொடுத்தவர் என்ன சாதி என்று தெரிந்து கொள்வதில் அப்படி என்னயா ஆர்வம் ? உங்க நல்ல நேரம் என்னை போன்றவர்களிடம் நீங்கள் சிக்காமல் போனீர்கள். சிக்கி இருந்தீர்கள் என்றால் உங்களது சாதி வன்மத்தை தோல் உரித்து மூஞ்சியில் அடித்தால் போன்று நாக்க புடுங்குற மாதிரி நாலு கேள்வி கேட்டிருப்பேன்” என அந்த பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.

இதுவரை விளக்கம் கொடுக்காத பட்டிமன்ற ராஜா

பிரபலமான பட்டிமன்ற பேச்சாளரும் திரை நடிகருமான பட்டிமன்ற ராஜா மீது சாதியை கேட்டதாக பரபரப்பான புகாரை பொதுவெளியில் ஒருவர் வைத்திருக்கும் நிலையில், இதுவரை ராஜா தரப்பில் இருந்து இதற்கு விளக்கமோ, மறுப்போ வரவில்லையென்பது குறிப்பிடத்தக்கது

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

’கொள்கை எதிரியுடன் கூட்டணியா?’ விஜய் எடுக்கப்போகும் முடிவு என்ன? –பரபரப்பில் தமிழக அரசியல்..!
’கொள்கை எதிரியுடன் கூட்டணியா?’ விஜய் முடிவு என்ன? –பரபரப்பில் தமிழக அரசியல்..!
Anbumani Vs Ramadoss : அவருக்கு 87 வயசாகிடுச்சு.. சரியான முடிவை எடுக்க முடியாது- நீதிமன்றத்தில் போட்டுடைத்த அன்புமணி
அவருக்கு 87 வயசாகிடுச்சு.. சரியான முடிவை எடுக்க முடியாது- நீதிமன்றத்தில் போட்டுடைத்த அன்புமணி
Vijay Constituency ’இறுதியானது விஜய் போட்டியிடும் தொகுதி’ TVK நிர்வாகிகளின் தொகுதிகள் இதுதான்..!
’இறுதியானது விஜய் போட்டியிடும் தொகுதி’ TVK நிர்வாகிகளின் தொகுதிகள் இதுதான்..!
24 மணி நேரத்தில் 5 கொலைகள்! தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு எங்கே? அன்புமணி ராமதாஸ் கடும் குற்றச்சாட்டு!
24 மணி நேரத்தில் 5 கொலைகள்! தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு எங்கே? அன்புமணி ராமதாஸ் கடும் குற்றச்சாட்டு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”
Trisha vs Parthiban | ”உங்க தரம் தெரிஞ்சிருச்சு! இதெல்லாம் JOKE-ஆ” பார்த்திபனை பொளந்த த்ரிஷா
ஜனநாயகன் ரிலீஸ் தேதி ரசிகர்களுக்கு GOOD NEWS குறுக்க இந்த தேர்தல் வந்தா...
”கூட்டணிக்கு வாங்க விஜய்” சீனுக்கு வந்த பவன் கல்யாண்! NDA கூட்டணியில் தவெக?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VIJAY : நாளைக்கே டெல்லிக்கு வந்தாகனும்.! விஜய்யை விடாமல் துரத்தும் சிபிஐ- கரூரில் சம்பவத்தில் திடீர் ட்விஸ்ட்
நாளைக்கே டெல்லிக்கு வந்தாகனும்.! விஜய்யை விடாமல் துரத்தும் சிபிஐ- கரூரில் சம்பவத்தில் திடீர் ட்விஸ்ட்
Crude Oil Price Hike Vs Trump: செய்யுதறதையும் செஞ்சுட்டு பேச்ச பாரு; கச்சா எண்ணெய் விலை உயர்வு; ட்ரம்ப் சொன்ன அசால்ட் பதில்
செய்யுதறதையும் செஞ்சுட்டு பேச்ச பாரு; கச்சா எண்ணெய் விலை உயர்வு; ட்ரம்ப் சொன்ன அசால்ட் பதில்
10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; சாட்ஜிபிடி மூலம் காப்பி- ஆசிரியர்களே மாணவர்களுக்கு உதவிய அவலம்!- அதிர்ச்சி பின்னணி!
10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; சாட்ஜிபிடி மூலம் காப்பி- ஆசிரியர்களே மாணவர்களுக்கு உதவிய அவலம்!- அதிர்ச்சி பின்னணி!
Iran Supreme Leader Mojtaba: ட்ரம்ப் வார்னிங்கை கண்டுகொள்ளாத ஈரான்; உச்ச தலைவரான கமேனி மகன் மொஜ்தபா; என்ன ஆகுமோ.?
ட்ரம்ப் வார்னிங்கை கண்டுகொள்ளாத ஈரான்; உச்ச தலைவரான கமேனி மகன் மொஜ்தபா; என்ன ஆகுமோ.?
Hyundai Verna: டிசைன், டெக், சேஃப்டி என 25 அப்டேட்கள் - புது வெர்னா எப்படி இருக்கு? விலையில் என்ன மாற்றம்?
Hyundai Verna: டிசைன், டெக், சேஃப்டி என 25 அப்டேட்கள் - புது வெர்னா எப்படி இருக்கு? விலையில் என்ன மாற்றம்?
Volkswagen New SUV: பிரெஸ்ஸா, வென்யூவுக்கு செக்.! கைலாக் பிளாட்ஃபார்மில் புதிய SUV-ஐ இறக்கும் வோல்க்ஸ்வேகன்
பிரெஸ்ஸா, வென்யூவுக்கு செக்.! கைலாக் பிளாட்ஃபார்மில் புதிய SUV-ஐ இறக்கும் வோல்க்ஸ்வேகன்
Fronx CNG Finance Plan: ரூ.15,000 தான் EMI; மாருதி ஃபிராங்க்ஸ் CNG கார வாங்க எவ்வளவு முன்பணம் கட்டணும் தெரியுமா.? விவரங்கள் இதோ
ரூ.15,000 தான் EMI; மாருதி ஃபிராங்க்ஸ் CNG கார வாங்க எவ்வளவு முன்பணம் கட்டணும் தெரியுமா.? விவரங்கள் இதோ
Anbumani Vs Ramadoss : அவருக்கு 87 வயசாகிடுச்சு.. சரியான முடிவை எடுக்க முடியாது- நீதிமன்றத்தில் போட்டுடைத்த அன்புமணி
அவருக்கு 87 வயசாகிடுச்சு.. சரியான முடிவை எடுக்க முடியாது- நீதிமன்றத்தில் போட்டுடைத்த அன்புமணி
Embed widget