தமிழ்நாட்டில் முக்கிய கட்சியாக பாட்டாளி மக்கள் கட்சி செயல்பட்டு வருகிறது. பாமக என்ற கட்சி தூங்குவதற்கு, மருத்துவர் ராமதாஸ் தலைமையிலான வன்னியர் சங்கம் நடத்திய, சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டம் தான் காரணமாக அமைந்தது. அதன் பிறகு பாமக என்ற கட்சி உருவாகியது. 


10.5 சதவீத இட ஒதுக்கீடு:


தொடர்ந்து வன்னியர்கள் உள்ளடக்கிய மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. தொடர்ந்து பாமக வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என பல்வேறு கட்ட போராட்டங்களில் செய்து வந்தது. இந்த க்ஷநிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு, வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. தரவுகள் இல்லாததால் நீதிமன்றம், வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5% உள் இட ஒதுக்கீடு ரத்து செய்தது.


பாமக தொடர் போராட்டம்: 


சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் மற்றும் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு தர வேண்டும் என பாமக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. தற்போது முதலமைச்சராக இருக்கும் ஸ்டாலினை பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் பலமுறை நேரில் சந்தித்து கோரிக்கையும் வைத்தனர். 


தற்போது பாட்டாளி மக்கள் கட்சி சாதி வாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என தனது கோரிக்கையை பலப்படுத்தத் தொடங்கியுள்ளது. குறிப்பாக பாமகவின் தலைவராக இருக்கக்கூடிய அன்புமணி ராமதாஸ், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் பிற கட்சியினரை ஒருங்கிணைக்க தொடங்கியுள்ளார். இதன் மூலம் தமிழ்நாடு அரசு அழுத்தம் தரவும் முடிவு செய்துள்ளார். 


தலைவர்களை ஒருங்கிணைக்கும் அன்புமணி:


இதன் முதற்கட்டமாக நாளை சென்னை வள்ளுவர் கோட்டத்தில், சாதி பாறை கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசு வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் சமூக நீதி கூட்டமைப்பு கட்சிகள் இணைந்து, தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற உள்ளது. 


இந்த தொடர் முழுக்க போராட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் முன்னாள் அமைச்சர் ஜி.செந்தமிழன், புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி, இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் இரவி பச்சமுத்து, புதிய நீதிக் கட்சியின்டாக்டர் கோ.சமரசம், தென்னிந்திய பார்வர்டு தலைவர் திருமாறன்ஜி, கொங்கு மக்கள் முன்னணியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம், தமிழர் தேசம் கட்சித் தலைவர் கே.கே.எஸ் செல்வக்குமார், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக இணைப் பொதுச்செயலாளர் தமிழரசன், தமிழ்நாடு யாதவ மகாசபை செயலாளர் வழக்கறிஞர் சேது மாதவன், வெள்ளாளர் முன்னேற்றக்கழகத் தலைவர் அண்ணா சரவணம், தமிழ்நாடு நாடார் சங்கத் தலைவர் முத்து இரமேஷ், புரட்சித் தமிழகம் பறையர் பேரவை சார்பில் அதன் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.


2026 கணக்கு இல்லாமல் இருக்குமா ?


சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கருத்தரங்குகள் மற்றும் கூட்டங்களை நடத்த அன்புமணி திட்டம் தீட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பாமக சார்பில் மட்டுமில்லாமல், கூட்டமைப்பாக இந்த செயல் திட்டத்தை மேற்கொள்ள இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 


இது தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி வட்டாரங்களில் தொடர்பு கொண்டு விசாரித்த போது, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவில்லை என்றால், தமிழ்நாட்டில் உள்ள 69% இட ஒதுக்கீடுக்கு ஆபத்து ஏற்படும். எனவே இதுகுறித்து அனைத்து சமுதாய மக்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்த எங்கள் கட்சித் தலைவர் முடிவு செய்துள்ளார். இதற்காக தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்ய உள்ளார். இதன் பின்னணியில் தேர்தல் அரசியல் இல்லை எனவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். 


தொடர்ந்து, அன்புமணியின் இந்த செயல்பாடுகள் ஆளும் அரசுக்கு தலைவலியை ஏற்படுத்தும், என்ற ரிப்போர்ட் திமுக சென்றுள்ளதாம். இந்த விவகாரத்தில் அரசியல் இல்லை என்று, பாமக விளக்கம் அளித்தாலும், 2026 தேர்தல் நெருங்கும் நிலையில், அரசியல் நோக்கர்கள் தொடர்ந்து இந்த செயல்பாட்டை உற்று நோக்கி வருகின்றனர்.