அதிமுகவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின் கட்சிக்குள் ஏற்பட்ட உட்கட்சி விவகாரத்திற்கு பின்பு அதிமுக பல்வேறு பிளவுகளை சந்தித்தது. இதில் ஓபிஎஸ், இபிஎஸ், சசிகலா என பல்வேறு பிரிவு ஏற்பட்டு இறுதியில் கட்சியை இபிஎஸ் கைப்பற்றியுள்ளார். ஆனால் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாங்களும் அதிமுகவை சேர்ந்தவர்கள் என கூறிக்கொள்வதும் அதன்பின் டிடிவி தினகரனுடன் இணைந்து அதிமுகவை மீட்போம் என ஓபிஎஸ் தரப்பில் தேனி மாவட்டத்தில் அவ்வப்போது கூட்டம் மற்றும் ஆலோசை கூட்டமும் நடத்தி வருகின்றனர்.
இந்த சூழலில் தேனியில் அமமுக சார்பில் நடைபெறவிருக்கும் டிடிவி தினகரன் பங்கேற்கும் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை பிரம்மாண்டமாக நடத்த கட்சி நிர்வாகிகளுடன் ஓ.பிஎஸ் ஆலோசனை செய்தார். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் வரும் 24ம் தேதி வருகிறது. இந்த பிறந்த நாளை ஒட்டி தேனியில் அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொள்ளும் பொது கூட்டம் நடைபெற உள்ளது. இந்த பொது கூட்டத்தில் ஓபி,=எஸ்க்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இந்த அழைப்பினை ஏற்று ஓபிஎஸ் டிடிவி தினகரனுடன் இணைந்து கலந்து கொள்கிறார்.
இந்த பொதுகூட்டத்திற்காக இன்று தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் உள்ள ஓபிஎஸ்-ன் தனது பண்ணை வீட்டில் நகர செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் 24ம் தேதி ஜெயலலிதாவின் பிறந்த நாளை விமரிசையாக கொண்டாட வேண்டும் என்றும், நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
பின்னர் வரும் 24,ம் தேதி தேனியில் நடைபெறும் கூட்டத்தில் டிடிவி தினகரனுடன் ஒன்றாக இனைந்து கலந்து கொள்ள உள்ளதாகவும், இந்த கூட்டத்திற்கு நமது அணியினர் அதிகளவில் கட்சியினைரை திரட்டி வர வேண்டும் என கேட்டு கொண்டார். கடந்த ஆண்டு இதே ஜெயலலிதா பிறந்த நாளில் தேனியில் நடைபெற்ற கூட்டத்தில் டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் ஒன்றாக கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.