மேலும் அறிய

EPS vs SPV: காலியாகும் இபிஎஸ் கூடாரம்.! எஸ்பி வேலுமணியிடம் தாவிய 30 எம்எல்ஏக்கள்- அதிமுகவில் திடீர் திருப்பம்

EPS vs SPV: தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியை தழுவிய நிலையில், உட்கட்சி மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனையடுத்து இபிஎஸ்க்கு ஆதரவாக 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்திருப்பது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தலில் அதிமுக தோல்வி

தமிழக சட்டமன்ற தேர்தல் நடந்து முடிவடைந்துள்ள நிலையில், தவெக ஆட்சியை கைப்பற்றியது. கடந்த திமுக ஆட்சியில் எதிர்கட்சியாக தொடர்ந்து வந்த அதிமுக, 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் அதிமுகவிற்குள் மோதல் உருவாகியுள்ளது. அந்த வகையில் எடப்பாடி பழனிசாமியின் தலைமை தான் தோல்விக்கு காரணம் என அதிமுக மூத்த நிர்வாகிகள் விமர்சிக்க தொடங்கியுள்ளனர். அந்த வகையில் தேர்தல் முடிவு வந்த அடுத்த நாளே எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி தலைமையில் 30க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கினார். 

போட்டி போட்டு இபிஎஸ்- சி.வி.சண்முகம் ஆலோசனை

தினந்தோறும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஒரு அணியும் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார்கள். அப்போது அதிமுகவின் தேர்தல் தோல்விக்க எடப்பாடி பழனிசாமி தான் காரணம் எனவும், சரியான முறையில் கூட்டணி அமைக்காதது உள்ளிட்ட காரணங்களை பட்டியலிட்டு இபிஎஸ்கு எதிராக சி.வி.சண்முகம் ஆவேசமாக பேசினார். இதனையடுத்து இரண்டு பக்கத்திலும் சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றாலும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த நிலையில் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையிலான எம்எல்ஏக்கள் தவெகவிற்கு ஆதரவு தெரிவிக்க முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்று வரும் நிலையில்,  திமுக சட்டமன்ற கட்சி தலைவராக உதயநிதியும், காங்கிரஸ் கட்சி தலைவராக ராஜேஷ், பாமக சட்டமன்ற கட்சி தலைவராக சவுமியா அன்புமணியும், விடுதலை சிறுத்தைகள் சட்டமன்ற கட்சி தலைவராக வன்னி அரசும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதே போல கம்யூனிஸ்ட் மற்றும் முஸ்லிம் லீக் சட்டமன்ற கட்சி தலைவர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால் எதிர்கட்சியாக இருந்த அதிமுகவில் பல முறை கூட்டம் நடைபெற்றும் இன்னும் சட்டமன்ற கட்சி தலைவர் நியமிக்கப்படவில்லை. 

அதிமுகவில் உட்கட்சி பூசல்

இந்த நிலையில் இன்று காலை சட்டமன்றத்திற்குள்‌ முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் போது,  ஒரு தரப்பு எம்எல்ஏக்களும், எஸ்.பி.வேலுமணியுடன் ஒரு தரப்பு எம்எல்ஏக்களும் தனித்தனியாக வந்தனர். இதனையடுத்து எடப்பாடி பழனிசாமி உறுதிமொழி எடுக்க சென்றபோது ஒரு சிலர் மட்டுமே மேஜையை தட்டினார்கள். இதனால் அதிமுகவில் உட்கட்சி பூசல் நிலவிவரும் நிலையில் சட்டப்பேரவையிலும் அது எதிரொலித்தது.

எஸ்பி வேலுமணிக்கு 30 எம்எல்ஏ ஆதரவு

இந்த நிலையில் தற்காலிக சபாநாயகர் கருப்பையாவை சந்தித்த எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்எல்ஏக்கள் 17 பேர் சட்டமன்ற கட்சி தலைவராக நியமிக்க கையெழுத்திட்டு மனு கொடுத்தனர். அதே நேரம் எஸ்.பி.வேலுமணியை சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்க 30 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பிற்கும் இடையே மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதால் அதிமுக இரண்டாக உடையும் நிலை உருவாகியுள்ளது. 

 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Vijay: கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள்; முக்கிய பதிவை வெளியிட்ட முதல்வர் விஜய்!
CM Vijay: கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள்; முக்கிய பதிவை வெளியிட்ட முதல்வர் விஜய்!
TMC Rift: ”கட்சிக்கு நீங்க தான் தலைவர், ஆனா சட்டமன்றத்த நாங்க பாத்துக்குறோம்” மம்தாவுக்கு ஆர்டர் போடும் MLAக்கள்
”கட்சிக்கு நீங்க தான் தலைவர், ஆனா சட்டமன்றத்த நாங்க பாத்துக்குறோம்” மம்தாவுக்கு ஆர்டர் போடும் MLAக்கள்
கலைஞர் படம் ஏன் அகற்றப்பட்டது ? கலைஞர் இல்லாமல் தமிழ் உண்டா ? – வைரமுத்து ஆவேசம்
கலைஞர் படம் ஏன் அகற்றப்பட்டது ? கலைஞர் இல்லாமல் தமிழ் உண்டா ? – வைரமுத்து ஆவேசம்
தகுதி இருந்தும் அங்கீகாரமில்லை: மீன்வளப் பல்கலைக்கழகத்தின் மீது ராமதாஸ் அதிருப்தி!
தகுதி இருந்தும் அங்கீகாரமில்லை: மீன்வளப் பல்கலைக்கழகத்தின் மீது ராமதாஸ் அதிருப்தி!
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TMC Rift: ”கட்சிக்கு நீங்க தான் தலைவர், ஆனா சட்டமன்றத்த நாங்க பாத்துக்குறோம்” மம்தாவுக்கு ஆர்டர் போடும் MLAக்கள்
”கட்சிக்கு நீங்க தான் தலைவர், ஆனா சட்டமன்றத்த நாங்க பாத்துக்குறோம்” மம்தாவுக்கு ஆர்டர் போடும் MLAக்கள்
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.! யார் யார் எந்த மாவட்டத்திற்கு.? இதோ முழு லிஸ்ட்
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.! யார் யார் எந்த மாவட்டத்திற்கு.? இதோ முழு லிஸ்ட்
TN DGP: மக்களை அலறவிடும் குற்றங்கள்..! தினந்தோறும் தொடரும் சோகம் - புதிய டிஜிபி செய்யப்போவது என்ன?
மக்களை அலறவிடும் குற்றங்கள்..! தினந்தோறும் தொடரும் சோகம் - புதிய டிஜிபி செய்யப்போவது என்ன?
வங்கிமீது பழி ஏன்? மகாராஷ்டிராவால் சாத்தியமாகும் பயிர்க்கடன் தள்ளுபடி தமிழகத்தில் ஆகாதது ஏன்? அன்புமணி கேள்வி
வங்கிமீது பழி ஏன்? மகாராஷ்டிராவால் சாத்தியமாகும் பயிர்க்கடன் தள்ளுபடி தமிழகத்தில் ஆகாதது ஏன்? அன்புமணி கேள்வி
TN DGP: சட்ட-ஒழுங்கு டிஜிபியை சிறைத்துறைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு - மகேஷ் குமார் அகர்வால் வருகை..!
சட்ட-ஒழுங்கு டிஜிபியை சிறைத்துறைக்கு மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவு - மகேஷ் குமார் அகர்வால் வருகை..!
School Reopening: கொளுத்தும் வெயில்; உடல்நல பாதிப்பு அபாயம்- பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்கக் கோரிக்கை!
School Reopening: கொளுத்தும் வெயில்; உடல்நல பாதிப்பு அபாயம்- பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்கக் கோரிக்கை!
Maruti Hybrid Cars: லிட்டருக்கு 35+ KM மைலேஜ்..! மார்கெட்டில் 50% ஷேர் பிடிக்கனும் - மாருதியின் மலிவு விலை ஹைப்ரிட் கார்கள்
லிட்டருக்கு 35+ KM மைலேஜ்..! மார்கெட்டில் 50% ஷேர் பிடிக்கனும் - மாருதியின் மலிவு விலை ஹைப்ரிட் கார்கள்
Annamalai: வேகமாக வளர்ந்து அதைவிட வேகமாக வீழ்ந்த அண்ணாமலை - முகத்தை இழக்கும் பாஜக, என்ன பிரச்னை?
வேகமாக வளர்ந்து அதைவிட வேகமாக வீழ்ந்த அண்ணாமலை - முகத்தை இழக்கும் பாஜக, என்ன பிரச்னை?
Embed widget