நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். இவர் திராவிட கட்சிகளின் கொள்கைத் தலைவரான பெரியார் பற்றி கடந்த சில தினங்களுக்கு கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் சீமானுக்கு திராவிட கட்சிகளும், பெரியார் இயக்கங்களும் கடும் கண்டனத்தை சீமானுக்குத் தெரிவித்து வருகின்றனர்.
உருட்டுக்கட்டையுடன் பெண்கள்:
இந்த சூழலில், சீமானுக்கு கண்டனம் தெரிவித்து சென்னையில் உள்ள அவரது வீட்டை முற்றுகையிட பெரியார் இயக்கத்தினர் இன்று முற்றுகையிட்டுள்ளனர். இதனால், சீமான் வீட்டில் பாதுகாப்பிற்காக நூற்றுக்கணக்கான போலீசார் குவிந்துள்ளனர்.
இந்த நிலையில், சீமானுக்கு ஆதரவாக நாம் தமிழர் மகளிர் அணியினர் பலரும் அவரது வீட்டில் குவிந்துள்ளனர். அவ்வாறு குவிந்துள்ள பெண்கள் தங்களது கைகளில் உருட்டுக்கட்டையுடன் உலா வருகின்றனர். இதுகுறித்து, அந்த பெண்கள் கூறியிருப்பதாவது,
பயப்பட மாட்டோம்:
புலியை எதிர்த்து பல பன்னிக்குட்டிகள் வருகிறது. கருத்தியல் ரீதியான மோதினால் கருத்தியல் ரீதியாக மோத வேண்டும். அதை விடுத்து 30 - 40 லட்சம் ஓட்டுகள் வாங்கியவர் வீட்டை நாங்கள் முற்றுகையிடுவோம் என்றால், நாங்கள் பார்த்துக் கொண்டு சும்மாவா இருப்போம்? அதற்கு உங்களுக்கு வக்கு இல்லனா இந்த மிரட்டலுக்கு நாங்கள் பயப்பட மாட்டாம். இதை நாங்கள் வேடிக்கை பாத்துக்கிட்டு இருக்கமாட்டோம்.
அவர்கள் தாக்குதல் நடத்துனா நாங்கள் பதில் தாக்குதல் நடத்துவோம். அதில் மாற்றுக்கருத்தே கிடையாது. நான் என்ன ஆயுதம் எடுக்கனும்னு நீ முடிவு பண்ணும்போது அதே ஆயுதத்தை எடுப்போம். வள்ளுவர் கோட்டத்தில் ஒரு அனுமதி கேட்டோம். அதற்கு காவல் நிலையத்தில் அனுமதி கொடுக்கவில்லை.
யாருக்கான அரசு?
அன்று அனுமதி கொடுக்காத ஸ்டாலின் அரசு இத்தனை பேர் சேர்ந்து ஒருத்தர் வீட்டை முற்றுகையிட எப்படி அனுமதி கொடுத்தார்கள்? இது யாருக்கான அரசு? மக்களுக்கான அரசா? திராவிடர்களுக்கான அரசா? தொடர்ந்து பாலியல் வன்கொடுமை நடந்துகிட்டு இருக்குது. பரந்தூர் விமான நிலையத்திற்கான பதில் என்னனு தெரியல. அதற்கு அனுமதி கொடுக்காத ஸ்டாலின் இதுக்கு மட்டும் எப்படி அனுமதி கொடுக்குறீங்க? இவர் மக்களுக்கானவரா? திராவிட கூட்டத்துக்கானவரா?
பெரியார் பத்தி பேசுனா அது தொடர்பான ஆதாரத்தை நீங்க கொடுக்கனும். அதை விட்டுவிட்டு நீங்க ஏன் அவரு வீட்டை முற்றுகையிட்றீங்க? ஐயா ஸ்டாலின்தான் தன்னை மாத்திகிட்டு சரியான ஆட்சி தரனும். நாங்கள் விடிய காலையில இருந்து இருக்கோம். எல்லா சூழலிலும் தயாராக இருப்பதற்காக கையில் கட்டையுடன் உள்ளோம். நீங்கள் வன்முறையைத் தூண்டனும்னு வந்தால் நாங்கள் அதற்கு தயாராக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.