நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்  சீமான் மீதான பாலியல் புகாரில், இன்று இரவு, சில மணி துளிகளில் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக உள்ளார். அவருடன் , அவரது மனைவி கயல்விழி .ற்றும் வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்தவர்களும் உடன் செல்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவரை கைது செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், நாம் தமிழர் கட்சியின் சட்டப்பிரிவு , தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. 

காவல் நிலையத்தில் ஆஜர்:

சீமானிடம், இன்று இரவு 11 மணி வரை விசாரணை நடத்தப்பட உள்ளதாகவும், அவரிடம் சுமார் 50க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதை பதிவு செய்து நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இதையடுத்து, கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாவும், நாளை சனி மற்றும் நாளை மறுநாள் ஞாயிறு ஆகிய நாட்களில் நீதிமன்றம் விடுமுறை என்பதால், சிறையில் வைக்க திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

ஆனால், நாளை முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் என்பதால், நாளைய தினம் பெரிதும் சர்ச்சையை ஏற்படுத்த வேண்டாம் என்றும், அதனால் கைது செய்ய வாய்ப்பு குறைவு என்று கூறப்படுகிறது. அதனால், இன்று இரவு பொறுத்து இருந்துதான் தெரிய வரும், கைது செய்யப்படுவாரா இல்லையா என்று.

இந்நிலையில், வளசரவாக்கம் காவல் நிலையத்தைச் சுற்றி, நாதகவினர் , குவிந்து வருகின்றனர். இதனால், காவல்துறையினர் , அசாம்பாவிதம் ஏதும் ஏற்படாத வண்ணம் ,  பலர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  இந்த தருணத்தில் , வளசரவாக்கம் பகுதியில், பெரும் பரப்பான சூழல் நிலவுகிறது. 

பாலியல் புகார்:

சீமான் மீது, பிரபல நடிகை அளித்த பாலியல் புகாரில், நேற்று விசாரணாக்கு ஆஜராகுமாறு , வளசரவாக்கம் காவல்துறை தெரிவித்தது. ஆனால், கட்சி பணிகள் காரணமாக ஆஜராகவில்லை என சீமான் தெரிவித்தார். 

இதையடுத்து,  இன்று ஆஜராகுமாறு, சென்னை நீளாங்கரையில் உள்ள சீமான் வீட்டில், நேற்று, நோட்டீஸ் ஒட்டப்பட்டது. ஆனால், அந்த நோட்டீசை , சீமான் வீட்டீல் இருந்தவர்கள் கிழித்தது, காவல்துறையினருடன் தள்ளு முள்ளுவில் ஈடுபட்டது, பெரும் சர்சசையை கிளப்பியது. இதையடுத்து, 2 பேரை காவல்துறையினர் கைது செய்து கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளை பதிவு செய்தனர். 

இந்நிலையில், இன்று தருமபுரியில் கட்சி பணி காரணமாக சென்ற சீமான், அதை முடிவித்துவிட்டு சேலம் விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு வந்தடைந்தார். இதையடுத்து, சென்னை வளசரவாக்கத்தில் உள்ள காவல் நிலையத்தில் விசாரணைக்காக , இன்று இரவு , சில மணி துளிகளில் ஆஜராக உள்ளார்.

இதனால், நாம் தமிழர் கட்சி தலைமையிடமிருந்து, கட்சியினருக்கு , வளசரவாக்கம் காவல் நிலையத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாகவும், பெண்கள பாசறைக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால், நாதகவினர் பலர் குவிந்துள்ளனர். இதன் காரணமாக, ஆயுதப்படை காவலர்கள் பலர் , வளசரவாக்கம் காவல் நிலையத்தில் குவிந்து, தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

கடந்த 2011 ஆம் ஆண்டு நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக பிரபல நடிகை, தன்னை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தியதாக புகார் அளித்தார். ஆனால் சில நாட்களுக்கு வழக்கை வாபஸ் பெறுவதாகவும் வீடியோ வெளியிட்டிருந்தார். இதையடுத்து, கடந்த 2023 ஆம் ஆண்டும் , சீமானுக்கு எதிராக பாலியல் புகாரும், பணம் பறித்தாதாகவும் புகார் கொடுத்தார்

இதற்கிடையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், 2011 ஆம் ஆண்டு புகாரை ரத்து செய்யவேண்டும் என்று உயநீதிமன்றத்தில் மனு கொடுத்தார். ஆனால், நீதிமன்றம் ரத்து செய்யவில்லை.

இதையடுத்து, நீதிமன்றம் 12 வாரங்கள் காலக்கெடு விடுத்ததையடுத்து, வழக்கின் விசாரணையை தீவிரப்படுத்திய காவல்துறை, சீமானுக்கு நேரில் ஆஜராகுமாறு, வளசரவாக்கம் காவல்துறை  சம்மன் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.