மேலும் அறிய
மோடி வந்தாலும் சரி.. அமித்ஷா வந்தாலும் சரி.. தமிழகத்தின் நிரந்தர முதல்வர் ஸ்டாலின் தான்! - பொன்முடி அதிரடி!
தமிழகத்து மக்கள் முதல்வர் ஸ்டாலினை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னால் நான்கரை ஆண்டுகளில் செய்திருக்கக்கூடிய சாதனைகள் தமிழகத்தின் அனைத்து தரப்பு மக்களின் உள்ளங்களில் பதிந்துள்ளது.

முன்னாள் அமைச்சர் பொன்முடி
Source : ABP NADU
விழுப்புரம் : தமிழகத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளில் முதலமைச்சர் ஸ்டாலின் செய்த சாதனைகள் இளைஞர்கள் மாணவர்கள் என அனைத்து தரப்பு மக்கள் மனதில் பதிந்துள்ளதால் தமிழகத்திற்கு அமித்ஷா மோடி யார் வந்து சென்றாலும் கவலை இல்லை தமிழகத்தின் நிரந்தர முதலமைச்சர் ஸ்டாலின் தான் என முன்னாள் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்னைய் நல்லூரில் செயல்பட்டு வரும் அரசு கலைக்கல்லூரியில் கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணிணி வழங்கும் விழா முன்னாள் அமைச்சரும் திமுக துணை பொதுச்செயலாளருமான அமைச்சர் பொன்முடி தலைமையில் நடைபெற்றது. அப்போது கல்லூரி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணியை வழங்கிவிட்டு மேடையில் பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடி.,
பெரியார் அண்ணா கலைஞர் கருணாநிதி வந்த பிறகு முதலமைச்சரின் நடவடிக்கையால் உயர்கல்வி தமிழகத்தில் சாதாரணமாக வளர்ந்து வருவதாகவும், நகையை அடகு வைத்து கல்வி பயின்ற காலம் உண்டு தற்போது தமிழ் புதல்வன் புதுமைப்பெண் திட்டம் மூலம் மாணவர்கள் கல்வி பயில்வதாக பெருமிதமாக தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து பேசிய அவர்., படிக்கும் போதே பொது அறிவை வளர்த்து கொள்ள வேண்டும் மடிக்கணிணியை கொடுத்த உடன் என்ன செய்வீர்கள் என்று தெரியும் நாடகம் பார்ப்பீர்கள் நானும் நாடகம் பார்ப்பேன் ஆனாலும் பொது அறிவை வளர்த்து கொள்ள வேண்டும் என்பதற்காக மடிக்கணிணி வழங்கப்படுவதாக கூறினார்.
தமிழகத்திற்கு பிரதமர் மோடி அனித்ஷா வருகை குறித்த கேள்விக்கு பதிலளித்த பொன்முடி., தமிழகத்திற்கு யார் வந்தாலும் தமிழ்நாடு முக.ஸ்டாலின் தலைமையில்தான் எப்பொழுதும் நிலைத்து நிற்கும். தமிழகத்து மக்கள் முதல்வர் ஸ்டாலினை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னால் நான்கரை ஆண்டுகளில் செய்திருக்கக்கூடிய சாதனைகள் தமிழகத்தின் அனைத்து தரப்பு மக்களின் உள்ளங்களில் பதிந்துள்ளது. தமிழகத்திற்கு யார் வந்தாலும் அதைப்பற்றி கவலை இல்லை. தமிழ்நாட்டின் நிரந்த முதல்வர் முக.ஸ்டாலின் தான் என பொன்முடி தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement























