Vijay vs Nainar Nagendran : பொம்மை, பொம்மை, பொம்மை பார்.! ஜோசப் விஜய் எனும் முதல்வர் பொம்மை பார்- இறங்கி அடிக்கும் நயினார் நாகேந்திரன்
Vijay vs Nainar Nagendran : முருகபக்தர்களுக்கு எதிராக தவெகவின் வாலும் காலும் இப்படி சலங்கைக் கட்டி ஆடிக் கொண்டிருக்க “தலைமை” என்று கூறிக் கொள்ளும் நீங்கள் இதுகுறித்து இன்னும் ஒருவார்த்தைக் கூட பேசாதது ஏன் என முதலமைச்சர் விஜயை பார்த்து நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருப்பரங்குன்றம் தீபம்
திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து சர்ச்சை தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் எப்போதும் தீபம் இடத்திற்கு பதிலாக வேறு இடத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என சர்ச்சை ஏற்பட்டது. இது தொடர்பான வழக்கு மதுரை நீதிமன்றத்தில் வந்த நிலையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீபம் ஏற்பட்ட உத்தரவிட்டார். ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அப்போதையே திமுக அரசு 144 தடை உத்தரவை பிறப்பித்தது. இதன் காரணமாக பாஜகவினர் திருப்பரங்குன்றம் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் தற்போது திமுக அரசு தோல்வி அடைந்துள்ள நிலையில், புதிதாக தவெக அரசு பதவியேற்றுள்ளது. இந்த நிலையில் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் கூறுகையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எந்த நிலை நீடித்ததோ அந்த நிலையே தொடரும் என கூறியிருந்தார்.
ஒரு வார்த்தை கூட பேசாதது ஏன்.?
இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிக்கையில், உயர்நீதிமன்றம் உத்தரவிட்டாலும் கூட திருப்பரங்குன்றத் தீபத்தூணில் கார்த்திகை தீபமேற்ற விடமாட்டோம் என அத்தொகுதியின் தவெக எம்எல்ஏவும் தவெக அமைச்சருமான சி.டி.ஆர்.நிர்மல் குமார் முஷ்டியை மடக்குகிறார், தீபத்தூணை இருளிலேயே வைத்திருப்பது தான் எங்கள் அரசின் நிலைப்பாடு என தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா முட்டுக் கொடுக்கிறார். முருகபக்தர்களுக்கு எதிராக தவெகவின் வாலும் காலும் இப்படி சலங்கைக் கட்டி ஆடிக் கொண்டிருக்க “தலைமை” என்று கூறிக் கொள்ளும் நீங்கள் இதுகுறித்து இன்னும் ஒருவார்த்தைக் கூட பேசாதது ஏன் முதல்வர் விஜய் அவர்களே? தமிழகத்திற்கு உண்மையில் யார் தான் முதல்வர்?
தவெகவின் மதநல்லிணக்க அரசியலா?
உயர்நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொடுத்த தீர்ப்பை மதிக்காமல், ஒரு சாராருக்கு சாதகமாகவும் இந்துக்களுக்கு எதிராகவும் உங்கள் அமைச்சர்கள் இப்படி வாய் வார்த்தைகளால் விளையாடிக் கொண்டிருப்பதை வேடிக்கை பார்ப்பதற்கா மக்கள் உங்களை தேர்ந்தெடுத்தார்கள்? தேர்தலுக்கு முன்பு அமைதி காத்துவிட்டு, ஆட்சியமைத்தவுடன் முருகபக்தர்களின் வழிபாட்டு உரிமைகளுக்கு எதிராக போர்க்கொடி பிடிப்பது தான் தவெகவின் மதநல்லிணக்க அரசியலா? சிறுபான்மையின மக்களின் வாக்குகளைக் கவர்வதற்காக இந்துக்களின் முதுகில் ஏறி அரசியல் சவாரி செய்யலாம் என்ற திமுகவின் அதே கீழ்த்தரமான எண்ணத்தை பிரதிபலிக்கும் நீங்கள், உண்மையில் தூயசக்தி அல்ல ஒரு “துரோகசக்தி” என நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
Before You Go
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
ட்ரெண்டிங் செய்திகள்






















