மதிமுக உயர்நிலைக் குழு அவசர ஆலோசனை கூட்டம்
சென்னை எழும்பூரில் அமைந்துள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகம் வளாகத்தில் மதிமுக அவசர உயர்நிலைக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கட்சியின் அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜுனராஜ் தலைமை தாங்கினார். இதில் பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்பாக மதிமுக முதன்மைச் செயலாளரும், எம்.பி.யுமான துரை வைகோ செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர் ;
தனி சின்னமா , உதயசூரியன் சின்னமா என்பது குறித்தும் உயர்நிலை கூட்டத்தில் பேச உள்ளனர். திமுகவுடன் முதல் கட்ட பேச்சுவார்த்தையில் எங்களது விருப்பத்தை தெரிவித்து உள்ளோம். தொகுதி எண்ணிக்கை , தனி சின்னமா என்பது குறித்து பேசியதை அதனை இன்றை அவசர கூட்டத்தில் விவாதிக்க உள்ளோம்.
கடந்த 9 ஆண்டுகளாக திமுக கூட்டணியில் மதிமுக உள்ளது , நிபந்தனை அற்ற ஆதரவை வழங்கி வருகிறது. தொகுதி பங்கீட்டில் எந்த விதமான காலதாமதமும் இல்லை. திமுக கூட்டணி வலுவான கூட்டணி. கூடுதல் கட்சிகள் வரும் போது வலு சேர்க்கும்.
தொகுதிகள் எண்ணிக்கை குறைய வாய்ப்பு
கடந்த தேர்தலில் போட்டியிட தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்க வேண்டும் சூழல் உருவாகியுள்ளது. பொதுவான நோக்கமான பாஜக தமிழகத்தில் நுழைய கூடாது என்ற அடிப்படையில் இணைந்து உள்ளது. அதற்காக விட்டு கொடுக்க தயாராக உள்ளோம்.
மதிமுக நலனை விட தமிழக நலன் காக்க வேண்டும் என்ற அடிப்படையில் பொது நோக்கில் செயல்படுகிறது. இரு முறை மத்திய அமைச்சர் பதவியை வைகோ வேண்டாம் என்றார். எங்களை பொறுத்த வரை திமுக கூட்டணியில் மதிமுகவால் எந்த பிரச்சனை ஏற்படாது.
சிலிண்டர் பிரச்சனை - துரித நடவடிக்கை வேண்டும்
சிலிண்டர் எரிவாயு பிரச்சனை அத்தியவாசியம் என்பதால் துரித நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும். மாற்று வழிகளை மத்திய அரசு யோசித்து உள்ளது. தமிழக அரசு உரிய பாதிப்பு இல்லாமல் இருக்க நடவடிக்கை மத்திய அரசு எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
