"கரூரில் தமிழக வெற்றி கழகம் சார்பில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில், 30க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்"
விஜய் தேர்தல் பிரச்சார கூட்டம்
தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் களத்திற்கு புதியவரான நடிகர் விஜய் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். ஒவ்வொரு சனிக்கிழமையும் பரப்புரையில் ஈடுபட்டு வரும் அவர் இன்று நாமக்கல் மற்றும் கரூரில் பரப்புரை மேற்கொண்டார்.
கட்சித் தொண்டர்கள் உயிரிழப்பு
கரூரில் விஜய்யை காண்பதற்காக பல்லாயிரக்கணக்கானோர் வழிநெடுகிலும் குவிந்தனர். குறிப்பாக, விஜய் பரப்புரை மேற்கொண்ட வேலுச்சாமிபுரத்தில் விஜய்யின் பரப்புரை வாகனம் அருகே ஆயிரக்கணக்கில் தொண்டர்கள் குவிந்தனர். இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 33 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் கரூர் அரசு மருத்துவமனையில் முன்னாள் அமைச்சர்களும், அதிகாரிகளும் குவிந்து வருகின்றனர்.
விஜய் கைது செய்யப்படுவாரா ?
புஷ்பா-2' திரைப்பட ரிலீஸின்போது ஹைதராபாத் தியேட்டரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பலியான வழக்கில் நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டார். அதேபோல் விஜய்யும் கைது செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது. முன்னதாக தவெக பிரச்சார கூட்டத்தில் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் கட்சி தலைவரே பொறுப்பு என நீதிமன்றம் கூறியிருந்தது.
ஆனால் அனுமதி பெற்று நடத்தப்பட்ட இந்த இந்த கூட்டத்தில் உயிரிழப்பு சம்பவம் நடைபெற்றிருப்பதால், விஜய் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என கூறப்படுகிறது. இருந்தாலும் இது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்ட பிறகே, யார் மீது எந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து தகவல் வெளியாகும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.