மக்கள் தொகை அதிகரிப்பால் குற்றங்கள் அதிகரிப்பு - இபிஎஸ்-க்கு அமைச்சர் ரகுபதி கொடுத்த பதில்

அவருடைய ஆட்சிக் காலத்தில் தூத்துக்குடி சம்பவம் தர்மபுரி சம்பவம் போன்று இந்த ஆட்சி காலத்தில் எதுவும் நடைபெறவில்லையே - சட்டத்துறை அமைச்சர் விளக்கம்

Continues below advertisement

உசிலம்பட்டியில் காவலர் படுகொலை என்பது குடும்ப பிரச்சனை காரணமாக நடைபெற்றதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கம் கொடுத்துள்ளார்.

Continues below advertisement

இதுதொடர்பாக அமைச்சர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

உண்மைக்கு புறம்பாக பேசும் எதிர்கட்சி தலைவர்

எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உண்மைக்கு புறம்பாக, தமிழக மக்கள் நலனுக்கு எதிராக பொய் செய்திகளை இன்று பேசுகிறார். தமிழகத்தை பொறுத்தவரை அமைதி பூங்காவாக நிலவுகிறது.

கடந்த 20 காலம் வரலாற்று எடுத்தால் கடந்த 2012 ஆம் ஆண்டு 1943 - 2013 ஆம் ஆண்டு 1927 -  2019 ஆம் ஆண்டு 1745 குற்றச் சம்பவங்கள் நடந்து இருப்பதாகவும் அதனை 2024 ஆம் ஆண்டு ஒப்பிடும் போது 1540 தான் குற்றச் சம்பவங்கள் நடைபெற்று இருப்பதாகவும் இது எங்களின் ஆட்சியில் குறைவு தான்.

எடப்பாடி பேசுவது ஏற்று கொள்ள முடியாது

மக்கள் தொகை அதிகரிப்பு காரணமாக குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் ஏதோ ஒரு சில இடத்தில் நடக்கக் கூடிய பிரச்சனைகளை குறிப்பிட்டு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது போன்று எடப்பாடி பேசுவது ஏற்றுக் கொள்ள முடியாது.

மேலும் அவர் பேசுகையில் தமிழகத்தை நோக்கி பல்வேறு தொழில் நிறுவனங்கள் வந்து கொண்டிருப்பதாகவும் , இதனால் தமிழ் நாட்டில் வேலை வாய்ப்பு அதிகரிக்கும் இதை பிடிக்காமல் இ.பி.எஸ் பேசி வருகிறார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதாகவும் அமைதி பூங்காவாக இல்லை தவறான கருத்துக்களை மக்களிடம் பரப்பி மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்த நினைக்கிறார் எதிர்க் கட்சித் தலைவர். அவருடைய ஆட்சிக் காலத்தில் தூத்துக்குடி சம்பவம் தர்மபுரி சம்பவம் போன்று இந்த ஆட்சி காலத்தில் எதுவும் நடைபெறவில்லையே என கேள்வி எழுப்பிய அவர் , 

நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சிகள் பேசுவதற்கு, அவருடைய ஆட்சி காலத்தில் அரை மணி நேரம் முன்பாக என்ன பேச வேண்டும் என்பதை கொடுக்க சொல்லி இருந்தார். அதன்படி தான் தற்போதும் செயல்படுவதாகவும் ஆனால் எதிர்க் கட்சி கொறடா சட்டப் பேரவை துவங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு சபாநாயகர் சந்தேகத்தை காவல் துறையினரை பற்றி பேச வேண்டும் அதற்கு ஜீரோ அவரில் நேரம் ஒதுக்க வேண்டும் என்று கேட்டிருந்தார். எந்தப் பிரச்சினை குறித்து பேச போறோம் என்று முன்பே தெரிவிக்காத காரணத்தினால் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாகவும், அவர் முன்பு எந்த பிரச்சினையை பற்றி பேச வேண்டும் என்று கூறினால்தான் அமைச்சர்களோ அல்லது முதலமைச்சரோ அந்த துறை சார்ந்த பதில்களை தயார் செய்வார்கள். 

இந்த அரசை பொருத்தவரையில் ஆளும் கட்சிகளை விட எதிர்க்கட்சிகளுக்கு   அவையில் பேச அதிக வாய்ப்பு கொடுப்பதாகும் ,வாய்ப்பு கொடுக்கவில்லை என்றால் கூட முதலமைச்சர் கிட்ட எதிர்கட்சிகளுக்கு பேச வாய்ப்பு கொடுப்பதாகவும், என்ன பிரச்சனை என்று சொல்லாமல்  பதில் கூறுங்கள் என்றால் எவ்வாறு கூற முடியும், அவர்கள் எழுப்பும் பிரச்சனைக்கு முதலமைச்சரிடம் பதில் தயாராக இருப்பதாகவும், சட்டப்படி கேட்டிருந்தால் அனைத்திற்கும் பதில் கிடைத்திருக்கும்.
 
தாமதமாக நீங்கள் வந்து பிரச்சினை விவாதிக்க வேண்டும் என்று கேட்டதற்கு விவாதிக்க முடியாது என்று கூறியது குற்றமா தண்டனை கூறியதா அதற்கு இவ்வாறு அசிங்கப்படுத்துவது அவமரியாதை செய்வதாக சட்டமன்றத்தை என அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

உசிலம்பட்டி காவலர் படுகொலை சம்பவம்

குடும்ப பிரச்சினை காரணமாக அந்த கொலை நடந்திருப்பதாகவும் , அவர் அன்று பணிக்கு வரவில்லை தோட்டத்தில் இருந்தார் எனவும் சம்பந்தப்பட்ட நபர்கள் குறித்து விசாரணை நடத்தி அவர்களை கைது செய்யப்படுவார்கள்.

மேலும் ஈரானிய கொள்ளையர்கள் 3 மணி நேரத்தில் தமிழக காவல்துறை பிடித்துள்ளார்கள் அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவிக்காமல் இது போன்று அதிமுகவினர் பேசுவதால் காவலர்களுக்கு மனசோர்வு ஏற்படுத்துகிறார்.

பயிற்சி மருத்துவர் கடத்தப்பட்ட சம்பவத்தை மையப்படுத்தி ஒரு பொய்யான தகவலை தருவதாகவும் அது போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது அந்த மருத்துவர் கடத்தப்படவில்லை. அவர் காப்பாற்றப்பட்டுள்ளார். இது போன்று பேசுவதன் மூலம் பெண்களை வீட்டை விட்டு வெளியே வராமல் , வேலைக்கு செல்லாமல் எடப்பாடி பழனிச்சாமி தடுக்கிறார் என அவர் குற்றம் சாட்டியுள்ளார்

Continues below advertisement
Sponsored Links by Taboola