Minister Ponmudi: அமைச்சர் பதவிக்கும் ஆப்பா?- பொன்முடியை நீக்கக் கோரி ஆளுநரிடம் முறையீடு

கடந்த சில தினங்களுக்கு முன்பு, ஏப்ரல் 5ஆம் தேதி தந்தை பெரியார் திராவிடர் கழக மேடையில், அவர் ஆபாசமாகப் பேசி இருந்தார். இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலானது.

Continues below advertisement

வனத்துறை அமைச்சர் பொன்முடியை தமிழக அமைச்சரவையில் இருந்து நீக்க வலியுறுத்தி, ஆளுநர் ரவியை பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சந்திக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Continues below advertisement

வனத்துறை அமைச்சர் பொன்முடி அண்மையில் ஏற்பட்ட சர்ச்சையில், திமுக துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். 

பட்டையா அல்லது நாமமா?

கடந்த சில தினங்களுக்கு முன்பு, ஏப்ரல் 5ஆம் தேதி தந்தை பெரியார் திராவிடர் கழக மேடையில், அவர் ஆபாசமாகப் பேசி இருந்தார். குறிப்பாக, விலை மாது வீட்டிற்கு ஒருவர் செல்வதைக் குறிப்பிட்டு பட்டையா அல்லது நாமமா? என்ற கேட்டு அதற்கு கீழ்த்தரமான, கொச்சையான விளக்கம் ஒன்றை அமைச்சர் பொன்முடி கொடுத்து இருந்தார்.

இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து திமுக துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவரும் எம்.பி.யுமான கனிமொழி, கண்டனம் தெரிவித்து இருந்தார். 

சர்ச்சைகளுக்கு சொந்தக்காரர் அமைச்சர் பொன்முடி

சர்ச்சைகளில் சிக்குவதையே வாடிக்கையாய் வைத்திருப்பவர் அமைச்சர் பொன்முடி. இவர் பல்வேறு தருணங்களில் பேசியது சர்ச்சையானது. குறிப்பாக, ’’அதான் ரூ.1000 கொடுக்கிறோமே’’ என்று அமைச்சர் பொன்முடி கூறியது சர்ச்சையானது.


’’எனக்கு அப்படியே ஓட்டு போட்டு கிழி கிழின்னு கிழிச்சிட்டீங்க.. ’’ என்று அமைச்சர் பொன்முடி கூறி இருந்ததும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோல மற்றோர் அரசு நிகழ்வில், ”ரூ.4000 வாங்குனிங்களா?” ”ஓசி பஸ்-ல போறீங்க!” என்று கேட்டதும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. '’இந்த ஊரின் சேர்மன் ஒரு பெண், அதுவும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்’’ என்று அமைச்சர் பொன்முடி கூறிய நிலையில், ’’நீங்க எஸ்சிதானே?’’ என்று பொதுவெளியில் மைக்கில் எல்லோர் முன்னிலையிலும் கேட்டது வைரலானது. 

தொடர்ந்து இந்து மத விவகாரம் சார்ந்து பேசியதால், திமுக தலைமை உடனடி நடவடிக்கை எடுத்தது. இதற்கிடையே அமைச்சர் பொன்முடியை, அரசுப் பதவியில் இருந்தும் நீக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன் கோரிக்கை விடுத்து இருந்தார். 

ஆளுநர் ரவியை சந்திக்கும் நயினார் நாகேந்திரன்?

இந்த நிலையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், வனத்துறை அமைச்சர் பொன்முடியை தமிழக அமைச்சரவையில் இருந்து நீக்க வலியுறுத்தி, ஆளுநர் ரவியை விரைவில் சந்திக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Continues below advertisement
Sponsored Links by Taboola