எம்.ஜி.ஆர்., - ஜெ. படம், செங்கொட்டையனுக்கு அதிமுகவினர் எச்சரிக்கை மாவட்ட முழுவதும் சுவரொட்டி
தமிழக அரசியல்நிலை
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் பணியை அரசியல் கட்சிகள் வேகப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு தொகுதியாக மக்களை சந்திப்பது, மக்களின் குறைகளை கேட்டறிவது, அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்துரைப்பது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு, அரசு மீதான விமர்சனம் என ஆளுங்கட்சியும், எதிர்கட்சிகளும் போட்டி போட்டு மக்களை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் எதிர்கட்சியாக உள்ள அதிமுகவில் உட்கட்சி மோதலால் பல பிளவுகளால் பிரிந்துள்ளது. இதனால் ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரன், சசிகலா என தனி அணியாக உள்ளது. அதிமுகவின் வாக்குகள் பிரிவதால் தேர்தலில் தோல்விக்கு மேல் தோல்வியை பெற்று வருகிறது. செங்கோட்டையன் நீக்கம் எனவே பிரிந்து சென்ற தலைவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என அதிமுக மூத்த தலைவராக இருந்த செங்கோட்டையன் வலியுறுத்தி வந்தார். ஆனால் இதற்கு எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரை சந்தித்து செங்கோட்டையன் பேசியிருந்தார்.
செங்கோட்டையன் நீக்கம்
இதனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிருப்தி அடைந்த நிலையில் செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கி அறிவிப்பு வெளியிட்டார். அதிமுகவில் பரபரப்பு நீடித்துவரும் நிலையில் செங்கோட்டையன் தனது எம்.எல்.ஏ., பதவியில் இருந்து விலகி த.வெ.க.,வில் இணைந்துள்ளார். தவெகவில் இணைந்த பிறகும், ஜெயலலிதா படத்தை சட்டைப் பையில் வைத்திருப்பதுடன், தனது அலுவலக பெயர்ப் பலகையிலும் பயன்படுத்தி வருகிறார். இது அதிமுகவினரிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கையில் போஸ்டர்
சிவகங்கை மாவட்ட அதிமுகவினர், செங்கொட்டையன் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்களை பயன்படுத்தக் கூடாது, மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர். “அதிமுகவே வேண்டாம்” என்ற பிறகு, ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் படங்களை பயன்படுத்தக் கூடாது என எச்சரித்துப் போஸ்டர் ஒட்டியுள்ளனர். சிவகங்கை மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி துணைச் செயலாளர் மணிமாறன் என்பவர் மாவட்டம் முழுவதும் இந்தப் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். இதனால் பரபரப்பு நிலவியது.