நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தவெக வெற்றி பெற்றதை அடுத்து முதல்வராக விஜய் பொறுப்பேற்றுக்கொண்டார். அன்று முதலே முதல்வர் விஜய்யை திமுகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதுவும் மேயர் பிரியா ஒரு படி மேலே சென்று மானத்தைப் பற்றி கவலைப்படாத ஒருவரிடம் தமிழ்நாடு மாட்டிக்கொண்டு உள்ளது.
தவெக அரசு பொறுப்பேற்ற 6 மாதங்களில் குற்றச் சம்பவங்கள், கொலைகள், பாலியல் குற்றச்சாட்டுகள், சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது என்றார். அதுமட்டுமல்லாமல் முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்காமல் மேயர் பிரியா தவிர்த்து வந்துள்ளார். இது தொடர்பாக மேயர் பிரியாவை தவெகவினர் தாறுமாறாக விமர்சித்தது மட்டுமல்லாமல் சமூக வலைத்தளங்களில் மிகவும் தவறாகச் சித்தரிக்கத் தொடங்கினர்.
மேயர் பிரியா
இதுதொடர்பாக சென்னை மாநகர மேயர் பிரியா தவெகவினருக்கு எதிராக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திலும், தமிழ்நாடு சைபர் கிரைம் பிரிவிலும் கடந்த அக்டோபர் மாதம் புகார் ஒன்றை அளித்திருந்தார். இந்நிலையில் AI மூலம் வக்கிரமாகச் சித்தரித்து தவெகவின் Vulgar Warriors பரப்பிக்கொண்டிருக்கின்றனர். இவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன் என மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: CM Vijay: பெரம்பூர் தொகுதி விவகாரத்தில் பரபரப்பு தீர்ப்பு.. முதல்வர் விஜய்யின் மனு தள்ளுபடி செய்து அதிரடி
வாயே திறக்காத முதல்வர்
இதுதொடர்பாக சென்னை மேயர் பிரியா வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: இன்று ஒரு காணொளியில் என்னை AI மூலம் வக்கிரமாகச் சித்தரித்து தவெகவின் Vulgar Warriors பரப்பிக்கொண்டிருக்கின்றனர். இது முதன்முறை அல்ல. தொடர்ச்சியாக பலமுறை என்னைக்குறித்து இதுபோன்ற இணையத் தாக்குதல்களில் ஈடுபட்டுவருகின்றனர். தமிழ்நாட்டுப் பெண்களுக்கெல்லாம் தானே பாதுகாப்பு என்று வசனம் பேசிவரும் முதலமைச்சர் ஜோசப் விஜய் இது குறித்து(ம்) வாயே திறப்பதில்லை.
சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன்
அரசியல், பதவி என்பதையெல்லாம் தாண்டி ஒரு பெண்ணாக, ஒரு தாயாக, ஒரு குடும்பத்தின் மகளாக இது போன்ற கேவலமான தாக்குதல்கள் தனிப்பட்ட முறையில் எனக்கு மிகுந்த வேதனையையும், மன உளைச்சலையும் உண்டாக்குகின்றன. இந்த Targeted abuse-ஐச் செய்வது தவெக தலைமையின் நேரடித் தொடர்பில் இருக்கும் ஒரு கும்பல், இவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன் என எச்சரித்துள்ளார்.
