மழைக்காலப்பணிகள் குறித்த ஆய்வின் போது தமிழக அரசு தன்னை புறக்கணித்ததாக மேயர் பிரியா குற்றம் சாட்டியிருந்தார்.இதற்கு பதிலளிக்கும் வகையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ராஜ்மோகன், மேயர் பிரியாவை புறக்கணிக்கவில்லை எனவும் மாநகராட்சி அலுவலகம் என்பது மேயருக்கான இடம்தான் எனவும், அங்கு வருவதற்கு யாரும் அவரை அழைக்கத்தேவையில்லை எனக்குறிப்பிட்டார்.

Continues below advertisement

protocal-ஐ பார்க்காமல் problem-ஐ பார்க்கவேண்டும்!

மழை போன்ற பேரிடர் காலங்களில் மக்கள் சார்ந்த பணிகளுக்கு அழைத்தால் வருவேன் என்பது பொருத்தமாக இருக்காது எனத்தெரிவித்த அமைச்சர் ராஜ்மோகன், மேயர் பிரியா protocal-ஐ பார்க்காமல் problem-ஐ பார்த்து மக்கள் பணியாற்ற வேண்டும் எனத்தெரிவித்தார்.

ஆன்லைனில் இணைந்தவர்களெல்லாம் தவெக உறுப்பினர்கள் அல்ல!

தவெக நிர்வாகிகள் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவதாக எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் முன்வைத்த குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன், ஆன்லைனில் தங்களை தாங்களே இணைத்துக்கொண்டவர்கள் எல்லாம் தவெக உறுப்பினர்கள் ஆகிவிட முடியாது என விமர்சித்தார். மேலும், தவெக நிர்வாகிகள் குற்றங்களில் ஈடுபட்டால் அவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் கைதுக்கே பரிந்துரை கட்சியின் நோக்கமாக உள்ளதாகவும் அமைச்சர் ராஜ்மோகன் உறுதிபடக்கூறினார்.   

Continues below advertisement