மேலும் அறிய

"தமிழகத்தின் எதிர்காலமே..." சீர்காழியை அதிரவிட்ட போஸ்டர்! மார்ட்டின் லீமா ரோஸை வாழ்த்தி ஒட்டப்பட்ட போஸ்டரால் பரப்பரப்பு!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகரம் முழுவதும் தற்போது ஒட்டப்பட்டுள்ள ஒரு அரசியல் வாழ்த்து போஸ்டர் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து, பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகரம் முழுவதும் தற்போது ஒட்டப்பட்டுள்ள ஒரு அதிரடியான அரசியல் வாழ்த்து போஸ்டர், பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து மாவட்டத்தையே உலுக்கி எடுத்துள்ளது. பிரபல தொழிலதிபர் லாட்டரி மார்ட்டினின் மனைவியும், கோயம்புத்தூரைச் சேர்ந்த சமூக ஆர்வலருமான மார்ட்டின் லீமா ரோஸை வாழ்த்தி, சீர்காழி நகரம் முழுவதும் பிரம்மாண்டமான போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பதுதான் தற்போதைய பேசுபொருளாக மாறியுள்ளது.

தமிழக அரசியலில் போஸ்டர் கலாச்சாரம் என்பது புதிய ஒன்றல்ல என்றாலும், டெல்டா மாவட்டத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான சீர்காழியில், இதுவரை எந்த ஒரு அரசியல் பின்புலமும் நேரடியாகக் காட்டிக்கொள்ளாத ஒரு சமூக ஆர்வலருக்கு, "தமிழகத்தின் எதிர்காலமே" என்று மகுடம் சூட்டி போஸ்டர் அடித்திருப்பது உள்ளூர் அரசியல் புள்ளிகளைத் தலைசுற்ற வைத்துள்ளது.

கவிதை வரிகளுடன் உருகிய போஸ்டர் வாசகங்கள்!

தமிழின் பெருமையைப் பாடும் கம்பீரமான கவிதை வரிகளுடன் தொடங்கும் அந்தப் போஸ்டரில், மார்ட்டின் லீமா ரோஸ் அவர்களைப் புகழ்ந்து தள்ளியுள்ளனர். அதில் இடம் பெற்றுள்ள வாசகங்கள் ஒவ்வொன்றும் அனல் பறக்கும் அரசியல் கட்சிகளின் மாநாட்டு சுவரொட்டிகளை மிஞ்சும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக "வறுமையை ஒழிக்க வந்த தாயே! மக்கள் வெள்ளமே! புதிய விடி வெள்ளியே! ஏழைகளின் தலைவியே!!" என்று உருகியதோடு மட்டுமில்லாமல், அதன் உச்சக்கட்டமாக, "தமிழகத்தின் எதிர்காலமே!! எங்கள் அம்மா மார்ட்டின் லீமா ரோஸ் அவர்களை வாழ்த்துகின்றோம்..." என்ற அதிரடியான வாசகங்கள் அந்தப் போஸ்டரில் அச்சிடப்பட்டுள்ளன.

வழக்கமாக தமிழக அரசியலில் செல்வாக்கு மிக்கப் பெண் தலைவர்களை மட்டுமே தொண்டர்கள் 'அம்மா' என்று அழைத்து போஸ்டர் அடிக்கும் வழக்கம் நிலவி வரும் சூழலில், மார்ட்டின் லீமா ரோஸை 'எங்கள் அம்மா' என்றும், 'தமிழகத்தின் எதிர்காலமே' என்றும் குறிப்பிட்டிருப்பது பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

நகரம் முழுவதும் ஆக்கிரமித்த பிரம்மாண்ட போஸ்டர்கள்

சீர்காழி நகரின் முக்கிய வீதிகள், நாற்கர சந்திப்புகள் என நகரம் முழுவதும் பரவலாக இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டு அனைவரின் பார்வையும் தன் பக்கம் இழுத்துள்ளது. காலையில் எழுந்து வீதிக்கு வந்த பொதுமக்களும், கடைவீதிக்குச் சென்ற வியாபாரிகளும் நகரம் முழுவதும் வண்ணங்களில் காட்சியளித்த இந்த போஸ்டர்களைப் பார்த்து ஸ்தம்பித்துப் போயினர்.

சீர்காழியின் மிக முக்கியப் பகுதிகளான

* மருத்துவமனை சாலை (Hospital Road)

* பழைய பேருந்து நிலையம் (Old Bus Stand)

* புதிய பேருந்து நிலையம் (New Bus Stand)

* வரலாற்றுச் சிறப்புமிக்க மணி குண்டு பகுதி

உள்ளிட்ட அனைத்து முக்கிய இடங்களிலும், சுவர்களிலும், வணிக வளாகங்களின் வெளிப்பகுதிகளிலும் இந்த போஸ்டர்கள் வரிசையாக ஒட்டப்பட்டுள்ளன. அவ்வழியே செல்லும் பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் என அனைவரும் தங்களது வாகனங்களை நிறுத்தி, இந்த போஸ்டர் வாசகங்களை உற்றுப் பார்த்து, ஆச்சரியத்துடன் விவாதிப்பதைக் காண முடிந்தது.

பின்னணியில் யார்? உள்ளூர் அரசியலில் கிளம்பிய 'ஹாட் டாபிக்'

பொதுவாக இதுபோன்ற பிரம்மாண்ட போஸ்டர்களின் பின்னணியில் ஏதேனும் பெரிய அரசியல் இயக்கங்களோ அல்லது மக்கள் நற்பணி மன்றங்களோ இருக்கும். ஆனால், இந்த போஸ்டரின் கீழ், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த 'வெள்ளியங்கிரி புருஷோத்தமன்' என்பவரது பெயர் மட்டுமே இடம் பெற்றுள்ளது. சீர்காழிப் பகுதியில் தனிநபர் ஒருவரால், அதுவும் திடீரென மார்ட்டின் லீமா ரோஸை "தமிழகத்தின் எதிர்காலமே" என்று அரசியல் முகம் கொடுத்து, இவ்வளவு பெரிய அளவில் முன்னிறுத்தி ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர், உள்ளூர் அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் இப்போது 'ஹாட் டாபிக்காக' மாறியுள்ளது.

யார் இந்த வெள்ளியங்கிரி புருஷோத்தமன்? இவருக்கும் மார்ட்டின் லீமா ரோஸ் அவர்களுக்கும் என்ன தொடர்பு? மார்ட்டின் லீமா ரோஸ் அறக்கட்டளை மூலம் சீர்காழி பகுதியில் ஏதேனும் ரகசிய நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளனவா? அல்லது லீமா ரோஸ் மறைமுகமாக ஏதேனும் புதிய அரசியல் கட்சி தொடங்கத் திட்டமிட்டுள்ளாரா? அதன் முன்னோட்டமாகத்தான் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதா? எனப் பல்வேறு கேள்விகள் சீர்காழி டீக்கடைகள் முதல் அரசியல் கட்சி அலுவலகங்கள் வரை விவாதப் பொருளாக மாறியுள்ளன.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

EPS: பாலியல் வன்கொடுமை விவகாரம்; ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ-வை கைது செய்வீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
EPS: பாலியல் வன்கொடுமை விவகாரம்; ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ-வை கைது செய்வீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
AMMK ADMK Merger : அதிமுகவுடன் ஐக்கியமாகும் அமமுக.? எதிர்பார்த்து காத்திருக்கும் ர.ரக்கள்- டிடிவி சொன்ன முக்கிய தகவல்
அதிமுகவுடன் ஐக்கியமாகும் அமமுக.? எதிர்பார்த்து காத்திருக்கும் ர.ரக்கள்- டிடிவி சொன்ன முக்கிய தகவல்
விஜய் ரசிகைக்கு தவெக நிர்வாகி பாலியல் வன்கொடுமை.! குற்றவாளி கூறிய அந்த மேலிடம் யார்.?- உதயநிதி கேள்வி
விஜய் ரசிகைக்கு தவெக நிர்வாகி பாலியல் வன்கொடுமை.! குற்றவாளி கூறிய அந்த மேலிடம் யார்.?- உதயநிதி கேள்வி
மயிலாடுதுறையில் பரபரப்பு: நெல் கொள்முதல் நிலையத்தில் ரூ.40 லஞ்சம் வாங்கியதை நியாயப்படுத்தினாரா உணவுத்துறை அமைச்சர்? விவசாயிகள் கடும் கொந்தளிப்பு!
மயிலாடுதுறையில் பரபரப்பு: நெல் கொள்முதல் நிலையத்தில் ரூ.40 லஞ்சம் வாங்கியதை நியாயப்படுத்தினாரா உணவுத்துறை அமைச்சர்? விவசாயிகள் கடும் கொந்தளிப்பு!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

TVK MLA Govt School | மகளுக்கு அரசுப் பள்ளியில் அட்மிஷன் ஆச்சர்யப்படுத்திய தவெக MLA வைரல் வீடியோ!
Delhi Tamilnadu House fire | விஜய் கிளம்பிய சில நிமிடங்களில்! தமிழ்நாடு இல்லத்தில் தீ விபத்து
CM Vijay Report |
Raghava Lawrence | TARGET விஜய்!TEAM அண்ணாமலை?லாரன்ஸ் மெகா ட்விஸ்ட்
Tindivanam Murder: தீர்த்துக்கட்ட சொன்ன தாய்..திட்டம் போட்டு முடித்த மகன்!குப்பை கொட்டியதால் கொடூரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS: பாலியல் வன்கொடுமை விவகாரம்; ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ-வை கைது செய்வீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
EPS: பாலியல் வன்கொடுமை விவகாரம்; ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ-வை கைது செய்வீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
விஜய் ரசிகைக்கு தவெக நிர்வாகி பாலியல் வன்கொடுமை.! குற்றவாளி கூறிய அந்த மேலிடம் யார்.?- உதயநிதி கேள்வி
விஜய் ரசிகைக்கு தவெக நிர்வாகி பாலியல் வன்கொடுமை.! குற்றவாளி கூறிய அந்த மேலிடம் யார்.?- உதயநிதி கேள்வி
4 லட்சம் ரூபாய் ஆஃபர்! MG கார்களுக்கு தாறுமாறு தள்ளுபடி - எந்தெந்த வண்டிக்கு?
4 லட்சம் ரூபாய் ஆஃபர்! MG கார்களுக்கு தாறுமாறு தள்ளுபடி - எந்தெந்த வண்டிக்கு?
மாநகராட்சி தவறால் மக்களுக்கு பாதிப்பா? உடனே மருத்துவர்கள், ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குக- அன்புமணி
மாநகராட்சி தவறால் மக்களுக்கு பாதிப்பா? உடனே மருத்துவர்கள், ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குக- அன்புமணி
Tata Sierra EV: இவி அவதாரத்தில் டாடா சியரா.! லாஞ்ச் டேட் லாக் ஆயிடுச்சு; ரேஞ்ச், அம்சங்கள் அட்டகாசம்.!
இவி அவதாரத்தில் டாடா சியரா.! லாஞ்ச் டேட் லாக் ஆயிடுச்சு; ரேஞ்ச், அம்சங்கள் அட்டகாசம்.!
Rajya Sabha MP Paveen Chakravarty : போட்டியின்றி வெற்றி.! எம்.பியானார் பிரவீன் சக்கரவர்த்தி- அதிகரித்தது காங்கிரஸ் பலம்
போட்டியின்றி வெற்றி.! எம்.பியானார் பிரவீன் சக்கரவர்த்தி- அதிகரித்தது காங்கிரஸ் பலம்
அநீதிக்கு எதிராக தண்டனை கொடுக்கும் சிங்கப்பெண்களை மையப்படுத்தி உருவாகியுள்ள ‘ஆட்டி’
அநீதிக்கு எதிராக தண்டனை கொடுக்கும் சிங்கப்பெண்களை மையப்படுத்தி உருவாகியுள்ள ‘ஆட்டி’
தவெக தேர்தல் வாக்குறுதி என்ன ஆச்சு? சேவை உரிமை சட்டத்தை உடனே நிறைவேற்றுக- அன்புமணி
தவெக தேர்தல் வாக்குறுதி என்ன ஆச்சு? சேவை உரிமை சட்டத்தை உடனே நிறைவேற்றுக- அன்புமணி
Embed widget