Annamalai: அமித் ஷா அனுமதி, மோடி ஆசீர்வாதம், புதிய அரசியல் முகமூடியில் அண்ணாமலை - காங்கிரஸ் விளாசல்
Annamalai Vs Congress: அமித் ஷாவின் அனுமதி மற்றும் மோடியின் ஆசீர்வாதத்துடன், அண்ணாமலை புதிய முகமூடியை அணியவிருப்பதாக காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Annamalai Vs Congress: அண்ணாமலையில் ராஜினாமா முடிவை ஏற்பதாக பாஜக தேசிய தலைமை அறிவித்த நிலையில், மாணிக்கம் தாகூரின் விமர்சனம் வெளியாகியுள்ளது.
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு
பாஜகவில் இருந்து விலகுவதாக அண்ணாமலை வழங்கும் கடிதத்தை ஏற்றதாக, கட்சியின் தேசிய தலைமை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக நண்பகல் 12 மணியளவில் அண்ணாமலை விரிவான விளக்கம் அளிக்க உள்ளார். புதிய அரசியல் கட்சியை தொடங்க இருப்பதாகவும், அதுதொடர்பான அறிவிப்பு இன்று வெளியிடலாம் என்றும் கூறப்படுகிறது. அதேநேரம், பாஜகவின் நீண்டகால முயற்சிகள் தமிழ்நாட்டில் வெற்றி பெறாத நிலையில், அண்ணாமலையை முன்னிறுத்தி புதிய கட்சியை தொடங்கி மக்களின் ஆதரவை பெற்று, அதை காலப்போக்கில் தங்களுடன் இணைத்துக்கொள்ள டெல்லி தலைமை புதிய காய் நகர்த்தலை மேற்கொள்வதாகவும் அரசியல் விமர்சகர்கள் பேசுகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
பாஜகவின் பி டீம்
மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், 2002 முதல் 2026 வரை அனைத்து கூட்டணிகளையும், அரசியல் பரிசோதனைகளையும் செய்து பார்த்தும் தமிழ்நாட்டில் வேரூன்ற முடியாத RSS-BJP அமைப்பின் புதிய திட்டம் தயாராகிவிட்டதா? அமித் ஷாவின் அனுமதியுடன்,
மோடியின் ஆசீர்வாதத்துடன், பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்., பெயர்கள் இல்லாத ஒரு புதிய அரசியல் முகமூடி.பெயர் மட்டும் புதிதாக இருக்கலாம். கொள்கை, கட்டுப்பாடு, நோக்கம் அதே பழையதா? தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுவதற்கான “Plan B” ஆக இது உருவாக்கப்படுகிறதா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.
மக்களே உஷார்..!
தமிழ்நாடு கடந்த காலத்திலும் அரசியல் வேடமாற்றங்களை அடையாளம் கண்டுள்ளது.
இனியும் பெயர் மாற்றத்தை அல்ல, உண்மையான மாற்றத்தையே மக்கள் மதிப்பிடுவார்கள் முகமூடி மாறலாம். ஆனால் பின்னால் இருப்பவர்கள் யார் என்பதுதான் முக்கியம். தமிழ்நாட்டிற்கான பிளான் பி ரெடி, இதற்கு பின்னாள் ஆர்.எஸ்.எஸ்., உள்ளது. கவனமுடன் இருங்கள்” என மாணிக்கம் தாகூர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக அண்ணாமலையின் பெயரையே பதிவு குறிப்பிடாமல் இந்த ஒட்டுமொத்த பதிவையும் வெளியிட்டுள்ளார்.
2002 முதல் 2026 வரை அனைத்து கூட்டணிகளையும், அரசியல் பரிசோதனைகளையும் செய்து பார்த்தும் தமிழ்நாட்டில் வேரூன்ற முடியாத RSS-BJP அமைப்பின் புதிய திட்டம் தயாராகிவிட்டதா?
— Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) June 5, 2026
அமித் ஷாவின் அனுமதியுடன்,
மோடியின் ஆசீர்வாதத்துடன்,
BJP மற்றும் RSS பெயர்கள் இல்லாத ஒரு புதிய அரசியல் முகமூடி.…
புதிய கட்சி தொடங்குகிறாரா அண்ணாமலை?
அண்ணாமலை ஏற்கனவே வி தி லீடர்ஸ் எனும் இயக்கத்தை தொடங்கி நடத்தி வருகிறார். அதன் அடிப்படையில் மாநிலம் முழுவதும் பயன்படுத்தி தனக்கான கட்டமைப்புகளை வலுப்படுத்தி, தன் பின்பு திரளும் இளைஞர்களுக்கு அரசியல் பயிற்றுவித்து ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு முறையான அரசியல் பயணத்தை தொடர உள்ளாராம். தவெக மற்றும் திமுக என தற்போது மாறியுள்ள தமிழ்நாடு அரசியல் களத்தை விரைவிலேயே, விஜய் Vs அண்ணாமலை என மாற்ற அவர் விரும்புகிறாராம்.
Before You Go
விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
ட்ரெண்டிங் செய்திகள்























