தவழ்ந்து காலில் விழுந்தவர் - என சொல்லிவிட்டு, இப்ப முதல்வர் ஆக்குவோம் அண்ணாமலை சொல்கிறார் - நிர்மல்குமார் விமர்சனம் !
அதிமுகவில் இருக்கும் பேசுபவர்களைப் பற்றி நாங்கள் பேச வேண்டாம் என்று நாங்கள் அதற்கே தெளிவான விளக்கங்களைக் கொடுத்துவிட்டோம். - நிர்மல் குமார்.

தவழ்ந்து காலில் விழுந்து, இரட்டை கொலை செய்து, தற்குறி பழனிசாமி என்ன அண்ணாமலை கூறினார். தற்போது இன்று அவரைத்தான் முதலமைச்சர் ஆக்குவேன்னு 'அண்ணன் எடப்பாடி பழனிசாமி'ன்னு சொல்றார். -மதுரை விமான நிலையத்தில் தவெக நிர்மல் குமார் பேட்டி.
நிர்மல் குமார் செய்தியாளர் சந்திப்பு
சென்னையில் இருந்து த.வெ.க., இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார் மதுரை விமான நிலையம் வந்தார் அப்போது செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்..,"
அதிமுகாவே சொல்லிட்டாங்க, கூட்டணி வந்து அதிமுக தலைமையின் கீழ் தான் கூட்டணின்னு. விஜய்க்கு அது கூட தெரியல, வெளிய வந்தால்தானே நாட்டு நடப்பு தெரியும் அப்படின்னு இ.பி.எஸ் (EPS) சொல்லிருக்காரே பற்றிய கேள்விக்கு
இந்த ஒவ்வொரு கூட்டணி அமைக்கிறதென்றால், ஒரு கூட்டணியில் 10 பேர் இருக்கிறார்கள், ஒவ்வொரு கட்சித் தலைவர்கள் இருக்கிறார்கள். அந்த கட்சித் தலைவர்கள் எல்லாம் யார் முன்னாடி போய் சேர்ந்தார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். பியூஷ் கோயல் அவர் முன்னாடி ஒரு ஹோட்டல்ல போய் சேர்ந்து, அங்கேயே வந்து அறிவிப்புகள் யார் வெளியிட்டார்? பாரதிய ஜனதா கட்சி தான் வெளியிட்டது. சோ, அவர்கள்தான் இதற்கு முன்னெடுக்கிறார்கள்.
அதிமுக வந்து ஊழல் கட்சின்னு சொல்லி சொல்றாரு, ஆனா அதே ஜெயலலிதாவை ரோல் மாடலா (Role Model) வச்சு சொன்னாரு. இப்ப எங்களை வந்து குற்றம் சொல்றாரு விஜய்ன்னு சொல்லி சொல்றாங்களே பற்றிய கேள்விக்கு
புரட்சித் தலைவரையும் சரி, புரட்சித் தலைவி அம்மாவையும் சரி, திமுக எல்லா வழியிலும் ஒடுக்கப் பார்த்தார்கள். எல்லா வழியிலும் எப்படி எப்படி ஒடுக்கப் பார்த்தாங்க, அம்மா மீது எவ்வளவு எவ்வளவு பொய்யான கேஸ்கள் போட்டாங்க, எல்லாம் என்ன பண்ணாங்க? அவங்களை வந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் கட்சி ஆபீஸ்க்கு கூட வரவிடாமல் எப்படி ஒடுக்குனாங்கன்னு எல்லாருக்கும் தெரியும். என்னென்ன பொய் வழக்குகள் போட்டாங்க, அது எப்படி கையாளப்பட்டது வழக்குகள். சில வழக்குகள் தவறாகக் கையாளப்பட்டிருக்கலாம். அம்மாவோட வழக்குகள் பல வழக்குகள் தவறாகக் கையாளப்பட்டிருக்கலாம். சோ, அங்க வீட்டில் இருந்தவர்கள் பெயர்களைப் பயன்படுத்தித் தவறாகக் கையாளப்பட்டிருக்கலாம். கண்டிப்பாக அவர் மனசாட்சிக்கு பொதுவாக அவர் அம்மா வந்து எந்தத் தவறும் செய்யவில்லை என்பது மக்களுடைய கருத்து, எங்களுடைய கருத்து.
அதிமுக இரண்டாவது கட்டத் தேர்தல வாக்குறுதி கொடுத்திருக்காங்க.அதை எப்படிப் பார்க்கிறீங்க பற்றிய கேள்விக்கு
அவங்க அவங்களுடைய வாக்குறுதிகள் என்ன வேணாலும் அள்ளி வீசிட்டுப் போகலாம். திமுக கூடத்தான் போன தடவை 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் ஒவ்வொரு நாள் அள்ளி வீசிட்டுப் போனாங்க. இப்ப வாக்குறுதிகளை நிறைவேற்ற நம்பிக்கை யார் கொடுக்கிறான்னுதான் பார்க்கணும். இவர்கள் எல்லாம் கொடுத்த வாக்குறுதிகள் கடந்த காலத்துல எல்லாம் நிறைவேத்துனாங்களா இதுவரைக்கும் திமுக கொடுத்த எந்த வாக்குறுதியாவது நிறைவேத்துனாங்களா அதைக் கேட்கப்போற மக்கள்ட்ட கூட இதுவரைக்கும் செவிசாய்க்கவில்லை
41 உயிர் பலியான குற்ற உணர்ச்சி இல்லாமல் மேடையில் ஆடுறாரு, ஜெயக்குமார் கூறிய கேள்விக்கு
அதிமுகவில் இருக்கும் பேசுபவர்களைப் பற்றி நாங்கள் பேச வேண்டாம் என்று நாங்கள் அதற்கே தெளிவான விளக்கங்களைக் கொடுத்துவிட்டோம். மக்களிடம்... மக்களிடம்... மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்களைப் பற்றி நாங்கள் பேசுவதில்லை. ஏன்னா அவர்கள் கொடுக்கும் ஒவ்வொரு விஷயம் அவர்களே இன்னைக்கு மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்களைப் பற்றி நாங்க பேச விரும்பவில்லை. அதுக்குத் தேர்தலில் மக்கள் தக்கப் பாடம் புகட்டுவாங்க. இது நாங்க பலமுறை விளக்கம் கொடுத்துட்டோம்.
தவெக இஞ்சின், ஓட்டை இஞ்சின்னு அண்ணாமலை சொல்லிருக்காரே பற்றிய கேள்விக்கு
ஒன்றரை வருஷத்துக்கு முன்னாடி... அதாவது தவழ்ந்து காலில் விழுந்து, இரட்டை கொலை செய்து, தற்குறி பழனிசாமி அப்படின்னு பேசினார் எடப்பாடி அவர்களைப் பற்றி. இன்று அவரைத்தான் முதலமைச்சர் ஆக்குவேன்னு 'அண்ணன் எடப்பாடி பழனிசாமி'ன்னு சொல்றார். அவர் எல்லாம் தினமும் ஒன்னு பேசுற ஆட்களைப் பற்றி நம்ம எதுவும் பெருசா பேச வேண்டாம். நீங்கள் பொதுவாழ்வில் இப்படி ஒரு கேவலமான நபர்களைப் பற்றி நம்ம பேச வேண்டாம் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.






















