மேலும் அறிய
மதுரை உயர்நீதிமன்ற நுழைவாயில் முன்பு, கேக் வெட்டி கொண்டாடிய தவெக வழக்கறிஞர்கள் - காரணம் தெரியுமா?
பேருந்துகள், இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோக்களில் பயணித்து வரும் பொதுமக்களுக்கு தவெக வழக்கறிஞர்கள் சார்பில் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்.

விஜய் பதவியேற்பி கொண்டாட்டம்
Source : whatsapp
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முதல்வராக பொறுப்பேற்றதை தொடர்ந்து மதுரை உயர்நீதிமன்ற நுழைவாயில் முன்பு, கேக் வெட்டியும் இனிப்புகள் வழங்கியும் உற்சாகத்துடன் கொண்டாடிய தவெக வழக்கறிஞர்கள்.
விஜய்யுடன் 9 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்
தமிழக முதல்-அமைச்சராக தவெக தலைவர் சி. ஜோசப் விஜய் (51) நேற்று முன்தினம் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு கவர்னர் ஆர்.வி. ஆர்லேகர் பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். விஜயுடன் 9 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர். இந்த நிலையில், தமிழகத்தின் 17-வது சட்டசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு பதவிப்பிரமாண்ம் செய்யப்பட்டது. முதல் நபராக முதல்-அமைச்சர் விஜய் பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஆங்காங்கே பொதுமக்கள், தவெக ரசிகர்கள், தொண்டர்கள் ஆரவாரத்துடன் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நுழைவாயில் முன்பாக, தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் பதவி ஏற்றதையும், பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக பொறுப்பேற்றதை கொண்டாடும் வகையில், தவெக உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சார்பில் கேக் வெட்டி, பேருந்துகள், இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோக்களில் பயணித்து வந்த பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி உற்சாகத்துடன் கொண்டாடி வந்தனர்.
Before You Go
C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion




















