மேலும் அறிய
மதுரையில் தவெக மாநாடு: பரபரப்பான முன்னேற்பாடுகள், பொதுச் செயலாளர் அதிரடி ஆய்வு !
மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்தார் அதைத் தொடர்ந்து மதுரை பாரபத்தியில் மாநாடு நடைபெற உள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தவெக மாநாடு
Source : whats app
மதுரையில் நடைபெறும் தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் மாநில மாநாட்டிற்கான முன்னேற்பாடு பணிகளை தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் இன்று பார்வையிட்டார்.
தவெகவின் இரண்டாவது மாநில மாநாடு
மதுரையில் தவெகவின் இரண்டாவது மாநில மாநாடு வருகிற ஆகஸ்ட் 25ஆம் தேதி நடைபெறும், என அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்திருந்திருந்தார். இந்நிலையில், அதற்காக வேலைகளை விறு விறுப்பாக தொடங்கியது. மதுரை- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை பாரபத்தி பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தில் தேர்வு செய்து, 506 ஏக்கர் பரப்பளவில் மாநாடு நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாட்டு பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்த ஆனந்த்
தவெக மாநில இரண்டாவது மாநாட்டிற்காக கடந்த 16-ஆம் தேதி காலை 7 மணிக்கு கட்சி பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமையில் பூமி பூஜை பந்தக்கால் நடப்பது. தமிழக வெற்றி கழகத்தினர் சார்பில் மாநாட்டிற்கான பாதுகாப்பு மற்றும் அனுமதி வழங்கக்கோரி தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் சந்தித்து மனு அளித்திருந்தார். அதன் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் காவல்துறையினர் மாநாடு நடைபெறும் இடத்தையும் ஆய்வு செய்ய உள்ளனர்.
திடல் சுத்தம் செய்யப்படும் பணிகள்
இந்த நிலையில் தவெகவின் இரண்டாவது மாநில மாநாட்டிற்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ள நிலையில் அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. வருகிற இரண்டாம் தேதி மாநாடு தொடர்பான வரைபடங்கள் வாகன படிப்பாதைகள் குறித்த அறிக்கை காவல்துறையிடம் சமர்ப்பிக்க காவல்துறை தெரிவிக்கப்பட்டுள்ளதால் பணிகளை தொடங்கியுள்ளனர். முதற்கட்டமாக 10க்கும் மேற்பட்ட ஜேசிபி இயந்திரங்கள் மற்றும் புள்டோசர் வாகனங்கள் கொண்டு திடல் சுத்தம் செய்யப்பட்டு சமன் செய்யப்பட்டு உள்ளது.
மாநாட்டு திடலில் பார்வையிட்ட தவெக பொதுச் செயலாளர்
அடுத்த கட்டமாக மேடைகள் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து மேடை அமைப்பதற்கான தளவாடப் பொருட்கள் கொண்டு வரப்பட்டு நேற்று முதல் மேடை அமைப்பதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் ஆனந்த் இன்று காலை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்தார். அதைத்தொடர்ந்து மதுரை பாரபத்தியில் மாநாடு நடைபெற உள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அவருடன் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















