மேலும் அறிய
Madurai ; நடிகை குறித்த சர்ச்சை பேச்சுக்கு நயினார் சொன்ன பதில் என்ன? - மதுரையில் பரபரப்பான பிரஸ்மீட் !
மதுரையில் மோடி பிரச்சாரம்: பரபரப்பான அரசியல் களம்.. நயினார் நாகேந்திரன் பரபரப்பு பேச்சு.

நயினார் நாகேந்திரன்
Source : whatsapp
மதுரையில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி பிரச்சார பொதுக்கூட்டத்திற்கான முகூர்த்த கால் நடப்பட்டது.
மதுரையில் பொதுக்கூட்டம்
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) சார்பில் வருகிற மார்ச் ஒன்றாம் தேதி மதுரையில் அரசியல் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. மதுரை விமான நிலையம் அருகேயுள்ள மண்டேலா நகர் பகுதியில் இந்த பொதுக்கூட்ட நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மார்ச் 1-ம் தேதிகளில் நடைபெற வாய்ப்புள்ள இந்த நிகழ்வில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றுகிறார். இதற்கான முதற்கட்டப் பணிகளான முகூர்த்தக்கால் நடும் விழா பாஜக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளின் முன்னிலையில் உற்சாகமாக நடைபெற்று முடிந்துள்ளது. நயினார் நாகேந்திரன் மற்றம் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நயினார் நகேந்திரன் செய்தியாளர் சந்திப்பு
தொடர்ந்து நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில்...," வருகிற சட்டமன்றப் பொதுத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக போட்டியிடுகின்ற தேசிய ஜனநாயக கூட்டணியில் பங்கு பெற்றுள்ள அதிமுக பொதுச் செயலாளர் இ.பி.எஸ் மற்றும் பிரதமர் மோடி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், அன்புக்குரிய பாமக அன்புமணி ராமதாஸ், ஜான் பாண்டியன், ஏசி சண்முகம், டி.டி.வி.தினகரன், பாரிவேந்தர், திருமாறன் மற்றும் பல சமுதாய அமைப்புகளுடன் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கின்ற தேர்தலாக அமைய உள்ளது. அதற்கான முதல் பொதுக்கூட்டம் தான் இது.
ராமதாஸ் உங்களை மன்னிப்பு கோரவேண்டும் என தெரிவித்துள்ளாரே
தனிநபர் தாக்குதலில் யாருடைய மனதும் புண்படக்கூடாது என்பது என் எண்ணம்.
விஜய் குறித்த கேள்விக்கு !
விஜய்க்கு ஏதாவது கொள்கை இருக்கிறதா? இதெல்லாம் பாஜகவுடன் முரண்படுகிறோம் என எங்கேயாவது சொல்லியிருக்கிறாரா?. கொள்கை என வெறும் பேப்பரில் மட்டும் எழுதி வைத்திருக்கிறார்கள். 41 பேர் இறந்து போனார்கள் அதற்கு தமிழக அரசும், விஜயும் காரணம். சேலத்தில் இப்போது ஒருவர் இறந்தார் அது அவருக்கு நல்ல சகுனம் தானே.
NDA கூட்டணி குறித்த திருமாவளவன் விமர்சனம் குறித்த கேள்விக்கு
திமுக எம்.எல்.ஏ., கோ.தளபதி பேசியதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என மாணிக்கம் தாகூர் தினமும் பேட்டி கொடுக்கிறார். நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி காங்கிரஸ் நிர்வாகிகளை சந்திக்கிறார். அப்போது யாருடைய கூட்டணி பலவீனமாக உள்ளது. காங்கிரஸ் கட்சி தி.மு.க.,வுடன் கூட்டணியில் இருக்குமா? இருக்காதா? என்பதே சந்தேகம் தான்.
தி.மு.க., வாக்குறுதிகளை தவிர மற்ற எதுவுமே நிறைவேற்றவில்லை.
சட்டமன்ற தேர்தல் தமிழ்நாட்டில் நடக்கிறது. இதில் யார் நன்றாக ஆட்சி செய்தார் என்றுதான் பார்க்க வேண்டும். ஈபிஎஸ் அல்லது மு.க.ஸ்டாலின் நன்றாக ஆட்சி செய்தாரா என்பதை தான் பார்க்க வேண்டும். திமுக 525 தேர்தல் அறிக்கைகளை கொடுத்தது 90 தேர்தல் வாக்குறுதிகளை தவிர மற்ற எதுவுமே நிறைவேற்றவில்லை. எதிலுமே முற்று பெறாத ஆட்சி இது. நாட்டில் சட்டம் ஒழுங்கு முக்கியம் ஆனால் இவர்களால் ஒரு டிஜிபியை கூட நியமனம் செய்ய முடியவில்லை. பள்ளிகூடத்தில் கஞ்சா விற்கிற நிலைமைதான் உள்ளது.
திமுக காப்பி
எடப்பாடி பழனிசாமி 2000 ரூபாய் அறிவித்தார், அதை காப்பியடித்து தி.மு.க., 5000 ரூபாய் கொடுத்திருக்கிறார்கள். 5 வருடம் கோடைக்காலம் வந்தது அப்போதெல்லாம் கொடுக்கவில்லை. மகளிருக்கு 1000 ரூபாயே பாராளுமன்ற தேர்தலின் போது தான் கொடுத்தார்கள். அதே போல பொங்கல் பரிசு தொகுப்பு 3000 ரூபாய் இந்த வருடம் தான் கொடுத்திருக்கிறார். இதெல்லாம் தேர்தலுக்கானது இவர்களுடைய ஆட்சி தேர்தலுக்கான ஆட்சி” என்றும் தெரிவித்தார்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement























