மேலும் அறிய

வயிற்றில் உள்ள பிள்ளையை வெட்டி எடுத்தது போல அண்ணாமலை மாற்றினார்கள் - பாஜக முன்னாள் நிர்வாகிகள் ஆவேசம் !

2026 ல் தமிழக பாஜக எதற்காக எடப்பாடி பழனிச்சாமியிடம் மண்டியிட்டார்கள் என தெரியவில்லை. நயினார் நாகேந்திரன் எடப்பாடி பழனிச்சாமியின் மறுபக்கமாக செயல்பட்டார்.

பாஜகவினர் அழைத்தால் நயினார் நாகேந்திரன் போனை எடுப்பதில்லை, இப்போது கூட நயினார் நாகேந்திரனுக்கு போன் அடியுங்கள் போனை எடுத்தால் 1 இலட்சம் பரிசு தருகிறேன்.

We The Leaders Foundation

தமிழக பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தொடங்கிய "We The Leaders Foundation" - ல் இணைந்த பாஜக முன்னாள் நிர்வாகிகள் மதுரையில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினார்கள். பாஜக முன்னாள் நிர்வாகி மகா.சுசீந்திரன் கூறுகையில் "2026-க்குள் வி தி லீடர்ஸ் அமைப்பில் 1 கோடி பேர் அமைப்பில் இணைய வாய்ப்புள்ளது. விரைவில் இவ்வமைப்பு அரசியல் இயக்கமாக மாற்றி தேர்தலை சந்திக்க உள்ளது. தமிழக பாஜக எடப்பாடி பழனிச்சாமி பாஜகவாக மாறி விட்டது. இதன் காரணமாக நாங்கள் பாஜகவில் இருந்து வெளியேறிநோம். அண்ணாமலை வளர்த்த பாஜகவை வயிற்றில் உள்ள பிள்ளையை வெட்டி எடுத்தது போல அண்ணாமலை மாற்றினார்கள். 2026 ல் தமிழக பாஜக எதற்காக எடப்பாடி பழனிச்சாமியிடம் மண்டியிட்டார்கள் என தெரியவில்லை. நயினார் நாகேந்திரன் எடப்பாடி பழனிச்சாமியின் மறுபக்கமாக செயல்பட்டார்.

அதிமுகவை இரண்டாக விஜய் உடைத்தார்.

பாஜகவினர் அழைத்தால் நயினார் நாகேந்திரன் போனை எடுப்பதில்லை, இப்போது கூட நயினார் நாகேந்திரனுக்கு போன் அடியுங்கள் போனை எடுத்தால் 1 இலட்சம் பரிசு தருகிறேன். வெற்றி பெற மாட்டோம் என தெரிந்தே பாஜக போட்டியிடும் இடங்களை பாஜக பெற்றது. அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் போட்டியிட்டவர்கள் மீண்டும் போட்டியிடவே தொகுதிகள் பெறப்பட்டது. 2 முறை மாநிலத் தலைவர் மற்றும் ஆளுநர் பதவிகள் வகித்த தமிழிசை ஏன் இளைஞர்களுக்கு வழிவிடவில்லை. தமிழக பாஜகவில் 7 மாநிலத் தலைவர்கள் கொடுக்க முடியாத வளர்ச்சியை அண்ணாமலை கொடுத்தார். தமிழக பாஜகவில் பதவி வகித்த முன்னாள் மாநிலத் தலைவர்கள் 4 சதவீத வாக்குகளுக்கு மேல் உயர்த்த முடியவில்லை. அண்ணாமலை காலகட்டத்தில் தான் பாஜகவின் வாக்கு சதவீதம் உயர்ந்தது. ஆர்.எஸ்.எஸின் மற்றொரு அமைப்பு வி தி லீடர்ஸ் அமைப்பு என சொன்னால் எங்களுக்கு பெருமை. ஏனெனில் எங்களை தீவிரவாதிகள் என கூறினால் தான் நாங்கள் வருத்தப்பட வேண்டும். முதலமைச்சர் விஜய் மாயையில் பூத்த காளான். திமுக, அதிமுகவுக்கு மாற்றாக கட்சி தொடங்கி உள்ளேன் என விஜய் கூறினார். ஆனால், ஆட்சியை தக்க வைக்க அதிமுகவை இரண்டாக விஜய் உடைத்தார்.

அண்ணாமலையை வெளியேற்றி விட்டு பாஜக என்ன சுகத்தை காண போகிறது

பாஜக வேட்பாளர் பட்டியலில் தயாரித்தது அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி. வேட்பாளர் தேர்வில் இந்தி தெரியாததால் தமிழக பாஜகவினர் ஏமாற்றப்பட்டனர். அதே நேரத்தில் தமிழ் தெரியாததால் மத்திய அமைச்சர் பியூஸ் ஏமாற்றப்பட்டார். வேட்பாளர் பட்டியலுக்கு ஒப்புதல் அளித்து நயினார் நாகேந்திரன், பியூஸ் கோயில் போன்ற அடிமைகள் கையொப்பமிட்டது" என கூறினார்.

பாஜகவில் 15 பேர் இருக்கிறார்கள்

பின்னர் தஞ்சாவூர் பாஜக முன்னாள் நிர்வாகி இளங்கோ பேசுகையில் "நயினார் நாகேந்திரன் எனும் தற்குறி மாநிலத் தலைவராக பொறுப்பு கொடுத்தால் பாஜக தோல்வி அடைந்தது. திராவிட சித்தாந்தம் கொண்ட நயினார் நாகேந்திரன் பாஜக மாநில தலைவராக நியமித்தது தான் பாஜகவின் தோல்விக்கு காரணம். பாஜகவில் 15 பேர் இருக்கிறார்கள், எந்தவொரு தேர்தல் வந்தாலும் அவர்கள் தான் வேட்பாளர்கள். உள்ளாட்சி தேர்தலில் அவர்கள் போட்டியிட மாட்டார்கள், ஏன் என்றால் அதில் கலெக்சன் கிடைக்காது. அண்ணாமலையை வெளியேற்றி விட்டு பாஜக என்ன சுகத்தை காண போகிறது என தெரியவில்லை" என தெரிவித்தார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

CM Vijay:
CM Vijay: "இந்த பக்கமே வரக்கூடாது.." கூட்டணி கட்சிகளை விரட்டிவிட்ட முதலமைச்சர் விஜய் - எதற்காக?
TVK: பழனி கோயில் விவகாரம்.. லாக்கப் மரணம்.. தவெக ஆட்சிக்கு அடுத்தடுத்து நெருக்கடி!
TVK: பழனி கோயில் விவகாரம்.. லாக்கப் மரணம்.. தவெக ஆட்சிக்கு அடுத்தடுத்து நெருக்கடி!
EPS Vs Manickam Tagore: கழுதை தேய்ந்து கட்டெறும்பானது காங்கிரஸா.? அதிமுக-வா.? EPS-ஐ கிழித்து தொங்கவிட்ட மாணிக்கம் தாகூர்
கழுதை தேய்ந்து கட்டெறும்பானது காங்கிரஸா.? அதிமுக-வா.? EPS-ஐ கிழித்து தொங்கவிட்ட மாணிக்கம் தாகூர்
EPS:
EPS: "விஜய்தான் களவாணி.." தவெக ஆட்சியை தாறுமாறாக விமர்சித்த இபிஎஸ்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "இந்த பக்கமே வரக்கூடாது.." கூட்டணி கட்சிகளை விரட்டிவிட்ட முதலமைச்சர் விஜய் - எதற்காக?
TVK: பழனி கோயில் விவகாரம்.. லாக்கப் மரணம்.. தவெக ஆட்சிக்கு அடுத்தடுத்து நெருக்கடி!
TVK: பழனி கோயில் விவகாரம்.. லாக்கப் மரணம்.. தவெக ஆட்சிக்கு அடுத்தடுத்து நெருக்கடி!
EPS Vs Manickam Tagore: கழுதை தேய்ந்து கட்டெறும்பானது காங்கிரஸா.? அதிமுக-வா.? EPS-ஐ கிழித்து தொங்கவிட்ட மாணிக்கம் தாகூர்
கழுதை தேய்ந்து கட்டெறும்பானது காங்கிரஸா.? அதிமுக-வா.? EPS-ஐ கிழித்து தொங்கவிட்ட மாணிக்கம் தாகூர்
Netanyahu Warns Iran: இந்தா வந்துட்டார்ல.! ஈரானுக்கு புதிய எச்சரிக்கையை விடுத்த நெதன்யாகு; என்ன சொல்லி இருக்கார்.?
இந்தா வந்துட்டார்ல.! ஈரானுக்கு புதிய எச்சரிக்கையை விடுத்த நெதன்யாகு; என்ன சொல்லி இருக்கார்.?
உசிலம்பட்டி சூதாட்ட கும்பல் கைது: 4.21 லட்சம் பறிமுதல், 7 பேருக்கு வலைவீச்சு!
உசிலம்பட்டி சூதாட்ட கும்பல் கைது: 4.21 லட்சம் பறிமுதல், 7 பேருக்கு வலைவீச்சு!
TVK vs ADMK:
TVK vs ADMK: "திமுக-வுடன் கூட்டுக்களவாணி ஆட்சி.. கொடநாடைப் பேசினால் நடுங்குபவர்.." இபிஎஸ்-ஐ விளாசிய தவெக!
Special Bus: வார லீவு.. ஊருக்கு போறீங்களா? ஸ்பெஷல் பஸ் ரெடியா இருக்குது! எங்கே இருந்து எவ்வளவு பேருந்துகள்?
Special Bus: வார லீவு.. ஊருக்கு போறீங்களா? ஸ்பெஷல் பஸ் ரெடியா இருக்குது! எங்கே இருந்து எவ்வளவு பேருந்துகள்?
MG Hybrid SUV India launch: No டென்ஷன்.! டேங்க்க ஃபில் பண்ணா 1,000 கிமீ போய்ட்டே இருக்கலாம்; புதிய ஹைப்ரிட் SUV-ஐ இறக்கும் MG
No டென்ஷன்.! டேங்க்க ஃபில் பண்ணா 1,000 கிமீ போய்ட்டே இருக்கலாம்; புதிய ஹைப்ரிட் SUV-ஐ இறக்கும் MG
Embed widget