மேலும் அறிய
மதுரையில் மோடி கலந்துகொள்ளும் கூட்டத்திற்கு பின்.. எடப்பாடியார் ஆட்சி தான் - செல்லூர் ராஜு Confident !
பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் கூட்டம் வரலாற்று சிறப்பு மிக்க கூட்டமாக அமையும். இந்த கூட்டத்திற்கு பின்பு எடப்பாடி தலைமையில் ஆட்சி அமையும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார்.

செல்லூர் ராஜு
Source : whatsapp
மதுரையில் பிரதமர் மோடி கலந்து கொள்ளும் கூட்டம் வரலாற்று சிறப்புமிக்க கூட்டம் இந்த கூட்டத்திற்கு பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் ஆட்சி அமையும்.
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் பேட்டி
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் 78வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரை கேகே நகர் பகுதியில் உள்ள எம்ஜிஆர் ஜெயலலிதா திருவுருவ சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்று அதிமுக ஆட்சி மலரும்
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்...,” மக்களால் நான் மக்களுக்காகவே நான், உங்களால் நான் உங்களுக்காகவே நான் வாழ்ந்தவர் ஜெயலலிதா. அதிமுக எனக்கு பின்னாலும் இன்னும் நூறாண்டு காலம் மக்களுக்காக சேவை செய்யும் என்று சொன்னவர். 2026 இல் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்று அதிமுக ஆட்சி மலரும். மார்ச் 1ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் கூட்டம் வரலாற்று சிறப்பு மிக்க கூட்டமாக அமையும். இந்த கூட்டத்திற்கு பின்பு எடப்பாடி தலைமையில் ஆட்சி அமையும் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement























