மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் 5 லட்சம் பேர் பங்கேற்றார்கள். மதுரையில் பிப்ரவரி 28ஆம் தேதி பிரதமர் மோடி கலந்துகொள்ளும் இந்த கூட்டத்தில் 10 லட்சம் பேர் கூடுவார்கள். - நயினார் நாகேந்திரன் மதுரையில் பேட்டி.

Continues below advertisement

மதுரையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பு.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மதுரை மண்டேலா நகர் பகுதியில் நடைபெற உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் பிப்ரவரி 28ஆம் தேதி கலந்து கொள்ள உள்ளார். நிலையில் மாநாடு நடைபெறும் மண்டேலாநகர் பகுதியில் உள்ள திடலை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆய்வு செய்தார். இந்த நிகழ்வில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், எம்எல்ஏ ராஜன் செல்லப்பா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Continues below advertisement

கஞ்சா நிறைந்த தமிழ்நாடு

இந்த நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசுகையில்..," கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்கிறார் முதலமைச்சர். ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் கஞ்சா நிறைந்த தமிழ்நாடாக மாறியுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் பிரச்சார பொதுக்கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் பிப்ரவரி 28 அன்று மதுரை மண்டேலா நகரில் நடைபெறவுள்ளது. மதுராந்தகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் 5 லட்சம் பேர் கலந்து கொண்டார்கள். மதுரையில் 10 லட்சம் பேர் மேலே கூட்டம் கூடுவார்கள். 525 தேர்தல் அறிக்கையில் 70 கூட நிறைவேற்றாத திமுக அரசு. எய்ம்ஸ் விவகாரத்தில் ஒரு கல்லை தூக்கி காட்டிக் கொண்டிருந்தார் உதயநிதி. இப்போது அதை நினைவு படுத்தும் விதமாக எய்ம்ஸ் அடிக்கல் நாட்டப்பட்ட அதே இடத்தில் கூட்டம் நடைபெறுகிறது.

திருப்பரங்குன்றத்தில் மோடி சாமி தரிசனம்

எய்ம்ஸ் திறப்பது குறித்து பின்னர் அறிவிப்போம். திமுக - காங்கிரசு கூட்டணி சரியாக இருக்கிறது என்றால் கனிமொழி எதற்காக ராகுலை சந்தித்து பேசினார். மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு எதுவும் இல்லை என்கிறார்கள். அது முழு இந்தியாவுக்கான பட்ஜெட். தமிழக பட்ஜெட்டில் ஊர் வாரியாக தனித்தனியாக நிதி ஒதுக்குவார்களா என்ன? கஞ்சாவில் ஓடுகிற இன்ஜின் தான் தமிழ்நாடு அரசு. பாராளுமன்றத்தில் ராகுல் காந்தி ஒரு பபூன். காங்கிரஸ் கட்சி தனியாக நிற்க தயாரா? விஜயுடன் கூட்டணிக்கு வைக்க எவ்வளவோ முயன்றார்கள். அது முடியாமல் போனதால் இப்போது விமர்சிக்கிறார்கள். எங்கள் கூட்டணி பொருந்தும் கூட்டணி. அவர்கள் கூட்டணி பொருந்தா கூட்டணி. மதுரை வரும் பிரதமர் திருப்பரங்குன்றம் கோவிலுக்கு செல்வார் என நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களும் தெரிவித்தார்.