அமைச்சரவையில் இருந்து ஆதவ் அர்ஜூனாவை நீக்குங்க.! கிருஷ்ணசாமி அதிரடி- என்ன காரணம்.?
அமைச்சரவையில் இரண்டாவது இடத்தில் இருக்க கூடிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மனைவி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் ஆதவ் அர்ஜுனா அமைச்சரவையில் இருப்பது சரியா?? கட்சியில் வைத்திருந்து சரியா?? என கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

போதைப்பொருட்கள் கடத்தல் - கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு
கோவை குனியமுத்தூர் புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் துணைவியார், மற்றும் மாமியார் சம்பந்தபட்ட சர்ச்சையான போதை பொருள் கடத்தல் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில், அமலாக்கத்துறை விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜான் பிரிட்டோ பல ஆண்டுகளாக போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்தது, பல ஆயிரம் கோடி பரிவர்த்தனை நடந்து வந்துள்ளது தெரியவந்துள்ளது.
அமைச்சரின் உறவினருக்கு தொடர்பு
ஜான் பிரிட்டோ, ஜான் கென்னடி போன்றவர்கள் மீதும், லீமா ரோஸ் மார்ட்டின், ஆதவ் அர்ஜுனா துணைவியார் மீது கேரளாவில் வழக்கு பதிவு செய்யப்படு உள்ளது. வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க உச்ச நீதிமன்றம் உத்தரவுகள் பிறப்பித்து உள்ளது. ஜான் பிரிட்டோ கோவை சேர்ந்தவர் தான். ஜான் கென்னடி கோவை சேர்ந்தவர் தான். முதல்வர் விஜய் ஊழல் இல்லா ஆட்சி, போதை பொருள் இல்லா ஆட்சி என்ற வாக்குறுதி கொடுத்துள்ளார். ஆனால் விஜயின் அமைச்சரவையில் உள்ள அமைச்சரின் மனைவி மற்றும் உறவினர்கள் சர்வதேச போதை பொருள் குற்றச்சாட்டில் ஈடுபட்டு உள்ளனர்.
அமைச்சரவையில் இருந்து ஆதவை நீக்குங்க
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படாது தூய ஆட்சி வேண்டும் என்பதற்காகத்தான். இந்த நிலையில், தலைமை செயலகத்தில் இரண்டாவது இடத்தில் இருக்க கூடிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மனைவி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் ஆதவ் அர்ஜுனா அமைச்சரவையில் இருப்பது சரியா?? இவ்வளவு பெரிய குற்றச்சாட்டு இருந்தும் கட்சியில் வைத்திருந்து சரியா?? என கேள்வி எழுந்துள்ளதாக கிருஷ்ணசாமி கூறினார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் நிரபராதி என நிரூபிக்கும் வரை கட்சியில் இருந்து விஜய் விலக்கி வைக்க வேண்டும்.எனவே இந்த விஷயத்தில் விஜய் மௌனமாக இருக்க கூடாது என கிருஷ்ணசாமி கேட்டுக்கொண்டார்.
ஆதவ் அர்ஜூனாவிற்கு பணம் வந்தது எப்படி.?
தொடர்ந்து பேசிய அவர், கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு கொடுத்த பணம் யாருடையது என கேள்வி எழுப்பியவர், ஆதவ் அர்ஜுனா பணம் என்றால் ? வேலை இல்லாத ஆதவ் அர்ஜுனாவிற்கு வந்த பணம் யாருடையது? என கேள்வி எழுப்பினார். போதை பொருட்களில் கிடைத்த பணம் வந்துள்ளதா? என கூறிய கிருஷ்ணசாமி, தமிழ்நாட்டில் நடப்பதை மத்திய அரசு பார்வையாளராக இருக்க கூடாது. ஆளுநர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிருஷ்ணசாமி கேட்டுக்கொண்டார்.
Before You Go
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
ட்ரெண்டிங் செய்திகள்






















