விழுப்புரம்: திராவிடம், ஆரியம் குறித்து தெரிந்து கொள்ளாமல் எப்படி ஒரு கட்சியின் பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி உள்ளார் என்றும் இது குறித்து தெரியாது என கூறுவது வெட்க கேடாக உள்ளதாகவும் அதனை கண்டிப்பதாகவும், ஆரியம் திராவிடம் குறித்து தெரிந்து கொள்ள ஆரம்பப்பள்ளி பாட புத்தகத்தினை படித்தாலே போதும் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.


கையெழுத்து இயக்கம்:


நீட் தேர்வினை ரத்து செய்யக்கோரி திமுக சார்பில் பல்வேறு இடங்களில் பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கி பணி தொடங்கி தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக நீட் தேர்வித்தினை ரத்து செய்யக்கோரி விழுப்புரம் நகர பகுதியான சேவியர் காலனியிலுள்ள பிரான்சிஸ் சவேரியர் ஆலத்தில் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தொடங்கி வைத்து அனைவரும் ஒத்துழைப்பு அளித்து ஆதரவு அளிக்க வேண்டுமென கூறினார்.


அதனை தொடர்ந்து பேட்டியளித்த  அமைச்சர் பொன்முடி  நீட் தேர்வினை ரத்து செய்ய பல்வேறு நடவடிக்கையை முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்து வருவதாகவும், குடியரசுத்தலைவர் சென்னை வந்தபோதும் நீட் தேர்வினை ரத்து செய்ய கோரி கடிதம் கொடுத்துள்ளதாகவும், நீட் தேர்வினை ரத்து செய்ய வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டு 50 லட்சம் பேரிடம் வாங்கவேண்டுமென திமுக செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.


எடப்பாடிக்கு தெரியவில்லையே:


நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் காங்கிரஸ் ஆட்சி பொறுப்பேற்றவுடன் நீட் விலக்கு கொண்டு வரப்படும் எனவும் நீட் தேர்வினை ரத்து செய்ய முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்  உதயநிதியின் முயற்சி வெற்றி பெறுவார்கள் என தெரிவித்தார்.


ஆரியம் ,திராவிடம் குறித்து எனக்கு தெரியாது  ஆராய்ச்சியாளர்களை தான் கேட்க வேண்டுமென முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்த செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் பொன்முடி ஆரியம் குறித்து பள்ளி மாணவர்களுக்கே தெரியும் ஆரியத்தால் பாதிக்கப்பட்டு திராவிட உணர்வோடு பள்ளியிலேயே மாணவர்கள் படித்து கொண்டு இருக்கின்றனர். ஆரியம், திராவிடம் குறித்து எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரியவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளதாகவும்,  அவர்களோடைய கட்சி பெயரே அண்ணா திராவிட முன்னேற்ற கழகமாக உள்ளபோது அவருக்கு அண்ணாவையும் திராவிடத்தையும் தெரியலைனு, என்று அவர் கூறுவதிலையே தெரிகிறது.


எப்படி அ.தி.மு.க.விற்கு வந்தார்?


திராவிடம் குறித்து தெரிந்து கொள்ள ஆராய்ச்சி செய்ய வேண்டிய அவசியமில்லை. இது குறித்து ஆறாவது, ஏழாம் வகுப்பு பாடபுத்தகத்திலேயே இருக்கிறது. திராவிடம் குறித்து தெரிந்து கொள்ளாமல் எப்படி ஒரு கட்சியின் பொது செயலாளராக உள்ளார். இது குறித்து தெரியாது என கூறுவது வெட்க கேடாக உள்ளதாகவும், அதனை கண்டிப்பதாக கூறினார். ஆரியம் திராவிடம் குறித்து தெரிந்து கொள்ள ஆரம்ப பள்ளி பாட புத்தகத்தினை படித்தாலே போதும். அவர் என்ன படித்தார்? எப்படி இந்த அதிமுகவிற்கு வந்தார் என்பதே தெரியவில்லை என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.