DMK Alliance plan : இனி கூட்டணியே வேண்டாம்.. தனித்தே போட்டியிடலாம் திமுக நிர்வாகிகள் எடுத்த முடிவு.! காரணம் என்ன.?
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தோல்வியை தழுவி ஆட்சியை இழந்துள்ள நிலையில், தோல்விக்கான காரணம் தொடர்பாக தமிழகம் முழுவதும் ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டது. இனி கூட்டணி இல்லாமல் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என கட்சி நிர்வாகிகள் அந்த குழுவிடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தலில் தோல்வியை தழுவிய திமுக
தமிழக சட்டமன்ற தேர்தலின் போது 200 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் திராவிட மாடல் 2.o ஆட்சி அமைக்கப்படும் என திமுக தெரிவித்து வந்தது. ஆனால் யாரும் திடீர் திருப்பமாக ஆளுங்கட்சியாக இருந்த திமுக வீழ்த்தப்பட்டு நடிகர் விஜய் தலைமையிலான தவெக வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் திமுகவின் தோல்விக்கு காரணம் என்ன.? என திமுக சார்பாக விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டது. இந்த குழு தமிழகம் முழுவதும் திமுகவினரை நேரில் சந்தித்து ஆய்வு நடத்தியது. அந்த வகையில் தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள், தோல்வி அடைந்த வேட்பாளர், மாவட்ட நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனையில் உட்கட்சி விவகாரம் தொடர்பாக பல்வேறு புகார்களை கட்சி நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர்.
தோல்விக்கான காரணம் என்ன.?
அந்த வகையில் கூட்டணி கட்சியினரின் ஒத்துழைப்பு தேர்தல் நேரத்தில் உரிய முறையில் இல்லை என்றும் கூட்டணி இல்லாமல் போட்டிட வேண்டும் என்பதையே பெரும்பான்மையான நிர்வாகிகள் திமுகவின் கள ஆய்வில் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதே போல மாவட்ட செயலாளர்கள், பொறுப்பு அமைச்சர்கள் பலர் மீதும் நிர்வாகிகள் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் திமுகவினரிடம் கள ஆய்வை முடித்துள்ள நிலையில், இதனை அறிக்கையாக தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த அறிக்கையை வரும் 10 ஆம் தேதி திமுக தலைவர் ஸ்டாலினிடம் நேரில் வழங்க இருக்கின்றனர். கள ஆய்வின் போது குழுவினரிடம் தொண்டர்கள் பல்வேறு தகவல்கள் தெரிவித்து இருக்கின்றனர்.
தனித்து போட்டியிட வேண்டும்
குழுவினரிடம் தனித்தனியாகவும் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். கள ஆய்வின் போது தொகுதி நிர்வாகிகள் பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளனர். அதில் இனி வரும் காலத்தில் தனித்து போட்டியிட வேண்டும். தேர்தல் நேரத்தில் உட் கட்சி பிரச்சனை சரி செய்யவில்லை. கூட்டணி கட்சியினரின் தேர்தல் பணிகள் பெரும் சுனக்கம் இருந்ததாகவும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த அறிக்கையின் அடிப்படையில் கட்சியின் கட்டமைப்பில் மாற்றம் செய்ய திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அந்த வகையில பெரும்பாலான மாவட்ட செயலாளர்களுக்கு கீழ் 4 முதல் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளதை குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது திமுக மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திமுக தலைமை திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அண்ணா அறிவாலய வட்டார தகவலாக உள்ளது.
Before You Go
Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
ட்ரெண்டிங் செய்திகள்






















