பலம் வாய்ந்த கூட்டணியாக திமுக

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் விரைவுப்படுத்தி வருகிறது. ஒவ்வொரு கட்சியும் தங்கள் கூட்டணியை பலப்படுத்த திட்டம் தீட்டி வருகிறது. ஆளுங்கட்சியான திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தலைகள், கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கட்சிகள் இணைந்துள்ளது. எனவே இந்த கூட்டணியை வீழ்த்த எதிர்கட்சியாக உள்ள அதிமுகவும் பலமாக கூட்டணியை அமைக்க காய்நகர்த்தி வருகிறது. தற்போது போது பாஜகவை மட்டும் தங்கள் கூட்டணியில் இணைந்துள்ளது. தேமுதிக மற்றும் பாமகவிடம் பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. 

Continues below advertisement

அதிமுகவின் கூட்டணி திட்டம்.?

ஆனால் தேமுதிக மூத்த நிர்வாகிகள் திமுகவுடன் கூட்டணி வைக்கலாம் என்ற தங்களது ஆலோசனையை கட்சி மேலிடத்தில் தெரிவித்து வருகிறார்கள். இதற்கு ஏற்றார் போல அமைச்சர் சேகர்பாபு தேமுதிகவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். பாமகவில் தற்போது ராமதாஸ் அணி, அன்புமணி அணி என இரண்டு பிரிவாக பிரிந்துள்ளது. இதில் ராமதாஸ் அணி திமுகவுடன் கூட்டணி வைக்க ரகசிய பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. எனவே அதிமுக - பாஜக கூட்டணியை பலம் வாய்ந்த கூட்டணியாக உருவாக்க வாய்ப்பு கொடுக்க கூடாது என திமுக மெகா பிளான் போட்டு செயல்பட்டு வருகிறது. இதற்கு ஏற்றார் போல தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவிடம் ராஜ்யசபா சீட் மற்றும் 8 தொகுதிகள் வரை தேமுதிகவிற்கு தர பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. எனவே வரும் ஜனவரி மாதத்தில் தமிழக அரசியலில் பல்வேறு திருப்பங்கள் ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது. 

அதிமுகவை ஒருங்கிணைக்க திட்டம் போடும் பாஜக

இதே போல அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, எப்படியாவது இந்த முறை திமுகவை வீழ்த்த வேண்டும் களத்தில் இறங்கியுள்ளது. எனவே வாக்குகள் சிதறாமல் கிடைக்க ஒன்றுப்பட்ட அதிமுகவை உருவாக்க முயற்சித்து வருகிறது.எனவே பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரனை மீண்டும் இணைக்க திட்டமிட்டு வருகிறது. ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவில் இணைக்க வாய்ப்பே இல்லையென கதவை மூடிவிட்டார். எனவே கூட்டணியிலாவது இணைக்கலாமா என பாஜக திட்டமிட்டு வருகிறது. அந்த வகையில் டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த பேச்சுவார்த்தையை, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சார்பில் அண்ணமாலை மேற்கொண்டு வருகிறார். 

Continues below advertisement

கை கோர்க்கும்-அண்ணாமலை, நயினார்

நயினாருக்கு எதிராக கருத்து தெரிவித்து கூட்டணியில் இருந்து வெளியேறிய ஓபிஎஸ் மற்றும் டிடிவியை அண்ணாமலை சமாதானம் செய்து வருகிறார். இந்த நிலையில் தான் பாஜகவின் உயர்மட்ட குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் பாஜக மூத்த தலைவர்கள் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை பங்கேற்கவுள்ளனர். குறிப்பாக பாஜக கட்சி நிகழ்வுகளில் பெரிய அளவில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி இருந்து வரும் அண்ணாமலையும் இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளார். எனவே இன்றைய கூட்டத்தில் திமுகவை வீழ்த்த முக்கிய திட்டம் வகுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.